Tag: சிங்காரவேலர்
சிங்காரவேலர்: என்றும் ஜொலிக்கும் சிவப்பு நட்சத்திரம் !
“உலகம் முழுவதும் பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ள கம்யூனிஸ்ட் இயக்கம் என்ற மாபெரும் அனைத்துலக அமைப்பின் பிரதிநிதியாகவே உங்கள் முன் நிற்கிறேன். உலகத் தொழிலாளர்களுக்குக் கம்யூனிசம் அளிக்கும் மாபெரும் செய்தியை உங்களுக்கும் வழங்குவதற்காகவே நான் இங்கே வந்திருக்கிறேன்…” – சிங்காரவேலர்
சோவியத் புரட்சியும் தமிழகமும்
நவம்பர் புரட்சியும், சோவியத் இலக்கியங்களும், சோவியத் மக்களும் அரசும் சாதித்த சாதனைகள் தமிழக இலக்கியப் பரப்பில் பெரும் செல்வாக்கு செலுத்தின. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எழுதுகிறார்: ‘இரஷ்ய ஆட்சி பொதுமக்கள் ஆட்சி. பொதுவுடமை ஆட்சி. அதனைச் சர்வாதிகாரம் என்பது தவறு. இரஷ்யர்கள் கூட்டாக உழைக்கிறார்கள். உழைப்பின் பயனை அனுபவிக்கிறார்கள். தம்மைத் தாமே ஆண்டு கொள்கிறார்கள். அதற்கேற்ற சமூக அமைப்பை அமைத்து அதன் வழியிலே செல்கின்றார்கள். அங்கே இரப்பாரும் இல்லை. புரப்பாரும் இல்லை. ஆண்டியும் இல்லை.
சிங்காரவேலரும் இந்திய கம்யூனிசத்தின் தோற்றமும்
சிங்காரவேலர் ஒரு கம்யூனிஸ்டாக உருவாவதற்கு இரண்டாவது தீர்மானகரமான அம்சமாக விளங்கியது அவரது ஆழ்ந்த புலனறிவே ஆகும். ஆங்கிலம், தமிழ் மொழிகளைத் தவிர, இந்தி, உருது, பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளிலும் அவருக்குப் பட்டறிவு இருந்தது. இத்தகைய பன்மொழிப் புலமையானது அவரது கற்றலை விரிவுபடுத்தியதோடு, ஆழ்ந்த அறிவையும் ஏற்படுத்தித்தந்தது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


