Author: Editorial
இன்றும் வழிகாட்டும் தோழர் லெனின்
2024: லெனின் நினைவுநூற்றாண்டு பேரா. வெங்கடேஷ்ஆத்ரேயா அறிமுகம் மார்க்ஸ்-எங்கெல்ஸ் வழிநின்று மார்க்சீயத்தின் தத்துவத்தையும் நடைமுறையையும் இடைவிடாமல் தனது அரசியல் வாழ்வில் முன்பின் முரணின்றி பின்பற்றிய மாமேதை தோழர் லெனின் அவர்கள் 1924ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதியன்று மறைந்தார். அதன்பின் 100 ஆண்டுகள் கடந்து விட்டன. லெனின் காலத்துடன் ஒப்பிடுகையில் நாம் வாழும் உலகம் பிரும்மாண்டமான மாற்றங்களை கண்டுள்ளது. உற்பத்தி சக்திகளின் பாய்ச்சல்வேக வளர்ச்சி மனிதர்களின் வாழ்விலும், சமூகங்களின் தன்மைகளிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இதெல்லாம்
லெனின் நினைவு நூற்றாண்டு : லெனினது வரலாற்றுப் பரிசோதனை
என். குணசேகரன் கடந்த நூறு ஆண்டுகளில் லெனின் பற்றி அடுக்கடுக்காக பல நூல்கள் இடைவிடாமல் வெளிவந்துள்ளன. அவற்றில் பல நூல்கள் லெனினின் சிந்தனைகள் மீது தாக்குதல் தொடுத்து எழுதப்பட்டவை. அவரை அவதூறு செய்தும், அவரது புரட்சிகர செயல்பாடுகளை இழித்தும், பழித்தும் எழுதப்பட்ட பல நூல்களும் வெளிவந்துள்ளன. அவரைப் பற்றிய நூல்கள் எப்படிப்பட்டதாக இருந்தாலும், ஒரு உண்மை மறைக்க முடியாதது. உலக சிந்தனைப் பரப்பில் லெனினது தாக்கம் நீடித்துக் கொண்டே இருக்கிறது என்பதே அந்த உண்மை. அவரைப் பற்றிய
முட்டுச் சந்தில் நிற்கும் நவ தாராளவாதம்!! புறந்தள்ளுமா தெற்குலக நாடுகள்??
ஆர். எஸ். செண்பகம் திவாலுக்கு வந்த நவீன தாராளவாதக் கொள்கைகள் பொருளாதார வளர்ச்சியும், அனைத்து மக்களின் முன்னேற்றமும் வேண்டுமெனில், நவீன தாராளவாதக் கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று சொன்னது இன்று பொய்யாகியுள்ளது. லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு இயங்குவதன் காரணமாக, பெருந்துன்பங்களுக்கு மக்கள் ஆளாவது மட்டுமின்றி, உலக அளவில் பொருளாதார நெருக்கடி நீடித்து நிலைத்து நிற்கிறது. தெற்குலக நாடுகள் உலகளாவிய கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. வருமான ஏற்றத்தாழ்வுகள், பொருளாதாரச் சுரண்டல்கள், செல்வாதார ஏற்றத்தாழ்வுகள் என ஏராளமான
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
