Category: இதழ் பெட்டகம்
சுற்றுப்புற சூழல் பாதுகாப்பில் மாற்று எரிபொருட்கள்
சுற்றுப்புறசூழல் பாதுகாப்பு குறித்து ஒரு புறம் பெரிய அளவில் பேசப்படுகிறது. மறுபுறம் நீரும், நிலமும், காற்றும் மாசுபட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. ஓசோன் மண்டலத்தில் ஓட்டை, அண்டார்டிகா வெப்பத்தால் உருகுகிறது, மாலத்தீவே காணாமல் போகும் அபாயம் உண்டு, பயிரிடக்கூடிய நிலங்கௌல்லாம் தன் ஜீவ சத்தை இழந்து மலட்டுத்தனமாக மாறுகின்றன என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. எதிர்காலத்தில் வரக்கூடிய பேராபாயத்தைச் சுட்டிக்காட்டும் நிகழ்கால நிகழ்ச்சிகளாக இவை உள்ளன. சுற்றுப்புற சூழலை பாதுகாப்பதற்கென்றே மத்திய மாநில அரசுகள் தனி இலாகாவையே
எழுச்சிமிகு உறுதியும் ஏற்றமிகு தீர்மானங்களும்
தலைநகர் டெல்லியிலே மார்க்சிஸ்ட் கட்சியின் 18-வது மாநாடு (ஏப்ரல் 6 முதல் 11 வரை) ஆறு நாட்கள் சிறப்பாக நடந்தேறியது. முந்திய 17-வது மாநாட்டு அரசியல் தீர்மானப்படி களப்பணியில் ஈடுபட்டு பெற்ற அனுபவங்களையும், கற்ற படிப்பினைகளையும், பல கட்ட மாநாடுகள் மூலம் திரட்டி இங்கே பிரதிநிதிகள் பகிர்ந்து கொண்டனர். அடுத்த மூன்று ஆண்டுகள் மீண்டும் சந்திக்கும் வரை மக்களிடையே அரசியல் பணி ஆற்றிட வழிகாட்டும் அரசியல் தீர்மானத்தை சீர்மிகு திருத்தங்களோடு ஏற்று எழுச்சிமிகு உறுதியோடு மாநாடு நிறைவடைந்தது.
பாசிசத்தை வீழ்த்திய 60 ஆம் ஆண்டு சோசலிசம்-செஞ்சேனை-சோவியத் மக்கள்
வரலாற்றில் சில அத்தியாயங்கள் மறக்கக் கூடாதவை. மனிதகுலம் புத்தெழுச்சி பெற்றிடவும், சரியான படிப்பினைகளை தனது அறிவுச் சொத்தாக்கி, பாதுகாக்கவும் வரலாற்றில் சில நிகழ்வுகளை மீண்டும் மீண்டும் நினைவுறுத்திக் கொள்ள வேண்டும். அத்தகு மகத்தானதோர் வரலாற்று நிகழ்வு பாசிசத்தின் வீழ்ச்சி. அந்த வீழ்ச்சியோடு முடிவுக்கு வந்த இரண்டாம் உலகப் போர். இந்தச் சாதனையை நிகழ்த்தி மனித இனத்தையே காப்பாற்றி வீரகாவியம் நிகழ்த்தியது, சோவியத் யூனியன். அந்நாட்டு ராணுவமான செஞ்சேனைக்கு உலகம் நன்றிக்கடன் பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போர் நிகழ்த்திய
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
