Category: அரசியல்
மார்க்சியம் – புதிய சகாப்தம், புதிய சூழ்நிலை, புதிய தேவைகள்
(சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கமிட்டி வெளியிடும் கோய்ஷி என்ற பத்திரிக்கையின் குழுவில் உள்ள லிஜே எழுதிய இக்கட்டுரை ஆங்கில மார்க்சிஸ்ட் (2018 ஜனவரி – மார்ச்) இதழில் மறுபிரசுரமானது.) [வரலாற்றின் பல்வேறு கட்டங்களிலும் சரக்கு உற்பத்தி முறையில் தொடர்ந்து மாற்றங்கள் நேர்ந்து கொண்டிருப்பதை நாம் அறிவோம். உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி என்பது எல்லா சமூகங்களிலும் மானுட வரலாற்று வளர்ச்சியில் இயல்பானதும் தவிர்க்க இயலாததும் ஆகும். அவ்வாறு உற்பத்தி சக்திகளில் ஏற்படும் வளர்ச்சிக்கு ஏற்ப சந்தையும் மாறிவந்திருக்கிறது.
கொரோனா நோய் தொற்றும் முதலாளித்துவ “கொள்ளை“ நோயும்
எஸ். கண்ணன் கொரோனா நோய்த் தொற்று புலம் பெயர் தொழிலாளர்களை, அவர்களது பிறப்பிடம் நோக்கி விரட்டுகிறது. நடந்தே செல்வது உள்ளிட்டு அனைத்து வழிமுறைகளிலும் சொந்த ஊர்களை நோக்கிய பயணம் குவியல் குவியலாக அரங்கேறியது. முதலாளித்துவத்தை ஆதரிப்போரும் கூட இந்த பயணங்களை கண்டு பரிதாபப்பட்டார்கள். உணவு, தண்ணீர் தருவது என சிறு சிறு உதவிகளைச் செய்து தங்கள் உணர்வை வெளிப்படுத்தியுள்ளார்கள். தன்னார்வ குழுக்கள் ஒருபகுதியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மற்றும் அமைப்புகளும் பல்வேறு வகையில், அரசுகளை நிர்பந்தித்து, உணவு,
கொரோனா பெரும் தொற்று காலத்தில் மக்கள் மீது போர் தொடுக்கும் மோடி அரசு
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா இக்கட்டுரை எழுதும் நேரத்தில் கொரோனா தொற்று பாய்ச்சல் வேகத்தில் நாடு முழுதும் பரவிக்கொண்டிருக்கிறது. இன்றைய தேதியில் (ஜூன் 7, 2020) கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் பேருக்கு தொற்று பரவியுள்ளது என்றும் ஏறத்தாழ 7,000 பேர் இறந்துள்ளனர் என்றும் அரசின் தகவல்கள் கூறுகின்றன. எழுபது நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் இருந்தும் தொற்று கட்டுப்படவில்லை; சீறிப்பாய்கிறது. தொற்றை எதிர்கொண்டு மக்களை காப்பாற்றுவது என்ற சவாலில் மைய அரசு படுதோல்வி அடைந்துள்ளது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
