Tag: வேலை நிறுத்தம்
சமகால பொது வேலைநிறுத்தத்தின் புதிய அரசியலைப் புரிந்துகொள்ளுதல்
முதலாளித்துவ விமர்சகர்களும், அதன் ஊதுகுழல்களாக இருப்பவர்களும், எப்போதும் பொது வேலைநிறுத்தங்களின் செயல்திறன் குறித்த சந்தேகங்களை பரப்புவதன் மூலம், அதன் பார்வையை நீர்த்துப்போகச் செய்ய முயன்றுள்ளனர்; அவர்களில் பாதி பேர் அதன் வெற்றி குறித்து கேள்விகளை எழுப்புகையில், மீதமுள்ளவர்கள், அதனால் “பாதிக்கப்பட்ட” ஏழை மக்களின் பொருளாதாரம், வாழ்வாதார இழப்பு ஆகியவை குறித்து புலம்புகின்றனர். அவர்களின் பாசாங்குத்தனத்திற்கும் கோபத்திற்குமான ஒரே பதிலாக அமைவது, வர்க்க உணர்வின் உருவாக்கம், வளர்ச்சி மற்றும் வேலைநிறுத்த நடவடிக்கைகளின் மூலம் வர்க்கத்தின் பலத்தை வெளிப்படுத்துவதேயாகும்.
மே தினமும் – பொது வேலை நிறுத்தங்களும்
எஸ். கண்ணன் முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை, வேலை நாளின் நீட்டிப்பைக் கொண்டு, மனித உழைப்பு சக்தியின் வளர்ச்சிக்கும், செயல்பாட்டுக்கும் வேண்டிய இயல்பான, தார்மீக, பௌதீக நிலைமைகளைக் கூட, தொழிலாளர்களுக்கு கிடைக்காதபடி கொள்ளையிட்டு, அச்சக்தியை சீரழிய செய்வதுடன் வற்றிப் போகும்படியும் செய்கிறது. — காரல் மார்க்ஸ் வேலை நாள் குறித்த பகுதியில் எழுதியது. மார்க்ஸ் பிறந்த மே 5ம், ஒரு வேலை நாளில் தங்களின் உழைப்பு நேரத்தை 8 மணி நேரமாக வரையறை செய்ய வேண்டுமெனவும் நாளின்
தொழிலாளர்களின் வேலைநிறுத்தம்… அரசியல் போராட்டமே!!!
முதலாளித்துவ உற்பத்தி முறையில், சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களை, தொழிலாளி வர்க்கம் அந்தந்த வளர்ச்சிக்கு ஏற்ப நடத்தியுள்ளது. வேலை நேர குறைப்பு உள்ளிட்ட, பல உரிமைகளை வென்றிட உதவியது. 1838 – 1848 காலங்களில் அன்றைய பிரிட்டிஷ் ஆட்சி மற்றும் தொழிலாளர் மீதான வேலை நேரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து போராட்டங்கள் நடந்தன. பிரிட்டிஷ் அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வாக இது கருதப்படுகிறது. இந்த போராட்டங்கள், புரட்சிகர சக்திகளின் முன்னெடுப்பால் நடந்தது என அரசியல் ஆய்வாளர்கள் இன்றளவும் கூறுகின்றனர்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

