
கேரளாவின் அதிதீவிர வறுமை ஒழிப்பு
[ஆசிரியர் குழு]
இடது ஜனநாயக முன்னணி அரசு 2021-ல் துவங்கிய அதிதீவிர வறுமை ஒழிப்புத் திட்டத்தின் மூலம், நவம்பர் 1, 2025 அன்று, அதிதீவிர வறுமையை ஒழித்த இந்தியாவின் முதல் மாநிலமாக கேரளா உருவெடுத்துள்ளது. சோசலிச அடிப்படையில் உருவான இந்த முயற்சி, வறுமை ஒழிப்பை “காணிக்கை” போல பாவிக்கும் பார்வையை நிராகரிக்கிறது. வறுமையை ஒரு பன்முகப் பிரச்சனையாகக் கருதி, உணவுப் பாதுகாப்பின்மை, சுகாதார ஏற்றத்தாழ்வுகள், வீட்டு வசதி மற்றும் நிலையான வருமானமின்மை போன்ற பிரச்சனைகளுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட நுண்-திட்டங்கள் மூலம் தீர்வு காணப்பட்டது.
தரவு சேகரிப்பு துவங்கி, ஒவ்வொரு படியிலும், அனைத்து மட்டங்களிலும், மக்கள் நேரடியாகப் பங்கேற்கும் திட்டமிடலைப் பயன்படுத்தி, ஒருங்கிணைந்த உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம், உணவுப் பொருட்கள், மருத்துவ உதவி, நிதி உதவி மற்றும் புதிய வாழ்வாதார வாய்ப்புகள் வழங்கப்பட்டன. வேலைவாய்ப்பிற்காகவும் , நிலமற்றவர்களுக்கு வீடு வழங்கவும், டிஜிட்டல் கல்விக்கும் சிறப்புத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டன.
கேரளாவின் சாதனை, சோசலிசத்தின் நீடித்த முக்கியத்துவத்திற்கு சான்று. பஞ்சாயத்து முதல் மாநில அரசு வரை, திட்டமிட்ட வளர்ச்சி மூலம் சமூக நீதி மற்றும் சமத்துவத்தை அடைய முடியும் என்பதை நிரூபிக்கிறது.
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply