Tag: கீழ் வெண்மணி
கீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம்
கீழத்தஞ்சையில் உக்கிரமாக நடந்துவந்த வர்க்கப் போராட்டத்தின் விளைவாக ஏகபோக நிலவுடமையாளர்கள் சீற்றமடைந்தார்கள். சாதி ஆதிக்கத்தையும், பொருளாதாரச் சுரண்டலையும் எதிர்த்து மக்கள் திரள்வதை, ஆளும் வர்க்கம் விரும்பவில்லை. கீழ்வெண்மணியின் படுகொலைகளுக்கு பிறகும் அவர்களால் வர்க்க இயக்கத்தை வீழ்த்த முடியவில்லை என்பது ஒருபக்கம் இருக்க. இப்படி தங்கள் அடக்குமுறைத் தாண்டவம் செய்திகளிலோ, சினிமா ஊடகத்திலோ பிற பகுதி மக்களுக்கு கடத்தப்படுவதை தடுக்கும் முயற்சிகளும் இருந்தன.
கீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சையில் நிலவிய சுரண்டல் முறை
தமிழ்நாட்டிலும் உணவுப் பஞ்சம் தலை விரித்தாடியது. சிவகாசிக்கு அருகில் உரத்திற்காக வயலில் போட்ட கடலைப் பிண்ணாக்கை பசி தாங்காது எடுத்து தின்ற மக்கள் பலர் காலரா நோய்க்கு பலியாகி மாண்டனர்.
இந்த சமுதாய அரசியல் சூழ்நிலையில்தான், இப்படி பெரும் வேலைகள் நிறைந்திருந்த சூழ்நிலையில்தான், கிராமத்து மக்களை அமைப்பு ரீதியாக ஒன்று திரட்ட, தமிழக விவசாயிகள் இயக்கம் முன்னுக்கு வர முற்பட்டது.
கீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சைக் களத்தில், உழைக்கும் வர்க்கத்தின் போராட்டம் !
இரா. சிந்தன் கீழ் வெண்மணியில் நிகழ்த்தப்பட்டபடுகொலைகள், தனித்த சம்பவம் அல்ல. அது கீழத் தஞ்சையில் (இப்போதைய நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில்) கூர்மையடைந்திருந்த வர்க்கப் போராட்டத்தின் வெளிப்பாடே. பிரிட்டிஷ் காலனியாதிக்க காலமாக இருந்தாலும், இந்திய விடுதலைக்கு பிறகான சூழலிலும், மாநிலத்தில் ஆட்சி மாறிய பின்னணியிலும், தொடரும் வர்க்கப் போராட்டத்தின் உக்கிரத்தை வெளிக்காட்டும் நிகழ்வுகளில் ஒன்றே கீழ்வெண்மணி தியாகம் ஆகும். பிரிட்டிஷ் ஆதிக்க காலம் : அப்போதைய தஞ்சாவூர் இந்திய அரிசி உற்பத்தியில் சுமார் 30 சதவீதத்தை கொடுத்து வந்தது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



