Tag: டி.டி.கோசாம்பி
இந்திய மார்க்சிய ஆய்வின் முன்னோடி டி.டி. கோசாம்பி
அன்வர் உசேன் டி.டி.கோசாம்பி என அழைக்கப்படும் தாமோதர் தர்மானந்த் கோசாம்பியின் நினைவு தினம் ஜூன் மாதம் 29 ஆகும். 1907ஆம் ஆண்டு ஜூலை 31இல் பிறந்த அவர் 1966ஆம் ஆண்டு 60 வயதை நிறைவு செய்வதற்கு முன்பே இறந்தார். இந்திய வரலாற்றை மார்க்சிய அடிப்படையில் ஆய்வு செய்து முன்வைத்ததில் அவர் முன்னோடி எனில் மிகை அல்ல. இந்திய வரலாற்றை பொருள்முதல்வாத அடிப்படையில் கற்பதற்கு கோசாம்பியின் எழுத்துகள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன என தோழர் இ.எம்.எஸ். குறிப்பிடுகிறார்.
சாதியமைப்பு – ஒடுக்குமுறைகளுக்கு எதிராக கம்யூனிஸ்டுகள்!
இதுவரை உள்ள மனிதகுல வரலாறு முழுவதும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே (ஆதிகாலப் பொதுவுடைமைச் சமுதாயம் தவிர) என பிரகடனப்படுத்துகிறது மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் வெளியிட்ட கம்யூனிஸ்ட் அறிக்கை. இது இந்தியாவின் வரலாறு மற்றும் சமூக அமைப்புக்கும் பொருந்தும். உலகின் பல்வேறு நாடுகளின் சமூக அமைப்பும், வர்க்கப் போராட்டங்களும் ஒரே மாதிரியானதாக இல்லை. இந்த அம்சங்களில் ஒவ்வொரு நாட்டிற்கும் பிரத்யேகத்தன்மைகளும் பின்னணியும் உண்டு. இந்தியாவின் பிரத்யேகத் தன்மை: ஒவ்வொரு நாட்டின் பிரத்யேகத்தன்மையை சரிவர ஆய்வு செய்து புரிந்து கொண்டுதான் அந்நாடுகளின் நடைபெற
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

