Author: Editorial
பிப்ரவரி 2019 மார்க்சிஸ்ட் இதழில் …
மார்க்ஸ் பிறந்த 200 ஆம் ஆண்டை முன்னிட்டு மார்க்சிஸ்ட் இதழில் நாம் தொடர்ந்து பல்வேறு சிறப்பு கட்டுரைகளை கடந்த ஆண்டு முழுவதும் வெளியிட்டு வந்தோம். அதன் நிறைவாக, சீனாவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற மார்க்ஸ் பிறந்த நாள் இருநூற்றாண்டு விழாவில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரும், மக்கள் சீனத்தின் குடியரசுத்தலைவருமான ஜி ஜின்பிங் மார்க்ஸ் குறித்தும், மார்க்சியத்தை பயில்வதின் அவசியம் குறித்தும், சீனாவில் அதை அமலாகும் விதம் குறித்தும் ஆற்றிய உரையின் பகுதி “மார்க்சை பயில்வது என்பது என்ன?”
ஓரடி முன்னால், ஈரடி பின்னால் : புரட்சிகர கட்சி அமைப்புக்கான போராட்டம்
மக்களுடன் வைத்திருக்கும் தன்னுடைய தொடர்புகளை கட்சி பன்மடங்கு அதிகமாக்க வேண்டும். தன்னுடைய வர்க்கத்தைச் சேர்ந்த பல லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கைகளை பெருமுயற்சி செய்து பெற வேண்டும்.
லெனினியம் – ஓர் அறிமுகம்
சில சந்தர்ப்பங்களில் நடைமுறை தேவைகளில் ஆதாயம்
காண தத்துவத்தை பலி கொடுக்கும் தவறு நிகழ்வதுண்டு. குறிப்பிட்ட நிலைமைகளை துல்லியமாக
ஆராய்ந்திடாமல் வெறும் தத்துவ சொல்லாடல்களை முழக்கி தவறுகள் செய்கிற நிலையும் ஏற்படுவதுண்டு. இந்த இரண்டு வித தவறுகளையும் களைந்து புரட்சியை
நோக்கி முன்னேறிட லெனினியத்தில் ஆழமான பயிற்சி தேவைப்படுகிறது
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


