கம்யூனிஸ்ட்டுகளும் – கருத்துப் போராட்டமும்!
கம்யூனிஸ்ட் இயக்கமும் அதன் தலைமையிலான வெகுஜன இயக்கங்களும், ஆளும் வர்க்கம் கொடுக்கக் கூடிய பலதரப்பட்ட தாக்குதல்களையும், இன்னல்களையும் எதிர் கொண்டு முன்னேறிக் கொண்டு வருகிறது. மேலும், முன்னேறவே செய்யும் என்பதில் ஐயமில்லை. இந்த முன்னேற்றத்திற்கான, அடைந்த வெற்றிகளுக்கான பல்வேறு காரணங்களை இங்கு விளக்க தேவையில்லை. சுருங்கக் கூறின், இடைவிடாத முறையில் பரந்து கிடக்கும் மக்களைத் திரட்டுவது, அவர்களை ஸ்தாபன ரீதியாக ஒன்றுபடுத்தவது, அவர்களின் அரசியல் உணர்வை மேலும், மேலும் வளர்த்து ஒரு மகத்தான மக்கள் சக்தியை தொடர்ந்து திரட்டிக்கொண்டு இருப்பது தான் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வெற்றிகளுக்கு மூலகாரணம்.
இலங்கைப் பிரச்சனை – ஒரு பார்வை
இலங்கையில் எல்டிடிஈ-யினருக்கும், இலங்கை ராணுவத்திற்கும் ஆயுத மோதல் துவங்கி 20 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இரண்டு பக்கமும் பல்லாயிரம் உயிர்கள் பலிவாங்கப்பட்டு விட்டது. பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு பொருள் சேதம் நடந்துவிட்டது. இத்துடன் கடந்த சில ஆண்டுகளாக நார்வே தலைமையிலான சர்வ தேசக் குழுவின் முன்னிலையில் பேச்சு வார்த்தைகளும் நடந்துவிட்டது. எனினும் தீர்வு காணப்பட வில்லையே ஏன் என்ற கேள்வி எழத்தான் செய்யும்.
தமிழக விவசாய மறுமலர்ச்சி, தரிசு நிலத் திட்டம்!
இன்று ஏழை நிலமில்லா மக்களுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்த புதிய தமிழக அரசு கொள்கையளவில் முடிவெடுத்துள்ளது. இந்த முடிவினை அதன் தோழமைக் கட்சிகளும், தமிழக மக்களும் வரவேற்றுள்ளன. இத்திட்டம் சிறந்த, நெறிய முறையில் நிறைவேற்றப்படுமானால், தமிழகம் விவசாயத் துறையில் புத்தொளி பெறுவது திண்ணம்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
