Author: Editorial
இடது ஜனநாயக சக்திகளை அணி திரட்ட திட்டமிடல் எதுவும் நடந்ததா?
வர்க்க ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சுரண்டப்படும், ஒடுக்கப்படும் பிரிவினரை ஒன்று படுத்தி, போராட்ட வியூகம் வகுக்கப்பட வேண்டும். அவர்களை அரசியல் ரீதியாகவும், தத்துவார்த்த ரீதியாகவும் உறுதிப்படுத்த வேண்டும். இதனை செயல்படுத்தக் கூடிய விதத்தில் இடதுசாரிகள் வலுப்பெற வேண்டும்.
ஒப்பனை பட்ஜெட் 2017 – 2018 (மத்திய பட்ஜெட் குறித்து)
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் ஒரு மிகப்பெரிய பாதிப்பு முறைசாரா துறைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியும் அதனால் பல லட்சக்கணக்கான வேலைகள் இழக்கப்பட்டதும் ஆகும். இந்த பட்ஜெட்டில் குறிப்பாக வேலை இழப்பு பிரச்சினை கணக்கில் கொள்ளப்பட்டு வேலைகளை உருவாக்குவதற்கு மிகக் கூடுதலான ஒதுக்கீடு செய்யபட்டிருக்க வேண்டும்.
இளம் அரசியல் ஊழியர்களுக்கு பகத்சிங் எழுதிய கடிதம் …
நான் ஒரு புரட்சியாளன், ஒரு நீண்ட கால போரட்டத்தை குறித்து விவாதிக்கும் திடமான கருத்துக்கள் கொண்ட புரட்சியாளன். என் தோளோடு தோள் நின்ற ராம் பிரசாத் பிஸ்மில் போன்ற நண்பர்கள் சிலர் குற்றம் சாட்டலாம் நான் சிறைப்பொந்தில் தள்ளப்பட்டதால் இப்படி பேசுகிறேன் என. அது உண்மை அல்ல. நான் சிறைக்கு வெளியிலிருந்த போது கொண்டிருந்த அதே கருத்துக்களை, அதே மன உறுதியை, அதே உத்வேகத்தை , அதே துடிப்பை; சொல்லப்போனால் இன்னும் அதிகமாக தீர்மானமாகப் பெற்றுள்ளேன். ஆகவே என் கருத்துக்களை படிப்போரை கவனமாக இருக்குமாறு எச்சரிக்கிறேன்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



