Tag: லெனினுக்கு பின்
லெனின் நினைவு நூற்றாண்டு : லெனினது வரலாற்றுப் பரிசோதனை
என். குணசேகரன் கடந்த நூறு ஆண்டுகளில் லெனின் பற்றி அடுக்கடுக்காக பல நூல்கள் இடைவிடாமல் வெளிவந்துள்ளன. அவற்றில் பல நூல்கள் லெனினின் சிந்தனைகள் மீது தாக்குதல் தொடுத்து எழுதப்பட்டவை. அவரை அவதூறு செய்தும், அவரது புரட்சிகர செயல்பாடுகளை இழித்தும், பழித்தும் எழுதப்பட்ட பல நூல்களும் வெளிவந்துள்ளன. அவரைப் பற்றிய நூல்கள் எப்படிப்பட்டதாக இருந்தாலும், ஒரு உண்மை மறைக்க முடியாதது. உலக சிந்தனைப் பரப்பில் லெனினது தாக்கம் நீடித்துக் கொண்டே இருக்கிறது என்பதே அந்த உண்மை. அவரைப் பற்றிய
மானுட எதிரி ஏகாதிபத்தியம்; வர்க்கப் புரட்சியே தீர்வு !
கடந்த 30 ஆண்டுகளாக அனைத்து நாடுகளும் முதலீட்டை ஊக்குவிப்பதற்கான கொள்கை முடிவுகளை எடுத்துள்ளன. அன்னிய நேரடி முதலீட்டுக்கான கட்டுப்பாடுகளை அவை தளர்த்தி உள்ளன. இந்திய நாட்டில் 1990-களில் கொண்டுவரப்பட்ட நவீன தாராளமயம் இதற்கோர் எடுத்துக்காட்டு. பிரதமர் மோடி ஆட்சி காலத்தில் இன்றுவரை பொருளாதாரத்தை அந்நிய பன்னாட்டு கம்பெனிகளுக்கு திறந்து விடுகிற கொள்கைகள் வேகமாக பின்பற்றப்பட்டு வருகின்றன. சமீபத்திய பணமயமாக்கல் கொள்கை, பொதுத்துறை நிறுவனங்களை உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் நடவடிக்கை ஆகியவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
