Category: வரலாறு
கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர்கள் கட்சிகளின் 15வது சர்வதேச மாநாடு
ஆழமடைந்து வரும் முதலாளித்துவ நெருக்கடி, தொழிலாளர்கள் மற்றும் மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தில் தொழிலாளி வர்க்கத்தின் பங்கும், கம்யூனிஸ்ட்டுகளின் கடமையும், ஏகாதிபத்திய மேலாதிக்கம், சர்வதேச சக்திகளின் பலா பலன்களில் மறு அணி சேர்க்கை, தேசிய இனப்பிரச்சனை, வர்க்க விடுதலை மற்றும் சோசலிசத்துக்கான போராட்டம் என்ற முழக்கத்தின் கீழ் நவம்பர் 8-10 தேதிகளில் போர்ச்சுக்கல் தலைநகர் லிஸ்பனில் கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர்கள் கட்சிகளின் 15வது சர்வதேச மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் 61 நாடுகளைச் சேர்ந்த 77 கட்சிகள் பங்கேற்றன. 14 கட்சிகள் வாழ்த்துச் செய்திகளை அனுப்பி இருந்தன.
உக்ரைன் – அரங்கேறும் ஏகாதிபத்திய நாடகம்
முந்தைய பனிப்போர் அரசியலுக்குப் பிறகு கிழக்கு – மேற்கு நாடுகளிடையே மிகப்பெரும் நெருக்கடி உருவாகி வருவதாக வரலாறு ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். உக்ரைனில் தற்போது ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியிருப்போருக்கும் எதிர்த்து நிற்கும் ரஷ்ய ஆதரவாளர்களுக்குமிடையே கடும் மோதல் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன; உக்ரைனின் தென்பகுதியில் உள்ள நகரமான ஒடிச்சாவில் ஒரு தொழிற்சங்க கட்டிடத்திற்குள் அரசுக்கு எதிர்ப்பாளர்களாக இருந்த 42 பேர் உயிரோடு கொளுத்தப்பட்டனர். சென்ற பிப்ரவரி மாதம் ரஷ்ய ஆதரவாளர் என கருதப்பட்ட உக்ரைனின் ஆட்சித் தலைவர் விக்டர் யானுகோவிச் அப்பொறுப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு மிகவும் மோசமான அரசியல் சூழல் உருவாகியுள்ளது. உள்நாட்டுப் போர் விரிவாக நடத்தப்படுமென்றும் உக்ரைன் பல துண்டுகளாக சிதைந்து போகுமென்றும் அரசியல் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவை திடீரென்று வெடித்த நிகழ்வுகள் அல்ல. நீண்ட காலமாக தீட்டப்பட்ட ஏகாதிபத்திய சதித் திட்டத்தின் விளைவுகளை உக்ரைன் சந்திக்கிறது.
மே தினத்தின் புரட்சிகரப் பாரம்பரியம்
உலகெங்கும் உள்ள உழைப்பாளர்களின் ஒருமைப்பாட்டையும் போராட்ட உணர்வையும் மே தினக் கொண்டாட்டாங்கள் வெளிப்படுத்துகின்றன. இந்த ஆண்டு உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்கள் மே தினத்தைக் கொண்டாடும் போது இந்திய பாட்டாளி வர்க்கம் ஒரு கடுமையான அரசியல் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறது. இந்தியாவின் 16 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளது. இந்தத் தேர்தல் களத்தில் உலகின் பல்வேறு பகுதியிலுள்ள பாட்டாளி மக்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளை இந்தியப் பாட்டாளி வர்க்கமும் எழுப்பியுள்ளது. உழைக்கும் வர்க்கத்தை பொறுத்த வரை கூலி, பணிப்பாதுகாப்பு, விலைவாசி உயர்வு, வேலையின்மை, சமூகப் பாதகாப்பு போன்றவை முக்கியமான சில பிரச்சினைகளாகும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

