Author: Editorial
அமெரிக்காவிற்கு அடிபணியும் மோடி அரசின் அயல்துறைக் கொள்கை
ஜி. ராமகிருஷ்ணன் கடந்த 29.02.2024 அன்று அதிகாலையில் காசா நகரத்தில் வீடுகளை இழந்த, வருவாயை இழந்த பாலஸ்தீன மக்களுக்கு உணவுப் பொட்டலம் ஒரு ட்ரக்கில் வந்திருக்கிறது. பசியால் வாடும் பாலஸ்தீன மக்கள் உணவுப் பொட்டலங்களை வாங்கிட அங்கு செல்கிறார்கள். திடிரென்று இஸ்ரேல் ராணுவத்தினர் அப்பாவி பாலஸ்தீன மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 112 பேர் அதே இடத்தில் கொல்லப்பட்டனர். 700க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றனர். கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து காசா – பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் தாக்குதலின் தொடர்ச்சிதான் கடந்த 29 ஆம் தேதி நடந்த கோரமான சம்பவம். இத்தகைய சூழலிலும் ஐ.நா.மன்றத்தில் காசா மீது தொடுத்து வரும் தாக்குதலை நிறுத்த வேண்டுமென்று கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை அமெரிக்கா தனது ரத்து அதிகாரத்தின் மூலம் தடுத்துவிட்டது. இத்தகைய தீர்மானம் ஐ.நா. மன்றத்தில் வருகிறபோது இந்திய அரசு பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான நிலைபாட்டை மேற்கொள்ளவில்லை. மாறாக, அமெரிக்காவின் நிலைபாட்டை ஆதரிக்கக் கூடிய நடைமுறையை கடைப்பிடித்து வருகிறது. கூட்டுசேராக் கொள்கையிலிருந்து விலகல் தென்னாப்பிரிக்காவில் கருப்பின மக்கள் நிறவெறிக்கு எதிராக போராடுகிறபோது, பெரும்பான்மையான உலக நாடுகள் கருப்பின மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தன. ஐ.நா. மன்றமும் இனவெறிக்கு முடிவுகட்ட வேண்டுமென்று தொடர்ச்சியாக பல தீர்மானங்களை நிறைவேற்றியது. இந்திய அரசு தென்னாப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிராக போராடும் கருப்பின மக்களுக்கு ஆதரவாக நின்றது. ஐ.நா. மன்றத்திலும் இனவெறிக்கு எதிரான தீர்மானங்களை ஆதரித்தது. 1950களில் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலை பெற்ற வியட்நாம் மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் போர் தொடுத்து வியட்நாமின் தென்பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹோ சி மின் தலைமையில் நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தை உலக நாடுகள் ஆதரித்தன. ஐ.நா. மன்றமும் வியட்நாம் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றியது. இந்திய அரசு வியட்நாம் மக்களின் விடுதலைப் போராட்டத்தை சமரசமின்றி ஆதரித்தது. கூட்டு சேரா நாடுகளின் அமைப்பில் முக்கிய பங்கு வகித்த இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை தென்னாப்பிரிக்க மக்களின் இனவெறிக்கு எதிரான போராட்டத்தையும், வியட்நாம் மக்களின் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தையும் ஆதரிக்கக்கூடிய அயலுறவுக் கொள்கையை கடைப்பிடித்தது. ஆனால், பாரதிய ஜனதா கட்சி கடந்த 2014ஆம் ஆண்டு அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து கூட்டுசேரா நாடு கொள்கையிலிருந்து வெகுவாக விலகி, அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளின் வெளியுறவு கொள்கைகளை ஆதரிக்கக் கூடிய அயல்துறை கொள்கையை கடைபிடித்து வருகிறது. “ஒரு அரசாங்கத்தின் அயல்துறை கொள்கையானது இறுதியாக பார்த்தால் அதன் உள்நாட்டு கொள்கையின் வெளிப்பாடே தவிர வேறு எதுவுமல்ல” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சி திட்டம் குறிப்பிடுகிறது. ஒன்றிய பாஜக அரசு பெருமுதலாளிகள் மற்றும் நிலச்சுவான்தார்களின் நலன்களை பிரதிபலிப்பதோடு, ஏகாதிபத்திய நாடுகளின் மூலதனத்தின் நலன்களுக்காகவும் செயல்படக்கூடிய அரசாக உள்ளது. பாஜக கட்சி இதர முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ கட்சிகளை போல் அல்ல. இக்கட்சியின் தலைமையிலான அரசு பாசிச தன்மை கொண்ட ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதலின்படி செயல்படக்கூடிய அரசு. நாட்டின் தலைநகரம் டெல்லியாக இருந்தாலும், பாஜகவுக்கு வழிகாட்டுதல் நாக்பூரிலிருந்தே (ஆர்எஸ்எஸ் தலைமையகம்) வருகிறது. ஒன்றிய பாஜக அரசு கார்ப்பரேட் கம்பெனிகள் – இந்துத்துவா சக்திகளின் கூட்டுக் களவாணி அரசு என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்ணயித்துள்ளது. இதன் பொருள் உள்நாட்டு – பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுடைய நலன்களை பாதுகாப்பதோடு, இந்தியாவை ஒரு இந்து ராஷ்டிரமாக மாற்றக் கூடிய பாதையில் வேகவேகமாக சென்று கொண்டிருக்கிறது. நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கை நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கை 1991ஆம் ஆண்டிலிருந்து அமலாக்கப்பட்டு வந்தாலும் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள்,
முற்போக்கு சமூக மாற்றத்தின் மீது வேட்கை கொண்ட அறிவியலாளர்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா பிரபீர் புர்காயஸ்தா ஒரு சிறந்த பொறியாளர். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின்பால் ஆழமான ஈடுபாடு கொண்டவர். அவர் மக்கள் அறிவியல் இயக்கத்தின் (People’s Science Movement) அர்ப்பணிப்பு மிக்க செயல்பாட்டாளர். அறிவியல் மனப்பான்மை, இந்தியாவின் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப சுயசார்பு, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான போராட்டத்தில் அவர் முன்னணியில் இருந்து வந்துள்ளார். புர்காயஸ்தா எழுதிய கட்டுரைகளின் ஒரு சிறந்த தொகுப்பை ‘லெஃப்ட்வேர்ட்’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இத்தகைய சிறந்த அறிவாளி அங்கீகரிக்கப்படுவதற்குப் பதிலாக,
நாடாளுமன்றம் என்ற களத்தில்..
டி. கே. ரங்கராஜன் (தோழர் டி.கே. ரங்கராஜன் அவர்களின் வாழ்க்கை அனுபவங்கள் குறித்த ‘தொடர் ஓட்டம்’ என்ற நூலில் இருந்து சில பகுதிகள்) நிதித்துறைக்கான குழுவும் பணமதிப்பு நீக்கமும் இந்தக் குழுவில் இருக்கும்போது பணமதிப்பு நீக்கம் பற்றிய பிரச்சனை வந்தது. இது பற்றி விவரங்களை அறிய இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர்களாக இருந்த ரகுராம் ராஜன், உர்ஜித் படேல், சக்திகாந்த தாஸ் ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். இவர்கள் தவிர வங்கியாளர்கள் சங்க (Bankers Association) நிர்வாகிகளையும் அழைத்து விசாரித்தோம். எவரும் இது பற்றி தங்களுக்குத் தெரியும் என்றோ தங்களுடன் விவாதிக்கப்பட்டதாகவோ கூறவில்லை. அமைச்சர்கள் கூட தேநீர் விருந்துக்கு என்று அழைக்கப்பட்டதாகவும் அங்கே தான் பிரதமர் டிவியில் பேசப் போகிறார் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்தக் குழுவில் உர்ஜித் படேலிடம் கேள்விகள் கேட்டபோது அவரைப் பேசவிடாமல் மன்மோகன் சிங் தடுத்ததோடு, கூட்டத்தையும் முடிக்கச் சொல்லிவிட்டார். குழுவின் தலைவராக இருந்த வீரப்ப மொய்லியும் அப்படியே செய்துவிட்டார். இதுதான் ஆளும் வர்க்கத்தைப் பாதுகாக்கும் அதிகார வர்க்கப் போக்கு என்பது. பாதுகாப்புத்துறை நாடாளுமன்றக்குழு அனுபவங்கள் பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தித்துறை 200 வருடங்களுக்கு மேலாக அரசாங்கத்திடம்தான் இருந்தது. இதற்கொரு காரணம் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுவோர் ஆயுதங்களை எடுத்துச் சென்றுவிடக் கூடாது என்பதுதான். பிரிட்டனில் இது தனியாரிடம் இருந்தது என்பதை கவனித்தால் இது புரியும். நாடு விடுதலை அடைந்தபின் பாதுகாப்புத் துறைக்கான தொழிற்சாலைகளில் 80 சதவீதம் அரசாங்கத்திடம்தான் இருந்தது. இப்போது இதில் தனியாரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டு நேரடி முதலீடும் வரலாம் என்று மோடி அரசு கூறிவிட்டது. டாடா நுழைந்துவிட்டது, ரிலையன்ஸ் வந்துவிட்டது, மஹிந்திரா புகுந்திருக்கிறது, கல்யாண் குழுமம் நுழைந்திருக்கிறது, எல் அண்ட் டி வந்துவிட்டது – இவர்கள் 100 சதவீதம் முதலீடு செய்யலாம். இப்படிப்பட்ட நடவடிக்கை ஆசியா கண்டத்திலும் ஆப்பிரிக்கக் கண்டத்திலும் ஆயுதப் போட்டியை உருவாக்கும். இது அத்துடன் நிற்காது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போட்டி வரும்; இந்தியாவுக்கும் வளர்ந்த நாடுகளுக்கும் போட்டி வரும். பாதுகாப்புத்துறையில் தனியார் மயம் என்பது காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கியது. ஆனால் அதனை ஓரளவு தடுத்து நிறுத்த முடிந்தது. இப்போது ஆர்எஸ்எஸ்சின் அரசியல் பிரிவான பிஜேபி ஆட்சி முழுபலத்துடன் இருப்பதால் எதையும் பொருட்படுத்தாமல் தீவிரமாக செயல்படுத்துகிறது. இதன் பொருள் என்னவென்றால் ஆயுதங்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்வதாகும். அதாவது சமாதான சக வாழ்வு என்ற கோட்பாட்டிலிருந்து இந்தியா வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டது என்பது பொருள். ஆயுதங்களின் அதிகப்படியான உற்பத்தி என்பது சந்தையைத் தேடுவதாக – அவற்றுக்கான தளங்களை அமைப்பதாக – மாறிவிடும். இது நாட்டுக்கு நல்லதல்ல என்பதை நாம் தொடர்ந்து சுட்டிக்காட்டியும் வலியுறுத்தியும் வருகிறோம். ஒழுங்கைக் குலைப்பதும் நியாயம்தான் ஜவஹர்லால் நேரு ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்றத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டார் என்பதற்காக மக்களவையிலிருந்து வெளியேற்றப்பட்ட முதல் உறுப்பினர் என்ற பெருமை தோழர் அனந்தன் நம்பியாருக்கு உண்டு. நம்பியார் நடந்து கொண்ட விதத்தை எஸ்.ஏ.டாங்கே கண்டித்தார். ஆனால் சுந்தரய்யா வரவேற்றார். ஒரே கட்சிதான் என்றாலும் நாடாளுமன்ற அமைப்பைப் பற்றிய இருவித அணுகுமுறை இருந்துள்ளது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
