Category: சமூகம்
இந்தி சினிமாவும், பிரச்சார நெடியும்!
சுதன்வா தேஷ்பாண்டே (மார்க்சிஸ்ட் தமிழ் இதழ் ஆசிரியர் குழுவின் வேண்டுகோள் அடிப்படையில் எழுதி வழங்கப்பட்ட கட்டுரை – ஆசிரியர் குழு) பல பத்தாண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். விரக்தியுடனே இருந்தது. சுமார் ஒரு நூற்றாண்டு காலத்திற்கும் மேல், பெரும்பகுதி இந்திய மக்களின் உணர்வின் மொழியாக இருந்த இந்தி சினிமா – ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாக இல்லை. இந்தி சினிமா என்பது ‘பொது அறிவு’ அடிப்படையில் மதச்சார்பற்றதாக இருந்தது மட்டுமல்லாமல், அதன் மிகப்பெரிய நட்சத்திரங்களில் பலர் முஸ்லிம்களாகவும் இருந்தனர். திலீப் குமார்,
சாதிகளின் மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டு விகிதம் தீர்மானிப்பது சரியான அணுகுமுறையா?
இரா. சிந்தன் சாதிவாரி இடஒதுக்கீடு, வகுப்புவாரி இடஒதுக்கீடு ஆகிய வார்த்தைகள் கடந்த காலத்தில் பெரும்பாலும் ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தப்பட்டன. ஆனால், சாதிகளின் மக்கள்தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டு விகிதத்தை நிர்ணயிக்க வேண்டும் என்ற வாதங்கள் முன்வைக்கப்படுவதால், இந்த இரண்டுக்கும் இடையிலான வேறுபாட்டை முதலில் நுணுக்கமாக அணுகி தெளிவுபட வேண்டும். இந்தியச் சமூகத்தில் சாதி என்பது வெறும் கலாச்சார அடையாளம் அல்ல; சமூக, கல்வி, பொருளாதார, அரசியல் அதிகாரங்களைப் படிநிலையாக அமைத்துச் சுரண்டும் வரலாற்றுச் சமூக அமைப்பாக அது உள்ளது.
வரலாறு: ஜனநாயகத்தின் பணயக் கைதியாக, ‘33% மகளிர் இட ஒதுக்கீடு’ !
பெண்களுக்கான இட ஒதுக்கீட்டுப் பிரச்சனையில், மக்களிடையே நிலவும் பரவலான ஆதரவை, தங்களுடைய வகுப்புவாத அரசியல் நோக்கத்தை முன்னெடுப்பதற்கானதொரு கருவியாக பயன்படுத்திட மோடி அரசாங்கம் முயற்சிக்கிறது. பெண்களுக்கான இடஒதுக்கீடு மீண்டும் ஒருமுறை அரசியல் கணக்கீடுகளின் பணயப் பொருளாக மாற்றப்பட்டது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



