Author: rasindhan
சீனாவின் சோசலிசமும், அமெரிக்க ஏகாதிபத்தியமும் !
சோசலிச சமூக அமைப்பு முதலாளித்துவத்தை விடவும் மேம்பட்ட ஒன்று என்பதை அமெரிக்கா நன்கு அறியும். எனவே, கடந்த காலத்தில் சோவியத் ஒன்றியம் தகர்ந்ததைப் போலவே, சீனாவின் வலிமையையும் என்ன விலை கொடுத்தாவது தடுக்க வேண்டும் என அமெரிக்கா நினைக்கிறது. அமெரிக்க மேலாதிக்கத்தை மையப்படுத்திய உலகமாகவே (ஒரு துருவ உலகமாகவே) நிலைமை தொடர வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம். அதனால் அவர்களுக்கு அதீத லாபங்கள் கிடைக்கின்றன.
இந்துத்துவா: உருவாக்கம், திட்டம், பரவல் …
இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் தொடங்கி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சமீபகால செயல்பாடுகள் வரையிலும் பின்தொடர்ந்து அதன் உள்அம்சங்களை இந்தநூல் விவரிக்கிறது. இந்த விமர்சன கட்டுரை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தம் உருப்பெற்றதிலிருந்து, அதன் மோசடியான உத்திகளின் வழியாக அதிகாரத்தை சுவைக்க வழிவகுத்த ‘ராமஜென்மபூமி’ இயக்கம் வரையிலான காலகட்டம் பற்றியது.
பணவீக்க எதிர்ப்பு கொள்கையும், நவ தாராளமயமும்!
அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் உயரும்போது, உலகம் முழுவதுமே வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் (அப்படி செய்யாவிட்டால், விளிம்பில் இருக்கும் நாடுகளில் உள்ள நிதி மூலதனமானது, மையத்தில் இருக்கும் அமெரிக்காவை நோக்கி திரும்பிவிடும். அதனால் விளிம்பு நாடுகளின் செலவாணியின் டாலருக்கு நிகரான மதிப்பு சரியும்). வேறு வார்த்தைகளில் சொன்னால், அமெரிக்காவில் நடக்கும் ஊக நடவடிக்கைகளை நேரடியாக எதிர்கொள்ளாமல், நிதி ‘தாரளமயமாக்கல்’ என்ற வழிமுறையால் எதிர்கொள்ளப்படுகிறது. அதன் காரணமாகவே உலகம் முழுவதும் மிகப்பெரும் வேலையின்மையை உருவாக்கப்படுகிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



