Author: Editorial
தேர்தல்கள், ஒருவிரல் புரட்சியா?
என்.குணசேகரன் ஐந்தாண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் அவ்வப்போது நிலவுகிற நிலைமைகளை அடிப்படையாகக்கொண்டு கம்யூனிஸ்டுகள் நிலை எடுக்கின்றனர். இன்றைய சூழலில் மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கிற கொள்கைகள், வகுப்புவாதம் போன்ற உழைக்கும் மக்கள் ஒற்றுமையை குலைக்கின்ற பிரச்சனைகளை மையமாக வைத்து நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்கிற நோக்கத்துடன் பொருத்தமான அரசியல் சக்திகளோடு அணி சேர்ந்து கம்யூனிஸ்டுகள் தேர்தலை சந்திக்கின்றனர். கம்யூனிஸ்டுகளின் தொலைநோக்கு இலக்கு, தேர்தல்களில் பெறப்படும் வெற்றிகள் அல்ல; தேர்தலுடன் கம்யூனிஸ்ட்களின் கடமை முடிவடைவதில்லை. காலம் காலமாக அடிமைப்பட்டு,
சீனா & ஷின்ஜியாங்: உண்மைகளும் பொய்களும்
அபிநவ் சூர்யா தன் பேராதிக்கத்தை கேள்விக்குள்ளாக்குவோரை கட்டுக்குள் கொண்டு வர உலக ஏகாதிபத்திய சக்திகள் தொடர்ந்து பயன்படுத்தி வரும் ஆயுதங்களில் ஒன்று “பொய் பரப்புரைகள்”. தன்னை எதிர்க்கும் நாடு/இயக்கம் “படுகொலைகள்/மனித உரிமை மீரல்களில் ஈடுபடுகிறது” என்றோ, “உலக அமைதிக்கு அச்சுறுத்தல்” என்றோ கட்டுக்கதைகள் மூலம் பரப்புரைகளை மேற்கொண்டு, இதை காரணமாக வைத்து அந்த நாடு/இயக்கம் மீது தடைகளை விதிப்பது முதல் போர் தொடுப்பது வரையிலான செயல்பாடுகள் நியாயப்படுத்தப்பட்டு வருகின்றன. சோவியத் ஒன்றியம், வட கொரியாவில் துவங்கி, பின்
ரோசா லக்ஸம்பர்க் 150: தீர்க்க தரிசனமும் கயமைத்தனமும்
[ரோசா லக்ஸம்பர்க் 150 (1871 மார்ச் 5 – 1919 ஜனவரி 15) – செவ்வியல் நூல் அறிமுகம்: புரட்சியா? சீர்திருத்தமா?] ச.லெனின் மார்க்சியர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டே திருத்தல்வாதப் போக்குடன் பலர் மார்க்சியத்தைச் சிதைக்க முற்பட்டனர்; முற்படுகின்றனர். மார்க்சின் போதனைகளை ஊடறுத்துப் பார்ப்பதாகக் காட்டிக்கொண்டே மார்க்சியத்தின் மீது அவர்கள் தாக்குதலையும் தொடுப்பர். அத்தாக்குதலையே மார்க்சிய கோட்பாட்டின் அடுத்த கட்ட வளர்ச்சி என்றும் முன்வைப்பர். ஜெர்மனியில் மார்க்சியத்தின் மீதான இத்தகைய தாக்குதல்களை கடுமையாக எதிர்த்து சமரசமற்ற போராட்டத்தை லக்ஸம்பர்க் நடத்தினார். லக்ஸம்பர்க் எழுதிய “சீர்திருத்தமா? புரட்சியா?” என்கிற நூல்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
