Tag: கம்யூனிஸ்ட்
தோழர் ஹரிபட்….
சென்னை நகர வரலாறு பலவிதமாக எழுதப்படுகின்றன, ஆனால் சென்னை நகரை உருவாக்கும் பாட்டாளி வர்க்கத்தின் வரலாறு சரியாக சொல்லப்படாமலே உள்ளது. அப்படி எழுதப்படுமானால் தோழர் ஹரிபட்டின் வாழ்க்கை இடம் பெறும். ஹரிபட்டின் வாழ்க்கை ஒரு தனி மனிதனின் வாழ்க்கையல்ல. சென்னை நகர பாட்டாளி வர்க்க போராட்டத்தில் இரண்டற கலந்த வாழ்க்கையாகும்.
ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டின் தோற்றம் நமது அனுபவம்
கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் ஸ்தாபன கோட்பாடுகளில் முக்கியமானதாக ஜனநாயக மத்தியத்துவத்தைக் கொண்டிருக்கின்றன. சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் துவக்கம் ரஷ்ய சமூக ஜனநாயகத் தொழிலாளர் கட்சியாகும். இந்தக் கட்சியின் இரண்டாவது காங்கிரஸ் (மாநாடு) 1903 ஆம் ஆண்டு நடைபெற்றது.
கம்யூனிஸ்ட் அறிக்கை முகவுரைகளின் முக்கியத்துவம்
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை 1847 ஆம் ஆண்டு நவம்பரில் லண்டனில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கழகம் என்கிற ரகசியமாக செயல்பட வேண்டியிருந்த அமைப்பின் தத்துவார்த்த நடவடிக்கை வேலைத்திட்டமாக காரல் மார்க்ஸ், பிரடெரிக் எங்கெல்ஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. அறிக்கையின் மேன்மை, மகத்துவம், அமரத்துவம் ஆகியவைகளுக்கு அவ்வப்போது சந்தேகங்கள் எழுப்பப்படுவதும் அதன் மீது விவாதங்கள் நடப்பதும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. ஆனால், ஒவ்வொரு முறையும் விவாதங்களின் முடிவில் கம்யூனிஸ்ட் அறிக்கை தனது மேதாவிலாசத்தை உலகுக்கு உணர்த்தி தன்னுடைய தத்துவ மேலாண்மையை நிலைநிறுத்தியே வந்திருக்கிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


