Category: வரலாறு
கிரகங்களும் கிரகசாரங்களும்!
கிரகங்கள் எட்டு ஒன்பதல்லஎன்று விஞ்ஞானிகள் முடிவு செய்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தி வருவதைப் பார்க்கிறோம். ஏன் இந்த பரபரப்பு? உலகநாடுகளின் தொண்மை வரலாறு நமக்கு இதை தெளிவாக்குகிறது. எல்லா நாடுகளிலும் நாகரீகத்தின் துவக்கம் என்பது வானத்தை மானுடன் ஆய்வு செய்யத் துவங்கிய பிறகே ஏற்பட்டுள்ளது. மேலே உள்ளதுபோல் கீழே என்றுதான் நமது முன்னோர்கள் கற்பனை செய்து இருக்கிறார்கள். வானத்தில் கண்ணில் படுபவைகளும், கற்பனைத் தெய்வங்களும், தங்களை ஆட்டுவிப்பதாக நம்பினர். ஆதிகாலம் தொட்டே சொர்க்கம், நரகம் என்பவைகள் வானத்திலே இருக்கின்றன என்ற நம்பிக்கை எல்லா நாடுகளிலும் பரவலாக இருந்து வருகிறது.
தூணிலும் இருப்பாரா?
தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று பிரகலாதன் சரித்திரமொன்றைக் கட்டி விட்டார்கள். இது சர்வ வியாபி என்ற கடவுளின் லட்சணத்தைக் குறிக்கும் கதையாகும். வான நூலின் படி பிரபஞ்சமெங்கும் வியாபித்துள்ளவை தூசும், தும்புமே. இதனைக் கடவுளென்பதில் அர்த்தமில்லை. ஆதலின், கண்டவரையில், கடவுள் சர்வ வியாபி என்று சொல்ல யாதொரு நியாயமுமில்லை. வேதாந்திகள் சொல்லும் சத்து, சித்து, ஆனந்தமும் பிரபஞ்சத்தில் காணோம்.
மீட்சியுற்ற அணி சேரா இயக்கம்!
உலக அரசியலில் ராணுவக் கூட்டுக்களை வைத்து தலையீடு செய்யும் ஏகாதிபத்திய அரசியலுக்கு எதிராக கூட்டுச் சேரா இயக்கம் பிறந்தது. பல காரணங்களால் அணி சேரா நாடுகளின் இயக்கம் படுத்த படுக்கையானது. இப்பொழுது நாம் (NAM) என்று அழைக்கப்படும் இயக்கம் முன்னைவிட பலத்தோடும், எழுச்சியோடும் மீட்சியுற்று ஏழை நாடுகளின் பாதுகாவலனாக நிமிர்ந்து நிற்கிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

