Author: Editorial
தொழிலாளி விவசாயி ஒற்றுமையின்அவசியம்
உ. வாசுகி தொழிலாளி விவசாயி கூட்டணி குறித்து கட்சி திட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தில் தொழிலாளி விவசாயி ஒற்றுமைக்கு கூடுதல் முக்கியத்துவம் உண்டு. மக்கள் ஜனநாயக புரட்சி, அதற்கான மக்கள் ஜனநாயக முன்னணி என்று கட்சித் திட்டம் பேசும் இடத்தில், மக்கள் ஜனநாயக முன்னணியில் இடம்பெறும் வர்க்கங்கள் பட்டியலிடப்படுகின்றன. தொழிலாளி வர்க்கம் தலைமை ஏற்கும் என்று சொல்வதோடு, திட்டத்தின் 7.6 பத்தி, “தொழிலாளி விவசாயி வர்க்கங்களின் வலுவான கூட்டணிதான் மக்கள் ஜனநாயக முன்னணிக்கு மையமானது, அடித்தளமானது. ஒட்டுமொத்த சமூக முன்னேற்றத்தை உறுதிப்படுத்த, இந்த கூட்டணி மிக முக்கியமான சக்தியாக இருக்கும். புரட்சியை முன்னெடுத்துச் செல்வதில், இதர வர்க்கங்கள் வகிக்கும் பாத்திரம் என்பது, தொழிலாளி
மாற்று அரசியலுக்கான மார்க்சிய உரையாடல்
என்.குணசேகரன் மறைந்த அய்ஜாஸ் அகமது அவர்கள் ஒரு தலைசிறந்த மார்க்சிய அறிஞர். இன்றைய காலச் சூழலின் சவால்களை மார்க்சிய நோக்கில் புரிந்து கொள்ளவும், போராட்ட நடைமுறைகளை அமைத்திடவும், தொடர்ந்து வழிகாட்டி வந்த மார்க்சிய ஆசிரியர். 1990ஆம் ஆண்டுகளில் மார்க்சிய ஆய்வாளர்கள் பலர் தடம் மாறி, மார்க்சியத்தின் ஜீவ நாடியான பாட்டாளி வர்க்கப் புரட்சி, சோசலிச இலக்குகளைக் கைவிட்டு மார்க்சியத்தை திரித்து வந்த நிலையில், அய்ஜாஸ் அகமது மகத்தான மார்க்சிய ஆசானாகத் திகழ்ந்தார். புரட்சிகரமான மார்க்சியத்தை உயர்த்திப் பிடித்து, கருத்துப் போராட்டத்தை அவர் நடத்தி வந்தார். 2022ஆம் ஆண்டு மறைந்த அய்ஜாஸ் அகமது ஏராளமான கட்டுரைகளையும், நூல்களையும் எழுதியுள்ளார். நவீன தாராளமயம் என்ற திருப்பத்தை அடைந்த இன்றைய முதலாளித்துவ இயக்கத்தினை மார்க்சிய வழி நின்று ஆய்வு செய்திடும் எழுத்துக்களாக அவரது எழுத்துக்கள் அமைந்துள்ளன. அத்துடன் இன்றைய முதலாளித்துவ எதிர்ப்புப் போராட்டத்தின் வளர்ச்சி, புரட்சிகர மாற்றத்தின் திசைவழி குறித்தெல்லாம் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் ஆய்வு நெறியில் நின்று படைப்புக்களை அளித்துள்ளார். பேராசிரியர் அய்ஜாஸ் அகமது அவர்களுடன் தோழர் விஜய் பிரசாத் நடத்திய உடையாடல் “மார்க்ஸ் – புரட்சியின் அரசியல்” என்ற தலைப்பில் தற்போது நூல் வடிவம் பெற்றுள்ளது. அரசியல் கையேடு மார்க்சியம் முன்னெடுக்கும் புரட்சிகர அரசியலை ஆழமாக புரிந்து கொள்ள உதவிடும் நூலாக இந்த நூல் அமைந்துள்ளது. இந்த உரையாடலில் இருவரும் பகிர்ந்து கொள்ளும் கருத்துக்கள், மார்க்சின் பங்களிப்பு பற்றிய பல பரிமாணங்களை வெளிக்கொணர்கிறது. மார்க்சின் எழுத்துக்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்வது மட்டுமல்ல; மார்க்சின் எழுத்துக்களுக்கு அடிப்படையாக இருந்த மார்க்சின் எண்ணவோட்டத்தை ஆழமாக புரிந்து கொள்ளும் வகையில் இந்த உரையாடல்கள் அமைந்துள்ளன. தோழர் விஜய் பிரசாத் உலக அளவில் செயல்பட்டு வரும் மார்க்சிய செயல்பாட்டாளர். மார்க்சியத்தை உயர்த்திப் பிடித்து, போராடும் உழைக்கும் வர்க்க இயக்கங்களின் தத்துவார்த்த புரிதலை மேம்படுத்தும் படைப்புக்களை விஜய் பிரசாத் அளித்து வருகிறார். அய்ஜாஸ் அவர்களின் உயரிய மார்க்சிய சிந்தனைகள் தெளிந்த நீரோட்டமாக வெளிவரும் வகையில் விஜய் பிரசாத் உரையாடலை ஒருங்கிணைக்கிறார். கனமான, தத்துவக் கட்டுரைகளை, கட்டுரை வடிவத்தில் படிக்கும்போது சிலருக்கு ஏற்படும் சோர்வு, இந்த உரையாடல் வடிவ படைப்பில், உரையாடலோடு ஒன்றிப்போகும்போது ஏற்படுவதில்லை. நூலின் முன்னுரையில் விஜய்பிரசாத் குறிப்பிடுவது போன்று, மார்க்ஸ் பொது தளத்தில் பொருளாதார அறிஞராகவே முன்னிறுத்தப்படுகிறார். மார்க்சின் பொருளாதாரம் பற்றிய பங்களிப்பு மகத்தானதுதான் என்பதில் ஐயமில்லை. உண்மையில்,மார்க்ஸ் முதலாளித்துவத்தை வீழ்த்தி, பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுகிற நிகழ்வைப் பற்றி ஏராளமாக எழுதியுள்ளார். அவரது புரட்சிகர அரசியல் பார்வையை வெளிப்படுத்தும் மார்க்சின் எழுத்துக்கள் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவை. அதிலும் இன்று முதலாளித்துவத்தின் நேரடித் தாக்குதல் உழைக்கும் மக்கள் மீது அதிகரித்துள்ள நிலையில், வலதுசாரி அரசியலை பக்கபலமாக வைத்துக் கொண்டு, முதலாளித்துவ கருத்தியல் ஆயுதபாணியாக மாறியுள்ள நிலையில், புரட்சிகர அரசியல் இன்று
இந்தியாவில் முற்போக்குப் பண்பாட்டு இயக்கம்: வரலாற்று ஆய்வு
பேரா. மாலினிபட்டாச்சார்யா படைப்பாற்றல் மிக்க பொழுதுபோக்கு நடவடிக்கைகள் எனும் குறிப்பிட்ட பொருளில் ‘பண்பாடு’ என்ற சொல்லை இங்கு நாம் பயன்படுத்துகிறோம். இத்தகைய செயல்பாடுகள் தொடர்பான ஒரு ‘இயக்கம்’ பற்றி பேசுவது, அவை தனிமனித உள்ளத்தில் தனிப்பட்ட ஓர் முறையில் உருவான ஒன்றல்ல; அவற்றின் உருவாக்கம் சமூகம் சார்ந்தது, அரசியல் – கருத்தியல் அம்சத்தை உள்ளடக்கியது என்ற பொருளில்தான். பண்பாட்டு அரசியலுக்கு எப்போதும் இடமுண்டு. இந்தியாவில் முற்போக்குப் பண்பாட்டு இயக்கத்தில் நாம் ஏன் ஆர்வம் செலுத்துகிறோம்? ஏனெனில், கம்யூனிஸ்டுகள் இப்பாரம்பரியத்தின் சொந்தக்காரர்கள். இதில் முக்கியப் பங்கு வகித்தவர்கள். கருத்தியல் போர் இந்திய முற்போக்குப் பண்பாட்டு இயக்கத்தின் தொடக்க கால அரசியல், சாதியப் படிநிலை, பெண்கள் மீதான ஒடுக்குமுறை ஆகியவற்றை எதிர்த்தும், கல்வியறிவு பெறவும் 19ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற உரிமைகளுக்கான சமூகச் சீர்திருத்த இயக்கங்களில் வேர்கொண்டுள்ளது. ஆதிக்கப் பண்பாட்டுக்கு எதிரான விமர்சன பூர்வமான எதிர்ப்பாக இது விளங்கியது. தொன்மைக்காலம் தொட்டு ஆதிக்கப் பண்பாட்டுக்கு எதிரான மாற்றுக் கருத்தும், பன்முகத்தன்மை கொண்ட பார்வையும் முன்வைக்கப்பட்டு வந்தது. ஆனால், காலனி ஆதிக்கமும், நவீன மேலைய சிந்தனையுடன் தொடர்புடைய மேட்டுக்குடி வர்க்கங்களில் ஒரு பகுதியினரிடம் உருவான தேசிய அடையாளத்துக்கான தேடலும் 19ஆம் நூற்றாண்டின் சீர்திருத்த இயக்கங்களுக்கு ஒரு புதிய தன்மையை அளித்தது. அவை வழி வழியாக வரும் விவாதங்களின் பகுதி என்று கூறலாமா? அல்லது ‘சுதேசி நவீனத்துவம்’ என்ற சொல்லாடலில் அழைக்கலாமா? 1930, 40களின் பண்பாட்டு இயக்கம், இருபதாம் நூற்றாண்டின் இருபதுகளில் வெகுமக்கள் இயக்கமாக மாறிய விடுதலைப் போராட்டத்துடன் மிக நெருக்கமான வரலாற்றுத் தொடர்பைக் கொண்டிருந்தது. தொழிலாளர்கள், விவசாயிகளின் பரந்துபட்ட போராட்டங்கள் வலுப்பெற்று காலனி ஆதிக்க எதிர்ப்பு எழுச்சிக்கு புதிய பரிமாணங்களை கொடுத்தன. ரஷ்யப் புரட்சி, ஐரோப்பாவில் பாசிசத்தின் எழுச்சி, இரண்டு உலகப்போர்கள் போன்ற சர்வதேச நிகழ்வுகளின் தாக்கம் கூடுதலாக இருந்தது. இந்தப் பின்னணியில் சம உரிமை, சமூக நீதி ஆகியவற்றின் அடிப்படையில் நல்லிணக்கத்தை நிலை நாட்டும் சுதந்திர நவீனக் குடியரசு பற்றிய உண்மையான பார்வை ஏற்கனவே உருப்பெற்றிருந்தது. இப்பார்வை வெறும் கருத்தியல் சார்ந்ததாக மட்டுமல்லாமல், சமூகப் போராட்டங்களிலும், படைப்பாக்கம், விமர்சன இலக்கியம் , இதழியல், நாடகம், பாடல்கள், காட்சிக் கலைகள், பின்னாளில் திரைப்பட ஊடகம் போன்றவை மூலம் பன்மடங்காக வெளிப்பட்ட புதிய போக்குகளில் தெளிவாகத் தெரிந்தது. அதேசமயத்தில் சுதந்திரப் போராட்டத்திற்குள் வர்க்கம் ,சாதி, வகுப்புவாதம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆழமான பிளவுகளும் ஏற்பட்டன. விடுதலையின் நோக்கத்தை ரத்த வெள்ளத்தில் மூழ்கடிப்போம் என பிற்போக்குச் சக்திகள் அச்சுறுத்தின. இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியும் , சிறிது காலத்துக்குப் பிறகு உருப்பெற்ற ஆர்எஸ்எஸ் அமைப்பும் இக்காலத்தில் பிறந்து, விடுதலைப் போராட்டத்திலிருந்த இந்த எதிரெதிர் போக்குகளைப் பிரதிநிதித்துவப்படுத்தின. கம்யூனிஸ்ட்களைப் பொறுத்தவரை,
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
