Category: இதழ் பெட்டகம்
அரசியல் மாற்றை நோக்கி!
2013 பிப்ரவரி மார்ச் மாதங்களில், மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மாற்றுக் கொள்கைகளை முன்வைத்த நாடு தழுவிய பிரச்சாரப் பயணம் நடைபெற்றது. ஜுலை 1-ல் டெல்லியில் கூடிய இடதுசாரி கட்சிகளின் சிறப்பு மாநாட்டில், மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து இடதுசாரிகள் கூட்டு இயக்கம் நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
இலங்கையும் – தேசிய இனப்பிரச்சனையும்!
“சமரசம் என்பது கெட்ட சொல் என்று கருதக் கூடாது” என்று “மாவீரன் பகத்சிங்” ஒருமுறை குறிப்பிட்டார். புலிகளுக்கும் அரசுக்கும் உருவான சமரசத் தீர்வுகள் ஒவ்வொரு முறையும் தட்டி விடப்பட்ட உண்மையை மறைக்க முடியாது. அதுவும் இன்றைய துயரத்திற்கு முக்கியமான காரணமாகும்.
இந்திய நாடும் விவசாயிகளும்!
அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநாடு இம்மாத இறுதியில் நான்கு நாட்கள்; நடைபெற உள்ளது. மாநாடு நடைபெறும் இந்த நான்கு நாட்களில் 188 இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வர், 2000-த்திற்கும் மேற்பட்டோர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவர் (ஏனெனில் காவல்துறையினரின் தகவல் படி 12 முறை தற்கொலைக்கு முயன்றால் தான் ஒரு முறை முயற்சி வெற்றி பெறுகிறது), 8000-த்திற்கும் அதிகமான விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறுவர் அல்லது விவசாயி என்ற அடையாளத்தை இழப்பர், பல விவசாயிகள் விவசாயக் கூலிகளாக மாறிடுவர்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
