Author: Editorial
நம்பிக்கையூட்டும் லத்தீன் அமெரிக்கா
அபிநவ் சூர்யா லத்தீன் அமெரிக்க நாடுகளின் அண்மைக்கால நிகழ்வுகளும் வளர்ச்சிகளும் சர்வதேச இடதுசாரி இயக்கங்களுக்கு முக்கிய பாடமாகவும், பெருமளவு உத்வேகம் அளிப்பதாகவும் உள்ளன. குறிப்பாக, 2019ல் துவங்கி, இன்று வரை, அப்பகுதியின் பல நாடுகளிலும் பெருந்திரளான மக்கள் அமெரிக்கா ஆதரவுடன் அமலாகி வரும் ஏகாதிபத்திய தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து வருகின்றனர். பல காலமாக லத்தீன் அமெரிக்க நாடுகளை அமெரிக்கா தன் சொந்த ஆட்சிக்களமாக நினைத்து, அங்கு அனைத்து நாடுகளையும் தன் கட்டளைகளுக்கு அடிபணிய வைக்க முயற்சித்து
சொல்லகராதி: “உழைப்பு சக்தி – உபரி உழைப்பு”
உழைப்பு சக்தி என்பது உயிர்வாழும் உழைப்பாளியின் உருவத்தில் இருக்கிறது. அந்த உழைப்பாளிக்கும் அவன் இறந்த பின்பும் உழைப்பு சக்தி தொடர்ந்து கிடைப்பதை உத்தரவாதம் செய்யும் அவன் குடும்பத்துக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு வாழ்க்கைத் தேவைகள் அவசியமாகின்றன. அத்தேவைகளை உற்பத்தி செய்ய எவ்வளவு உழைப்பு நேரம் அவசியப்படுகிறதோ அந்த உழைப்பு நேரம்தான் உழைப்பு சக்தியின் மதிப்பாகிறது. ஒரு தொழிலாளி, ஒரு குறிப்பிட்ட வரலாற்று சகாப்தத்தில், ஒரு குறிப்பிட்ட நாட்டின் வரலாற்று முறையில் நிலைநாட்டப்பட்டுவிட்ட வழியில் தன்னை பராமரித்துக் கொள்ளவும்,
வறுமையை ஒழிக்கும் போராட்டத்தில் சோசலிச சீனா!
இரா. சிந்தன் ‘வறுமையை ஒழிப்போம்’ என்ற முழக்கம் கேட்காத நாடே உலகில் கிடையாது. பெரு முதலாளிகளின் வயிற்றை வளர்ப்பதில் மட்டுமே குறிக்கோளாக செயல்படும் முதலாளித்துவ அரசுகள் கூட, இவ்வகையில் நாங்கள் ‘வறுமையை வளர்க்கிறோம்’ என்று உண்மையைச் சொல்வதில்லை. அதனால் வறுமை ஒழிப்பு முழக்கம், என்றும் புகழ் குன்றாத, இறப்பேயில்லாத முழக்கமாக நீடிக்கிறது. இப்படியான சூழலில்தான் நம்புவதற்கே அரிதான விதத்தில்,மக்கள் சீன குடியரசு, தனது நாட்டில் அதீத வறுமையை ஒழித்துவிட்டது என்ற செய்தி வெளிவந்துள்ளது. சியா கங் (xiaokang)
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
