Tag: இந்தியா
தேவை புதியதொரு செயல் திட்டம் !
குறுகலான வரையறைகளுக்குள் இந்திய முதலாளித்துவம் வளர்ந்து வருவதன் விளைவாக, வர்க்க உருவாக்க நிகழ்வானது – வரலாற்று ரீதியாக நிலைத்து நிற்கும் சாதிப் பிரிவினைகள் நிறைந்த சமூகத்தின் வரையறைக்கு உட்பட்டுத் தான் அமைந்துள்ளது. இதுவெல்லாம் முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூக உறவுகளைச் செப்பனிட்டு மாற்றியமைக்கப்படுவதற்கு பதிலாக, அவற்றுடன் சமரசம் செய்து கொண்டே வளர்ந்திருக்கிறது.
தேவை நீதித்துறை சீர்திருத்தம்
உச்ச நீதிமன்றம் ஒரு குறிப்பான வழக்கில் வழங்கும் தீர்ப்பாக இருந்தாலும், அது பொதுவானதாகிவிடுகிறது. இதன் காரணமாக சில தனிப்பட்ட வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகள் – மக்கள் தங்கள் வரலாற்றில் போராடிப் பெற்ற ஜனநாயக உரிமைகளையே கேள்விக்கு உள்ளாக்குவதாக அமைந்திருக்கின்றன.
இந்திய – சீன எல்லைப் பிரச்சனை !
கடந்த சில பல வாரங்களாகவே இந்திய ஊடகங்கள் இந்தியா மீது சீனா படையெடுப்பு, எல்லையில் அத்துமீறல், இந்திய பகுதிகளை ஆக்கிரமிப்பு என பல தலைப்புகளில் செய்திகளை வெளியிட்டு வந்தன. தேசிய மாநில கட்சிகளின் அரசியல் தலைவர்களும் சீனாவுக்கு பதிலடி தர வேண்டும் என்று ஆக்ரோஷமாக அறிக்கை விட்டனர். ஆளுங் காங்கிரஸ் கட்சி, ஒரு பக்கம் எதிர்கட்சிகளை சமாளிக்க சீனாவுக்கு சவால் விடுவது போல் பேசிக்கொண்டே மறு பக்கத்தில் இப்பிரச்சனையை சுமூகமாக தீர்க்கவே முயற்சித்தது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


