Category: அரசியல்
கொரோனா பெரும் தொற்று காலத்தில் மக்கள் மீது போர் தொடுக்கும் மோடி அரசு
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா இக்கட்டுரை எழுதும் நேரத்தில் கொரோனா தொற்று பாய்ச்சல் வேகத்தில் நாடு முழுதும் பரவிக்கொண்டிருக்கிறது. இன்றைய தேதியில் (ஜூன் 7, 2020) கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் பேருக்கு தொற்று பரவியுள்ளது என்றும் ஏறத்தாழ 7,000 பேர் இறந்துள்ளனர் என்றும் அரசின் தகவல்கள் கூறுகின்றன. எழுபது நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் இருந்தும் தொற்று கட்டுப்படவில்லை; சீறிப்பாய்கிறது. தொற்றை எதிர்கொண்டு மக்களை காப்பாற்றுவது என்ற சவாலில் மைய அரசு படுதோல்வி அடைந்துள்ளது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.
தோழர் கி. வரதராசன் – ஓர் பன்முகத் தலைவர்
ஆர். ஸ்ரீதர் உலகம் முழுவதும் கொரோனா தாக்கத்தில் பேரதிர்ச்சியை சந்தித்துவரும் நிலையில் நமக்கெல்லாம் மற்றுமொரு பேரதிர்ச்சியாய் வந்தந்த செய்தி. நம் அன்புத் தலைவர் கே. வரதராஜனின் மறைவுச் செய்தி கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும், இடதுசாரி அரசியலுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு. கே.வி. என்றழைக்கப்பட்ட தோழர் கே.வரதராஜன் திருச்சி மாவட்டம் பொதுவுடைமை இயக்கத்திற்கு அளித்த மகத்தான ஆளுமைகளின் வரிசையில் மற்றொரு அற்புதமானத் தலைவர். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து, பட்டய பொறியியல் படிப்பில் தேர்ச்சிபெற்று, நெல்லையில்
சுகாதார நெருக்கடிக்கு இடையே கல்வியின் நிலை
ஆயிஷே கோஷ் ஆராய்ச்சி மாணவி ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவர் சங்க தலைவர் மகாராஷ்டிரா மாநிலத்தில், லாத்தூர் நகரைச் சேர்ந்த மாணவன் பராஸ் மடிக்கர் தன்னைப் போன்ற 11வயது சிறுவர்களைப் போலவேதான் நடந்து கொண்டான். ஊரடங்கால் பள்ளி மூடப்பட்டு தனது நான்காம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டதால் மகிழ்ந்து போன அவன் மேலும் நீண்ட விடுமுறையை எதிர்நோக்கியிருந்தான். ஆனால் அது நடைபெறவில்லை. அவனுடைய அக்கா சுருதிக்கு 14 வயது. அவளும் அதே பள்ளியில் படித்து வருகிறாள். இவர்களுடைய
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
