Author: Editorial
சோசலிச போராட்டமும், கிராம்ஷியின் சிந்தனையும்
என். குணசேகரன் அந்தோனியோ கிராம்ஷி மார்க்சியத்தில் முக்கிய பங்களிப்பு செய்த மார்க்சிய சிந்தனையாளர். மறைந்த மார்க்சிய வரலாற்று மேதை எரிக் ஹாப்ஸ்பாம் கிராம்ஷியை “1917-க்குப் பிறகு மேற்குலகின் தனித்தன்மை கொண்ட மார்க்சிய சிந்தனையாளராகத் திகழ்ந்தவர்”எனக் குறிப்பிடுகிறார். கிராம்ஷியின் பங்களிப்பை புரிந்து கொள்ள அவரது சிந்தனை உருப்பெற்ற சூழலை அறிவது அவசியம். 1917-ல் ரஷியப் புரட்சிக்குப் பிறகு, மற்ற நாடுகளை விட, கிராம்ஷி வாழ்ந்த இத்தாலியில் புரட்சி வருவதற்கான சூழல் இருந்தது. மக்களின் அகநிலை, புறச்சூழல் சமூகப் புரட்சிக்கு
உடைமை… உரிமை… பறிக்கும் அந்நிய நேரடி முதலீடு…
எஸ். கண்ணன் இந்தியா போன்ற வளரும் நாட்டில் வேலைவாய்ப்பு, தொழில் நுட்பம், ஆகியவை அதிகரிக்க வேண்டுமெனில் அந்நிய நேரடி முதலீடு அவசியம் என்கின்றனர். வேலைவாய்ப்பும், தொழில் நுட்பமும் வளர்ச்சியின் பிரதான அடையாளம் என சித்தரிப்பதோடு, அதற்கு அந்நிய நேரடி முதலீடு அவசியம் என்ற பிரச்சாரத்தை, தாராளமயம் மற்றும் வலதுசாரி கொள்கையை பின்பற்றும் பாஜக போன்ற அரசுகள் தீவிரமாக மேற்கொள்கின்றன. இந்த பிரச்சாரம் உண்மையென்றால், இந்தியாவில் மட்டுமல்ல; வளர்ந்த நாடுகளிலும் வேலை வாய்ப்பு குறைந்து, வேலையின்மை அதிகரித்துள்ளது ஏன்?
விவசாயிகளின் போராட்டங்கள்: நகர்ப்புற ஏழைகளுடன் சேர்வதன் முக்கியத்துவம்
பிரபாத் பட்நாயக் ”ஜெர்மனியில் விவசாயிகளின் போராட்டம்” என்ற புத்தகத்தில், எங்கெல்ஸ் தொழிலாளி-விவசாயி கூட்டணியின் அவசியத்தைக் குறிப்பிட்டுள்ளார். 125-இல் ஜெர்மனியில் விவசாயிகள் போராட்டம் தோற்றதற்கான காரணம் நகர்ப்புற சாமானிய மக்களுடன் (ப்ளேபியர்கள்) கூட்டணி இல்லாததுதான் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். மத்திய அரசாங்கத்தின், மோசமான மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் வீரம்செறிந்த போராட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் கடும்குளிரையும் மழையையும் பொருட்படுத்தாமல் – டில்லியை அமைதியான முறையில் முற்றுகையிட்டுக் கொண்டிருக்கும்போது, நமக்கு ஜெர்மனியில் விவசாயிகளின் போராட்டத்தின்போது ஃபிரெடரிக் எங்கெல்ஸ்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
