Tag: மார்க்சியம்
‘சோசலிசம் உடனடித்தேவை’: பறைசாற்றும் காலநிலை மாற்றம் !
முதலாளித்துவம் ஏற்படுத்தும் உற்பத்திசக்திகளின் பிரம்மாண்டமான வளர்ச்சியானது சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும். ஆனால் அதன் அராஜக உற்பத்தியமைப்பு முறை மனிதர்களுக்கு சொல்லொண்ணாத் துயரத்தையும் கொண்டுவரும். அது மனிதர்களுக்கு கொண்டுவரும் துயரங்களிலிருந்து மானுடம் பாடம் கற்றுக்கொண்டு புதிய சமூக அமைப்பாக தன்னை தகவமைத்துக் கொள்ளும். அப்புதியவகை சமூக அமைப்பே சோசலிச சமூகம்.
மோடி அரசின் பாசிச போக்குகள்: டோக்ளியாட்டி தரும் வெளிச்சத்தில் ஒரு பார்வை
பாசிசமானது ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு வடிவம் எடுக்கும் . ஒரே நாட்டில் கூட அந்தந்த கால கட்டத்திற்கேற்ப அதன் நோக்கங்கள், அணுகுமுறைகள் மாறும். ஏகபோக முதலாளித்துவம் நெருக்கடியை எதிர்கொள்ளும் பொழுது, பூர்ஷ்வா சக்திகள் சில “முதலாளித்துவ ஜனநாயக” நெறிமுறைகளை கைவிட்டுவிட்டு பாசிசத்தின்பால் திரும்பும் என்பதை பல எடுத்துக்காட்டுகளுடன் டோக்ளியாட்டி விளக்குகிறார்.
மார்க்சிய பார்வையில் நகரமயமாதல் …
திக்கெந்தர் சிங் பன்வர் நகரமயமாக்கல் நடவடிக்கை குறித்து மார்க்சீய பார்வையில் எழுதுவது என்பது மிகவும் சுவாரசியமான ஒன்றாகும். இந்தியாவிலும், உலகம் முழுவதிலும் ஏற்பட்டு வரும் நகரமயமாக்கல் குறித்தும், அதன் பரிமாணங்கள் குறித்தும், இதில் தலையிடுவதற்கான நமது பணிகளைப் பற்றித் தெளிவுபடுத்தும் மார்க்சீய அடிப்படைக் கொள்கைகள் குறித்தும் புரிந்துகொள்வது முக்கியமாகும். முதலாளித்துவ உற்பத்தி நடைமுறை உபரியை உருவாக்குகிறது. இவ்வாறு உருவாக்கப்படும் உபரி பின்னர் கைப்பற்றப்பட்டு, அந்நடைமுறையில் மேலும் ஒருங்கிணைக்கப்படுகிறது. எந்தவொரு மார்க்சீயவாதியைப் பொறுத்தவரையிலும், இவ்வாறு கைப்பற்றப்பட்ட உபரி மீண்டும்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
