விவசாய இயக்கமும் – மேற்கு வங்க இடது முன்னணியும்!
இடது முன்னணி அரசும், நிலச்சீர்திருத்தங்களைச் செயல்படுத்த வழிவகுத்த விவசாயிகள் இயக்கமும் ஒன்று மற்றொன்றோடு இணைந்து நிறைவு செய்பவை. விவசாயி மற்றும் நிலத்துக்கான இயக்கம் இடது முன்னணி அரசு உருவாக்கியது என்று சிலர் நம்புகிறார்கள். இது சரியல்ல. இடது முன்னணி மற்றும் ஜனநாயக சக்திகளின் வளர்ச்சி தான் இடது முன்னணி அரசு உருவாவவதற்கு வழி வகுத்தது. இடது – ஜனநாயக சக்திகளின் வளர்ச்சியும், விவசாயிகள் இயக்கத்தின் வளச்சியும், மனிதனின் கால்கள் இரண்டும் அவன் இயக்கத்திற்கு ஆக்கம் அளிப்பது போல், ஒன்று மற்றொன்றை தாங்கி நிற்கும் இயக்கங்களாகும்.
இரண்டு புதை குழிகள் நோம் சாம்ஸ்கியுடன் ஓர் உரையாடல்!
20ம் நூற்றாண்டின் செல்வாக்கு மிக்க சிந்தனையாளர் என்ற புகழ் சோம்கிக்கு உண்டு. 77 வயதான சோம்கி இந்தப் பாராட்டைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தெரிந்த, இறுகிப்போன விதிகளிலிருந்து, மாறுபட்ட கருத்துக்களை மக்கள் கேட்க விரும்புகிறார்கள். இத்தகைய புதுமையான கருத்துக்கள் ஊடகங்கள் மூலம் அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை – என்கிறார். சோம்கி சிறந்த மொழியியல் அறிஞர். பின்னர் அரசியல் சிந்தனையாளராய்ப் புகழ் பெற்றார். 1960 களின் துவக்கத்தில் தோன்றிய யுத்த எதிர்ப்பைக் குறித்த முன்னணிச் சிந்தனையாளர். ஏராளமான கட்டுரைகளையும், புத்தகங்களையும் எழுதியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் ஆறு புத்தகங்களை எழுதியுள்ளார். ந்யூ வீக் பத்திரிக்கையைச் சார்ந்த மைக்கேல் ஹேடிங் என்பவருடன் கீழ்க்கண்ட உரையாடலில் தற்போது நிலவும் பூகோள அரசியல் நிலையைப் பற்றித் தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
மார்க்சியம் குறித்த பின்நவீனத்துவர்களின் விமர்சனம்
பின்நவீனவாதிகள் ஒழுங்கின்மையை கொண்டாடுகிறார்கள்; கட்டுப்பாடு மற்றும் ஒழுங்கு என்பதெல்லாம் அதிகாரத்தின் ஆட்சியை பறைசாற்றுவது என்பது அவர்களது எண்ணம். ஒவ்வொரு முனையிலும் ஒழுங்கற்று நின்றுக் கொண்டு, ஒவ்வொரு முனையும் ஒரு அதிகார மையமோ என்ற சந்தேகத்தை சாதாரண மனிதனுக்கு கிளப்பும் வண்ணம், ஒழுங்குத் தன்மையை ஒரு செயல் ஒழுங்கோடு எதிர்பார்கள். கட்டுப்பாடுடன் இருக்கிறது என மார்க்சிய செல்நெறிக்கு எதிராய் குரல் எழுப்புவது என்றால், பின்நவீனதுவ வாதிகளுக்கு எப்போதுமே கொண்டாட்டம்தான். தங்கள் பிறவிக்கடன் நிறைவேறியது போல் பக்தி சிரத்துடன், அந்தக் காரியத்தைச் செய்கிறார்கள்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


