Tag: மதச்சார்பின்மை
குடியரசின் பலன்களை ஒன்று திரட்டப் போராடுவோம்!
பூரண சுதந்திரம் என்ற குறிக்கோளை பல ஆண்டுகளாக ஏற்க மறுத்த காங்கிரஸ், கடைசியில் 1929 டிசம்பரில் நடந்த லாகூர் காங்கிரசில் அதை ஏற்று ஆண்டுதோறும் ஜனவரி 26 ஐ சுந்திர தினமாகக் கொண்டாடத் தீர்மானித்தது. ஆனால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத் தளைகளைத் துண்டித்தால் மட்டும் போதாது என்பதை மக்கள் உணர்ந்திருந்தனர். காலங்காலமாக இங்கு நீடித்து வரும் பசி, சுரண்டல் ஒடுக்குமுறைத் தளைகளிலிருந்து இந்திய மக்கள் விடுபடுவது தான் முக்கியமானது என்று அவர்கள் உணர்ந்திருந்தனர். இந்த விழிப்புணர்வு நாடெங்கிலும் எண்ணிலடங்கா வழிகளில் பிரதிபலித்தது.
குடியரசின் மாண்புகளைப் பாதுகாப்போம்! மக்கள் நலன்களை முன்னேற்றுவோம்!
1950ல் குடியரசு அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டது சுதந்திர இந்தியாவின் முக்கியமான சாதனையாகும், ஐம்பத்தியாறு ஆண்டுகளுக்கு முன், அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவை தனது குடிமக்களுக்கு ஜாதி, மத, இன, பால் பேதமின்றி சம உரிமை அளிக்கும் ஜனநாயகக் குடியரசாக அறிவித்தது. இப்போது நினைத்துப் பார்த்தால், வயது வந்தோருக்கான வாக்குரிமையுடன் கூடிய பாராளுமன்ற ஜனநாயக முறையை உருவாக்கிய அரசிய லமைப்புச் சட்டம் மிகப் பெரிய சாதனைதான் என்று தெரிகிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் சொல் அமைப்பிலும், செயல்படும் முறைகளிலும், பல தடைகளும் எல்லைகளும் கொண்டதாக இருந்தாலும் கூட, சாமானியனும் அரசியலில் ஈடுபட அது வழி வகுத்தது.
சிவில் சமூகம் என்றால் என்ன?
அரசியல் சாரா அமைப்புகள் பற்றிய மார்க்சிஸ்ட் கட்சியின் நிலையினை 18வது கட்சி காங்கிரஸ் அதன் அரசியல் – ஸ்தாபன அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த அமைப்புகளில் சில அணி திரட்டப்பட்ட இடதுசாரி இயக்கங்களிலிருந்து மக்களை திசை திருப்ப பயன்படுத்தப் படுகின்றன என அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

