Category: இதழ் பெட்டகம்
ஒரு எப்.பி.ஐ. ஆவணக் குறிப்பு
இடதுசாரி இயக்கங்கள் மீது எப்பொழுதெல்லாம் மக்களின் கவனம் திரும்புகிறதோ அப்பொழுதெல்லாம் ஏகாதிபத்திய வாதிகள் கம்யூனிசத்தை பூதமாக சித்தரிப்பதோடு நின்று விடாமல் இதன் மீது பார்வை செலுத்துவோரை குறிவைத்து வேட்டை ஆடத் தொடங்கி விடுவர். அதிலும் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் சோசலிசத்தின் மீது பற்றுக்கொண் டோரை அந்நிய ஏஜென்டுகள் என்று முத்திரை குத்தி தூக்கிலிடும் வழக்கம் கொண்டவர்கள். இரண்டாம் உலகப் போர் முடிந்த தருவாயில் சோவியத்தின் பாசிச எதிர்ப்பு, யுத்த எதிர்ப்பு, சர்வதேச பார்வை, ஆகியவைகள் உலக நாடுகளின் அறிவாளிகளை
அமெரிக்க கடன் தவணைகள் உலகம்பெறும் தொல்லைகள்
“அமெரிக்கா தும்மியது! இந்தியாவிற்கு சளி பிடித்துவிட்டது!”- என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் எட்டு பத்தி தலைப்பில் செய்தி வெளியிட்டு அண்மையில் பரபரப்பை ஏற்படுத்த முனைந்தது. அமெரிக்க நாட்டில் வீட்டின் மீது கடன், கிரெடிட் கார்டு ஆகியவைகளுக்கும், இந்திய நாட்டில் உருவாகும் ஏற்றுமதி தொழில் நெருக்கடிக்கும் மற்றும் நமது நாட்டு பங்குச் சந்தைக்கு வரும் விக்கலுக்கும் என்ன உறவு என்று யாரும் இன்று கேட்பதில்லை. மாறாக அவைகளால் இங்கு உருவாகும் நெருக்கடியை எப்படி சமாளிப்பது என்பதே முன்னுக்கு நிற்கிறது. டாலர்
திருப்புமுனை மாநாடு
6வது கட்சி காங்கிரஸ் பற்றி சில விவரங்கள் முந்தைய கட்டுரைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அந்த மாநாட்டினுடைய பின்னணியில் இருந்து வந்த ஆழமான அரசியல் பாகுபாடுகள் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறேன். எந்த அளவிற்கு இந்த வேற்றுமைகள் கட்சியை பாதித்தது அல்லது கட்சி காங்கிரஸ் விவாதங்களை பாதித்தது என்பதற்கு எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்வை குறிப்பிட விரும்புகிறேன். இரண்டு, மூன்று அரசியல் நகல் தீர்மானங்கள் மாநாட்டில் விவாதிக்கப்பட்டபோதிலும், மாநாட்டின் இறுதியில் தீர்மான வடிவில் எந்த முடிவினையும் மாநாடு எடுக்கவில்லை. மாநாட்டில் அரசியல் நிர்ணயிப்புகள்,
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
