ஜோதிபாபூலே: சமூக சீர்திருத்தத்தின் தந்தை
பகுதி -2 புலே ஒரு முதல் சூத்திர அறிஞர். அவரே தன்னைப் பற்றி மதிப்பீடு செய்ய விரும்பியது போல பெண்பால் பற்றிய கேள்விகளை முதலில் ஆராய்ந்தவர் என்ற பெயரும் அவருக்கு உண்டு. இந்தப் பிரச்சினையில் அடித்தளமான மனித நேயப் பார்வை கொண்டால் போதும் என்ற மனநிலையை இந்திய மறுமலர்ச்சியின் சமூக சீர்திருத்தவாதிகள் பலரும் கொண்டனர். அவர்களது அணுகுமுறை வரலாற்று நோக்கமும், தாராளமனப்பாங்கும் முற்போக்கும் கொண்டதாக இருந்தது. அவர்களது பிரச்சாரத்திலும், செயலிலும் மேல் ஜாதியினரின் வெறுப்பு மேலோட்டமாக வெளிப்பட்டது.
இந்திய அரசியல் அமைப்பும் கூட்டாட்சி கோட்பாடும்
இந்திய நாடு கூட்டாட்சி கோட்பாட்டின் ஒரு சில அம்சங்களை உள்ளடக்கிய ஒரு அரசியல் சாசனத்தையும், அரசியல் அமைப்பு முறையையும் கொண்டுள்ளது. அரசியல் சட்டம் மத்திய அரசுக்கு உயர் அதிகாரங்களை வழங்கியுள்ளது. இது நிர்வாக அதிகாரத்தையும், நிதி அதிகாரத்தையும் குவித்துள்ளது. அதே நேரத்தில் வரையறுக்கப்பட்ட விதத்தில் மத்திய மாநில அரசுகளுக்குகிடையில் அதிகாரங்களையும் ஆதாரங்களையும் பகிர்ந்து கொள்தலும் இருந்து வருகிறது. விடுதலை பெறும் தறுவாயில் நிகழ்ந்த தேசப் பிரிவினையின் அனுபவங்கள், அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்களை பாதிக்கச் செய்தது. இதுவே கூட்டாட்சி
கேள்வியில் பிறந்த வரலாற்றுச் சித்திரம்
Guns Germs and Steel அமெரிக்க நாட்டைச் சேர்ந்த உயிரியல் விஞ்ஞானி பால் மயர்ஸ் இவ்வாறு கூறுகிறார். என்னுடைய நாட்டை வேறொரு நாடு கைப்பற்றி விட்டதாக வைத்துக் கொள்வோம். உடனே நாட்டை விட்டு வெளியேறியதாக வேண்டும். உடமைகள் அனைத்தையும் விட்டு விட்டுச் செல்ல வேண்டும். ஆனால் 7 அல்லது 8 புத்தகங்களை மட்டும் எடுத்துச் செல்ல முடியும். புத்தகங்களை தேர்வு செய்ய 5 நிமிடங்கள் மட்டுமே கால அவகாசம் உள்ள நிலையில் என்னுடைய பட்டியலில் முதலில் இடம்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
