Author: Editorial
அவனது ரத்தம் போதிய அளவு வெளியேற்றப்படவில்லை!
மிகப் பெரும் மக்கள் இயக்கங்களை முன்னெடுப்பதன் மூலமே அரசுகளை கட்டாயப்படுத்தி விரிவான பொது சுகாதாரம் மற்றும் கல்விக்கான கட்டமைப்புகளை உருவாக்கச் செய்வது சாத்தியமாகும். உணவுக்கான நீதி, நலவாழ்வுக்கான நீதி ஆகிய முழக்கங்களை முன்வைக்கும் மக்கள் இயக்கங்களை கட்டமைக்கும் தேவை உள்ளது. இதுபோன்ற ஊக்கமளிக்கும் முன்னுதாரண மக்கள் இயக்கங்கள் ஏற்கனவே நடைபெற்றிருக்கின்றன. ஆனால் கார்ப்பரேட் ஊடகங்களின் செய்தி சேகரிப்பில் அவை ஓரங்கட்டப்பட்டு மறைக்கப்பட்டுவிட்டன.
கம்யூனிஸ்ட் இயக்கத்தில் கருத்துப் போராட்டங்கள் : தோற்றமும், இயக்கத்தின் மீதான தாக்கமும்
1957 பொதுத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியின் வாக்கு சதவீதம் இரட்டிப்பானது, இரண்டாவது மிகப்பெரும் கட்சியாகவும் உருவெடுத்தது. கேரளாவில் பெரும்பான்மையை வென்றது. தேர்தலுக்கு பின், கட்சி உறுப்பினர் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க்கி “வெகுஜன கட்சியாக” கட்டமைக்க மத்தியக்குழு அழைப்பு விடுத்தது. அமிர்தசரஸ் நகரில் கட்சியின் ஐந்தாவது “சிறப்பு” மாநாடு 1958 ஏப்ரல் 6 முதல் 13 வரை நடைபெற்றது. “திரிபுவாத, பிரிவினைவாத போக்கிற்கு எதிராக போராடி, இந்திய நிலையை கருத்தில் கொண்டு, மார்க்சிய – லெனினியத்தை பொருத்தி, திட்டங்களை வகுக்க” கட்சியின் செயல்திட்டத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இந்திய தொழில் வளர்ச்சியும், கம்யூனிஸ்ட்டுகளும்
1952 ல் தேர்வு செய்யப் பட்ட நாடாளுமன்றவுறுப்பினர்களில் கம்யூனிஸ்ட்டுகள் இரண்டாவது இடத்தில் இருந்தனர். இதை இந்திய வளர்ச்சிக்கான ஆக்கப் பூர்வமான பங்களிப்பு செய்யவும் பயன்படுத்தினர். அதில் மிக முக்கியமானவை, நெய்வேலி நிலக்கரி சுரங்கம், மின்சார தயாரிப்பு மற்றும் இரும்பு உருக்காலை, சேலத்தில் அமைப்பது ஆகியவை முக்கியமானதாகும். இதில் பி. ராமமூர்த்தி முக்கிய பங்களிப்பு செய்தார். திருச்சியில் பெல் மற்றும் துப்பாக்கி தொழிற்சாலைகள் அமைவதில் நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பின் மூலம் அனந்த நம்பியார் நிறைவேற்றினார்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
