சி.பி.ஐ(எம்) கட்சி திட்டம் குறித்த சிறு குறிப்பு …
கட்சித் திட்டம்
மத்திய கட்சிக் கல்வி குறிப்பு
கட்சித் திட்டம் மற்றும் கட்சித் அமைப்புச் சட்டம் ஆகிய இரண்டும், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் அடிப்படை ஆவணங்களாக உள்ளன.
இந்தியாவில் வசித்துவரும் 18 வயது நிரம்பிய எவரும், கட்சியின் திட்டத்தையும், அமைப்புச் சட்டத்தையும் ஏற்றுக்கொண்டு, கட்சியில் செயல்படலாம். கட்சியின் உறுப்பினர் கட்டணம், கட்சி நிர்ணயிக்கும் லெவி மற்றும் பிற கட்டணங்களை முறையாக செலுத்துவதுடன், கட்சியின் முடிவுகளை நடைமுறைப்படுத்தும் எவரும், கட்சி உறுப்பினராக செயல்படத் தகுதியானவரே. கட்சியின் திட்டம், இந்திய புரட்சியின் மூல உத்தியையும் பாதையையும் வரையறுத்துச் சொல்கிறது. புரட்சியை வெற்றிகரமாக்கிடும் மூல ஆதாரமாக கட்சியின் அமைப்புச் சட்டம் உள்ளது.
கீழே குறிப்பிட்டுள்ள 4 பகுதிகளாக கட்சித் திட்டத்தை பயில்வோம்.
- · அ. கட்சியின் திட்டத்தை புரிந்துகொள்வதற்கு அடிப்படையான 5 மூல கருத்துகள்.
- · ஆ. கட்சித் திட்டத்தின் 5 பண்புகள்
- · இ. கட்சித் திட்டத்தின் சாரமாக உள்ள 5 கேள்விகளும் அதற்கான விடைகளும்
- · ஈ. கட்சித் திட்டத்தின் முக்கியமான 8 பகுதிகள்
கட்சித் திட்டத்தை காலப்படுத்துதல்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உருவாக்கப்பட்ட 1964ஆம் ஆண்டு நவம்பர் மாதம், கல்கத்தாவில் நடைபெற்ற 7வது கட்சி மாநாட்டில், கட்சித் திட்ட ஆவணம் உருவாக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1992ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற 14 ஆவது கட்சி மாநாடு 1990களில் சர்வதேச மற்றும் தேசிய நிலைமைகளில் ஏற்பட்ட முக்கியமான மாறுதல்களின் பார்வையில் கட்சியின் திட்டத்தை காலப்படுத்துவது என்ற முக்கியமான முடிவை எடுத்தது. மூன்று மாத காலம் நாடு முழுவதும் நடைபெற்ற தீவிரமான உட்கட்சி விவாதங்களுக்கு பின்னர், 2000ஆம் ஆண்டில், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் கட்சியின் திட்ட ஆவணம் காலப்படுத்தப்பட்டது.
சோவியத் யூனியனிலும், ஐரோப்பாவிலும் 1989 முதல் 1991 வரை நிகழ்ந்த சரிவுகளின் விளைவாக உருவான, உலகளாவிய, தீவிர ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புகளினால், சர்வதேச நிலைமைகளில் முக்கியமான மாற்றங்கள் ஏற்பட்டன. இந்த மோசமான வளர்ச்சிகள் உலக அளவில் வர்க்க பலாபலன்களில் மாற்றங்களை உருவாக்கியதுடன் உலகம் முழுவதும் உள்ள உழைப்பாளி மக்கள் இடையிலும், இடதுசாரி மற்றும் முற்போக்கு சக்திகள் இடையிலும், முற்றிலும் மோசமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. இவையே கட்சித் திட்டத்தை காலப்படுத்துவதற்கான முக்கியமான முதல் காரணம் ஆகும்.
தேசிய அளவில் இரண்டு முக்கியமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அவைகளில் ஒன்று, 1991ஆம் ஆண்டில் ஏகாதிபத்திய கட்டளையை ஏற்ற அன்றைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, தாராளமய, உலகமய, தனியார்மய கொள்கைகளை, அதாவது புதிய தாராளமய கொள்கைகளை, நாட்டில் தொடங்கி வைத்தது. சோவியத் யூனியன் மற்றும் ஐரோப்பாவில் சோசலிசத்தின் வீழ்ச்சியின் இயற்கையான விளைவுகளால், இந்த ஏகாதிபத்திய நிர்பந்தங்கள் உச்சம் அடைந்தன. இந்த தாராளமய, தனியார்மய, உலகமய கொள்கைகளின் கீழ் தான் இந்தியாவின் அடுத்தடுத்து வந்த மத்திய அரசுகள். செயல்படுகின்றன. அவற்றை முன்னெடுத்துச் செல்கின்றன.
இரண்டாவது, ஆர் எஸ் எஸ் மற்றும் அதன் பரிவாரங்களால் 1980களின் பிற்பகுதியில் முன்னெடுக்கப்பட்டு, 1992 டிசம்பர் 6 ஆம் நாள் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு, 1998இல் மத்தியில் பாஜக தலைமையில் அணி ஆட்சியை கைப்பற்றிய பின் ஏற்பட்ட, கடுமையான வகுப்புவாத ஆபத்துகள் ஆகும். தேசிய அளவில் உருவான இந்த இரண்டு முக்கியமான மாற்றங்கள்தான், கட்சித் திட்டத்தை காலப்படுத்துவதற்கான இரண்டாவது முக்கியமான காரணம் ஆகும்.
இந்த முக்கியமான வளர்ச்சி போக்குகளின் விளைவாக கட்சித் திட்டத்தை காலப்படுத்துவதில், பல்வேறு அத்தியாவசியமான மாறுதல்களை செய்ய நேரிட்ட போதிலும், இன்றைக்கும் பொருத்தமானதாகவே அது நீடிக்கிறது. புரட்சியின் அடிப்படை நிலைப்பாட்டில் எந்தவிதமான. மாறுதலும் செய்யப்படவில்லை. அதனால்தான் நாம் 2000ஆம் ஆண்டில் நம்முடைய கட்சித் திட்டம் காலப்படுத்தப்பட்டதே தவிர மாற்றப்படவில்லை என தெளிவாகக் கூறுகிறோம்.
சர்வதேசிய மற்றும் தேசிய அளவில் சவால்கள் நிறைந்த இன்றைய காலகட்டத்தில், கட்சித் திட்டம் காட்டும் பாதையின் மீது சரியான பிடிமானம் கொள்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என கட்சி கருதுகிறது. கட்சியின் வகுப்புகளை எடுப்பதற்கு முன்னர் கட்சி ஆசிரியர்கள் கட்சித் திட்டத்தை முதன்மையாகப் படித்து உணர வேண்டும் என சொல்லவேண்டியதில்லை. அத்தகைய முறையில் பயிலுவதற்கான துணையாகவே இந்த குறிப்புகள் அமைந்துள்ளன.
அ. கட்சித் திட்டத்தை புரிந்து கொள்வதற்கான அடிப்படையான ஐந்து கருத்துக்கள்
1. கட்சித் திட்டம்: இது புரட்சியின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் புரட்சியை வெற்றிகரமாக நடத்தி முடிக்க கட்சி முடிவு செய்யும் நிலைப்பாடே (மூல உத்தி) ஆகும். மூல உத்திக்கும். நடைமுறை உத்திக்கும் இடையிலான வேறுபாடுகளை புரிந்து கொள்வது முக்கியமானதாகும். எளிமையான வார்த்தைகளில் சொல்வதெனில், ஒரு போரில் வெற்றியடைவதற்கான நிலைப்பாடு – மூல உத்தி ஆகும். நடைமுறை உத்தி என்பது, ஒரு குறிப்பிட்ட சண்டையில் வெற்றி பெறுவதற்கான உத்தியாகும்.
உதாரணமாகச் சொன்னால், சோவியத் யூனியனும், அதனுடைய செம்படையும், நான்காண்டு நீடித்த இரண்டாவது உலகப்போரில், நாசிச அச்சுறுத்தலை எதிர்த்து வகுத்த, நீண்டகால நிலைப்பாட்டை குறிப்பிடலாம். இருப்பினும், அவர்களும், மாஸ்கோ, லெனின்கிராட், ஸ்டாலின்கிராட் மற்றும் இதர பகுதிகளில் நடைபெற்ற சண்டைகளில் குறிப்பிடத்தக்க சில நடைமுறை உத்திகளை வகுக்க வேண்டியிருந்தது. அதே போலத்தான், மக்கள் ஜனநாயக புரட்சியை வென்றெடுக்க நீண்டகால நிலைப்பாட்டை நமது கட்சி வகுத்துள்ளது. அதேநேரம் கட்சி மாநாடுகளின் அரசியல் தீர்மானங்கள் மற்றும் கட்சியின் மத்தியக் குழு எடுக்கும் முடிவுகள் வழியாக, அவ்வப்போது முன்வரும் அரசியல் சவால்களை சந்திக்க நடைமுறை உத்திகளும் வகுக்கப்படுகின்றன. எவ்வாறாயினும், நமது நடைமுறை உத்திகள் எப்போதும் நமது மூல உத்திக்கு உகந்தே அமையும்.
2. புரட்சி: அடிப்படையான அரசியல், பொருளாதார மற்றும் சமூக மாற்றத்திற்கு இட்டுச் செல்லக்கூடிய விதத்தில், வரலாற்று ரீதியிலானதொரு முற்போக்கான வர்க்கம், மற்றொரு வர்க்கத்தின் அரசியல் அதிகாரத்தை தூக்கி எறிவதே புரட்சி எனப்படுகிறது.
1789ஆம் ஆண்டு நடைபெற்ற பிரெஞ்சு புரட்சியில் நிலப்பிரபுத்துவ வர்க்கம் முதலாளித்துவ வர்க்கத்தால் தூக்கி எறியப்பட்டு, நிலபிரபுத்துவ ஆட்சிமுறைக்கு பதிலாக, முதலாளித்துவ ஆட்சி முறை வந்தது. அதேபோலத்தான் 1917ஆம் ஆண்டில் நடைபெற்ற ரஷ்ய புரட்சியிலும், 1949ஆம் ஆண்டு நடைபெற்ற சீனப் புரட்சியிலும், தொழிலாளர் மற்றும் விவசாயிகள் கூட்டணியை ஏற்படுத்திய தொழிலாளி வர்க்கம், அரசு அதிகாரத்தில் இருந்த முதலாளித்துவ மற்றும் நில உடமை வர்க்கத்தை தூக்கி எறிந்து, அந்த இடத்தில் சோசலிச ஆட்சி முறையை ஏற்படுத்தியது. மேற்குறிப்பிட்ட மூன்று புரட்சிகள் போல, அல்லது வெறுமனே அரசுகளின் மாற்றம் என்பதை, புரட்சி என்று பொருள்படுத்த முடியாது என்பதை அழுத்தமாக குறிப்பிட்டாக வேண்டும்.
வரலாற்றுப் பொருள் முதல்வாத கோட்பாடுகளின்படி புதிய உற்பத்தி உறவுகளுக்கும், பழைய உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் தீவிரமடையும். முதலாளித்துவத்தில் உற்பத்தி சக்திகளின் தனி உடமைக்கும் சோசலிச இயல்புக்கும் இடையிலான முரண்பாடுகள் மைய முரண்பாடுகள் ஆகும். வர்க்கப் போராட்டம் ஒரு தீர்மானகரமான தன்மையை அடையும்போது, அது புரட்சிகர மாற்றத்திற்கு இட்டுச் செல்லும். அளவு மாற்றம், பண்பு மாற்றத்துக்கு இட்டுச் செல்லும். ஆனால் புரட்சியின் வெற்றிக்கு புறக் காரணி (புற நிலைமைகள் உகந்ததாக இருப்பது) மற்றும் அகக் காரணி (புரட்சிகர சக்திகள் தகுதி படைத்ததாக தயாரிப்புடன் இருப்பது) ஆகிய இரண்டும் அவசியமாகும்.
1991ஆம் ஆண்டு சோவியத் யூனியனில் பின்னடைவு ஏற்பட்டது. தொழிலாளி வர்க்கத்தின் கைகளில் இருந்த அரசு அதிகாரம், மீண்டும் முதலாளித்துவ வர்க்கத்தின் கைகளுக்கு மாறி போனது. இதுதான் எதிர்ப்புரட்சி என்பதாகும். சோசலிச புரட்சியே ஆனாலும், அது பாதுகாக்கப்படாமலோ அல்லது முன்னெடுத்துச் செல்லாமலோ போனால் அது பின்னடைவை சந்திக்க நேரிடும் என்ற முக்கியமான படிப்பினை இதன்மூலம் நமக்கு கிடைத்துள்ளது.
சோசலிசத்தையும் அதனுடைய பலவீனங்களையும் தலைகீழாக மாற்றிட, அந்த நாட்டில் ஏகாதிபத்திய சக்திகளும், பிற்போக்கு சக்திகளும் ஓரணியாக சேர்ந்தன. எனவே, மக்களை நம்மிடமிருந்து தனிமைப்படுத்தி, வர்க்க எதிரிக்கு உதவக்கூடிய வகையிலான முக்கியமான தவறுகள் நிகழாத வண்ணம் பார்த்துக் கொள்வதில், புரட்சிகர சக்திகள் கவனமாக இருக்க வேண்டும்.
3. வர்க்கப் போராட்டம்: இது ஒன்றுக்கொன்று நேர் எதிரான நலன்களை கொண்ட சுரண்டும் வர்க்கத்துக்கும் சுரண்டப்படும் வர்க்கத்திற்கும் இடையிலான போராட்டமாகும்.
கம்யூனிஸ்ட் அறிக்கையில் மார்க்சும் எங்கல்சும், “இதுநாள்வரையில் நிலவி வந்துள்ள சமுதாயத்தின் வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டத்தின் வரலாறு ஆகும்” என குறிப்பிட்டனர். பொதுவாக சொல்வதெனில், உற்பத்தி சக்திகளை உடமையாகக் கொண்டுள்ளவர்கள் சுரண்டும் வர்க்கம் எனவும், உற்பத்தி சக்திகளை உடமையாகக் கொள்ளாதவர்கள் சுரண்டப்படும் வர்க்கம் எனவும் அழைக்கப்படுகின்றனர். இந்த இரண்டு வர்க்கங்களுக்கு இடையிலான நீடித்த மோதலே ‘வர்க்கப் போராட்டம்’ என அறியப்படுகிறது.
வர்க்கப் போராட்டத்தில் பல வடிவங்கள் உள்ளன.
அவையாவன:
- 1) பொருளாதார,
- 2) அரசியல்,
- 3) சமூக,
- 4) தத்துவார்த்த,
- 5) கலாச்சார-இலக்கியம்
பொருளாதாரத்தில் வர்க்கப் போராட்டம்தான் மிக அடிப்படையான, உலகளாவிய தன்மை கொண்ட, வர்க்க போராட்டமாகும். உதாரணமாக, உயர்த்தப்பட்ட ஊதியத்துக்கான மற்றும் சமூக பாதுகாப்புக்காக தொழிலாளி வர்க்கம் நடத்தும் போராட்டங்களும், தங்களுடைய பயிர்களுக்கான போதிய விலை மற்றும் இதர உரிமைகள் கோரி விவசாயிகள் நடத்தும் போராட்டங்களும் ஆகும். ஆனால் லெனின் தெளிவாக விளக்கியுள்ளது போல, பொருளாதார வர்க்க போராட்டங்கள் எவ்வளவுதான் விரிவாகவும் தெளிவாகவும் நடத்தப்பட்டாலும், அவை புரட்சிக்கு இட்டுச் செல்லத்தக்கதாக அமைகிறது என்று கூற முடியாது. இந்தக் கூற்றை நிரூபிக்க ஏராளமான உதாரணங்களை கூறலாம்.
தங்களுடைய போராட்டத்தில் கிடைக்கும் சொந்த அனுபவங்களின் ஊடாக தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் மற்றும் வர்க்க உணர்வை உயர்த்துவது என்பது கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்காகும். அரசியல் வர்க்கப் போராட்டங்களை தீவிரப்படுத்தினால்தான் சுரண்டும் வர்க்கத்திடம் இருந்து அரசு அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற உணர்வு மக்கள் திரளிடம் அதிகரிக்கும். அதுதான் புரட்சிக்கு இட்டுச் செல்லும். அரசியல் வர்க்க போராட்டங்கள்தான் வர்க்கப் போராட்டங்களின் உயர் வடிவங்களாகும். வர்க்கப் போராட்டத்தின் சமூக, தத்துவார்த்த, கலை – இலக்கிய வடிவங்கள் அரசியல் வர்க்கப் போராட்டத்திற்கு பெருமளவில் உதவி செய்துள்ளன. இந்தியாவில், குறிப்பாக மிகவும் பிற்போக்குத்தனமான, வர்ணாசிரம/சாதிய முறையிலான பல்வேறுபட்ட சமூக காரணிகள் உள்ளன. இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானதும் கண்டிக்கத்தக்கதுமான, பெண்களுக்கும், சாதி அடுக்கில் கீழே உள்ளவர்களுக்கும் எதிரானதுமான, மனு ஸ்மிருதி (மனுவின் சட்டங்கள்), இன்றும் தீவிரமாக நடந்துவரும் சாதிய வன்கொடுமைகள், ஒடுக்குமுறைகள் மற்றும் தாராளமயக் கொள்கைகளின் விளைவாக உருவாகியுள்ள வகுப்புவாதக் கலவரங்களும், சிறுபான்மையினரைக் குறிவைத்த தாக்குதல்களும், வர்க்கப் போராட்டங்களை அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை என கட்சி கருதுவதற்கான காரணங்களாக அமைந்துள்ளன.
அதனால்தான் கம்யூனிஸ்ட் கட்சி ராஜாராம் மோகன் ராய், ஈஸ்வர் சந்திர வித்யாசாகர், மகாத்மா ஜோதிராவ் பூலே, சாவித்ரிபாய் புலே, சாகு மகராஜ், ஈ. வே. ராமசாமி பெரியார், நாராயணகுரு மற்றும் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஆகியோர் பிரதிநிதித்துவப்படுத்திய. இந்திய சமூக சீர்திருத்த இயக்கங்களின் பழமையான பாரம்பரியத்தை உணர்வு பூர்வமாக முன்னெடுத்து செல்ல வேண்டும் என கருதுகிறது.
கம்யூனிஸ்ட் கட்சி பொருளாதார சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களை நடத்தும் அதே வைராக்கியத்துடன், சமூக, ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் போராட வேண்டும். தத்துவார்த்த காலத்திலான வர்க்க போராட்டங்கள், ஏகாதிபத்திய தாக்குதல்கள், புதிய தாராளமய கொள்கைகள், வகுப்புவாதம், சாதியம், அடையாள அரசியல் போன்ற பலவற்றிற்கு எதிரானதாக நடத்தப்பட வேண்டியுள்ளது. இவை இல்லாமல் மக்கள் திரளை நம் பக்கம் நாம் வென்றெடுக்கவே இயலாது. கலாச்சார மற்றும் இலக்கிய வடிவிலான வர்க்க போராட்டங்கள். இந்த நோக்கத்திற்காக திறம்பட நடத்தப்பட வேண்டும். முற்போக்கு எழுத்தாளர் சங்கம், இந்திய மக்கள் நாடக சங்கம் மற்றும் பல அமைப்புகளோடு இணைந்து இயங்கி பல முற்போக்கான போராட்ட இயக்கங்களை முன்னெடுத்துச் சென்ற பல ஜாம்பவான்களின் நாடு இந்த நாடு. இன்றும் முற்போக்கு எழுத்தாளர் சங்கம், ஜனம் நாடக அமைப்பு மற்றும் சஹமத், லெஃப்ட் வேர்ல்ட், பாரதி புத்தகாலயம் போன்ற வெளியீட்டங்கள் நாடு முழுவதும் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றன.
4. அரசு: அரசு என்பது சுரண்டப்படும் வர்க்கங்களை சுரண்டும் வர்க்கங்கள் அடக்கி ஒடுக்குவதற்காக முன்னெடுக்கப்பட்ட, அமைப்பாக்கப்பட்ட ஓர் ஒடுக்குமுறைக் கருவியாகும். இந்திய முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அரசமைப்பில், சுரண்டும் ஆளும் வர்க்கங்கள் தனது அரசின் பல அமைப்புகளை சுரண்டப்படும் வர்க்கங்களை அடக்கி ஆள்வதற்கு பயன்படுத்தி வருகின்றன.
மக்களுக்கு எதிராக, காவல்துறை, ராணுவம், சிறைத்துறை, அதிகார வர்க்கம் மற்றும் நீதித்துறை மட்டுமன்றி, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. வருமான வரித்துறை மற்றும் கொடுமையான சட்டங்களான யு.ஏ.பி.ஏ, என்.எஸ்.ஏ ஆகியவை ஏவப்படுவதுடன், அரசாங்கங்களின் அரசியல் நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. கார்ப்பரேட்டுகளுக்கு சொந்தமான பெருமளவிலான அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள், ஊடக சுதந்திரத்தை தூக்கி எறிந்து, கொஞ்சமும் வெட்கம் இன்றி ஆளும் வர்க்கங்களை ஆதரித்து, அவர்களுக்கு சாதகமான பொதுமக்களின் கருத்துகளை உருவாக்க முயன்று வருகின்றனர்.
மேலும், மதம், சாதியம், வகுப்புவாதம் மற்றும் மொழி ஆகியவற்றை ஆளும் வர்க்கங்கள் மக்களை பிளவுபடுத்த பயன்படுத்தி வருகின்றன. பாஜக/ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான இன்றைய அரசாங்கம் முன்னெடுக்கும் கொள்கைகள் கொஞ்சமும் வெட்கம் இல்லாத கார்ப்பரேட் ஆதரவு மற்றும் நவதாராளமய கொள்கைகளை மக்களுக்கு எதிராக முன்னெடுப்பது மிகத் தெளிவாக தெரிகின்றது. லெனின் எழுதிய அரசும் புரட்சியும் என்ற நூல் இது போன்ற விஷயங்களை ஆழமாக பரிசீலிக்கின்றது. புரட்சிகர முன்னணியினர் அதனை கற்று உணர வேண்டியது அவசியமாகும்.
5. சோசலிசம்: சோசலிசம் எனில், உற்பத்தி சக்திகளின் தனி உடமையை முற்றாக ஒழித்து, அந்த உடமையை சமூகத்தின் கைகளுக்கு மாற்றி, மனிதனை மனிதன் சுரண்டுவதை முடிவுக்கு கொண்டு வருவது என்று பொருளாகும். உற்பத்தி சக்திகளின் தனி உடமைக்கும் சுரண்டும் முறைகளுக்கும் எதிரான போராட்டம், அவ்வளவு எளிதில் உடைக்க முடியாத உறவுகளைப் பற்றி மார்க்ஸ் தன்னுடைய அரசியல் பொருளாதார கோட்பாடுகளில் தெளிவாக விளக்கியுள்ளார்.
முதலாவதாக, சோசலிசத்தின் கீழ், முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகள் இறுதியாக்கப்பட்டு, சுரண்டல் முடிவுக்கு கொண்டுவரப்படும். இரண்டாவதாக, உற்பத்தி சக்திகளின் மீதான கட்டுக்கள் நீக்கப்பட்டு, ‘லாபத்திற்கான உற்பத்தி’ என்பது ‘தேவைக்கான உற்பத்தி’ என மாற்றியமைக்கப்படும்போது, சோசலிச சமுதாய அமைப்பில் அபரிமிதமான உற்பத்தி எட்டப்படும். மூன்றாவதாக, சோசலிச அமைப்பில் ஒவ்வொருவருக்கும் ‘திறமைக்கேற்ற’ என்கிற கோட்பாடு, ‘வேலைக்கேற்ற’ என்கிற கோட்பாடாக மாற்றப்படும். வறுமை, பட்டினிக் கொடுமை, வேலையின்மை, கல்வியின்மை, நோய் நொடிகள், சமத்துவமின்மை ஆகியவைகளுக்கான பாதைகள், இந்த மூன்று அம்சங்கள் மூலமாக சோசலிச சமுதாயத்தில் திறம்பட முடிவுக்கு கொண்டு வரப்படும்.
சிந்தனை உழைப்பிற்கும் உடல் உழைப்புக்கும், நகரங்களுக்கும் கிராமங்களுக்கும், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான வேறுபாடுகள் குறையத் தொடங்கும். சோசலிசத்தின் கீழ், வகுப்புவாதமும் சாதியம், பெண் அடிமைத்தனம் ஆகியவற்றின் மீதிருக்கும் பிடிமானங்களைக் குறைப்பதற்காக பொருள் முதல்வாத சூழ்நிலைகள் உருவாக்கப்படும். இந்த போராட்டம் புரட்சிக்குப் பின்னரும் உறுதிபட முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். புதிய மதிப்பீடுகளுடன் கூடிய, புதிய ஆணையும், பெண்ணையும் உருவாக்கக்கூடிய செயல்முறைகள் சோசலிசத்தில் படிப்படியாக வளர்ச்சி பெற்று நடைமுறைக்கு வரும்.
சோசலிச நாடு எந்த ஒரு நாடும் தன்னை சுரண்டுவதை அனுமதிக்காது. சுரண்டவும் செய்யாது. ஏனெனில். ஆவேசமானதும் சுரண்டும் தன்மையுள்ளதுமான ஏகாதிபத்தியம் சோசலிசத்திற்கு மட்டுமல்ல; எல்லா புரட்சிகர மற்றும் கம்யூனிச சக்திகளுக்கு மிகப்பெரிய எதிரியாகும். ரஷ்யா, சீனா, வியட்னாம், கொரியா, கியூபா என எல்லா புரட்சிகர சக்திகளும் ஏகாதிபத்தியத்தை முறியடித்த பின்னரே வெற்றி பெற்றன. ஆனால் அதே நேரத்தில் ஜெர்மனி இத்தாலி, ஸ்பெயின், இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் ஏகாதிபத்தியமும், பாசிசமும், இதர பிற்போக்கு சக்திகளும் இணைந்து கம்யூனிஸ்டுகளையும் சோசலிஸ்டுகளையும், ஜனநாயக சக்திகளையும் கொன்று குவித்தார்கள் என்கிற மோசமான உதாரணமும் நம் முன் உண்டு.
ஆ. கட்சித் திட்டத்தின் ஐந்து பண்புகள்
1. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சித் திட்டம், மார்க்சிய லெனினியத்தை இந்தியாவின் நிலைமைகளை திட்டவட்டமாக ஆய்வு செய்து பொருத்தப்பட்ட வெற்றிகரமான முதல் முயற்சியாகும்.
இதற்கு முன்னமே ஒரு கட்சித் திட்டத்தை வடிவமைப்பதற்கான ஒரு சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவை குறித்த விபரங்களை தோழர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் ஆவணப்படுத்தியுள்ளார். சட்டவிரோதமான கட்சியாக செயல்பட்டு கொண்டிருந்த 1921 மற்றும் 1922 காலகட்டங்களில், கட்சித் திட்டத்தின் ஒரு சில அடிப்படையான அம்சங்களை வரையறுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அலகாபாத் மற்றும் கயா காங்கிரஸ் மாநாடுகளில் பூரண சுதந்திரம் என்ற முழக்கம் முன்வந்ததன் மூலம், இது வெளிப்பட்டது. பின்னர் 1930ஆம் ஆண்டில் செயல் மேடைக்கான ஒரு வரைவு தயாரிக்கப்பட்டது. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கடுமையான அடக்குமுறைகள் நிலவிய சூழலில், ஒருங்கிணைக்கப்பட்ட, மையப்படுத்தப்பட்ட ஒரு தலைமை உருவாக்கப்பட்டு, நடைமுறைக்கு வராத சூழலில் இது வடிவமைக்கப்பட்டது.
மீரட் சதி வழக்கின் கைதிகள் விடுதலை ஆன பின்னர், 1933 டிசம்பர் மாதம் தற்காலிக மத்தியகுழுவினால் இரண்டாவது அரசியல் ஆய்வு அறிக்கை வரைவு ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1935இல் நடைபெற்ற கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஏழாவது மாநாடு நடைபெற்ற பின்னர், 1936ஆம் ஆண்டு மூன்றாவது நடவடிக்கைக்கான செயல்முறை ஆவணம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஒரு அங்கமாக நமது கட்சியை அங்கீகரித்ததை தொடர்ந்து, ‘நடவடிக்கைக்கான மேடையின்’ அடிப்படையில் இயற்றப்பட்டது. 1943ஆம் ஆண்டு பம்பாயில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் அகில இந்திய மாநாடு நடைபெற்றபோது, வழிகாட்டுதல் வடிவத்தில் திட்டம் சம்பந்தமான பரந்த அடையாளங்கள் தென்பட்டன. 1951ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட அதற்கடுத்த முயற்சியானது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அஜய் கோஷ், எம். பசவபுன்னய்யா எஸ்.ஏ.டாங்கே மற்றும் சி. ராஜேஸ்வரராவ் ஆகியோரை உள்ளடக்கிய பிரதிநிதிகள், மாஸ்கோவிற்கு சென்று ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களை சந்தித்து வந்ததும் நடைபெற்றது. அதற்குப் பிறகு நடைபெற்ற ஒரு சிறப்பு மாநாட்டில், கட்சியின் திட்ட வரைவு ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் அதில் பல்வேறு குறைபாடுகள் இருந்ததால், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு 1955 இல் நிறுத்திவைக்கப்பட்டது. கட்சித் திட்டம் இப்படிப்பட்ட பாதையை கடந்து வந்துள்ளது.
இறுதியாக, கொல்கத்தா 1964இல் நடைபெற்ற ஏழாவது அகில இந்திய மாநாட்டில் புதிதாக உதயமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) -இன் கட்சித் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அது 2000 ஆண்டில் காலப்படுத்தப்படும் வரை நீடித்தது. இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றில், இந்தியாவில் நிலவும் திட்டவட்டமான நிலைமைகளுக்கு ஏற்ப, மார்க்சிய லெனினியத்தை சரியாக பொருத்திச் செயல்படும் முயற்சியில் இதுவே முதல் வெற்றிகரமான முயற்சியாகும்.
2. இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் 1964க்கு முன்னர் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற அரசியல் தத்துவார்த்த உட்கட்சித் போராட்டத்தின் விளைவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் கட்சித் திட்டமாகும்.
எந்த பிரச்சனைகளில் உள்கட்சி போராட்டம் நடைபெற்றது என்பது குறிப்பில் பின்னர் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் அரசு அடக்குமுறையும் இந்த உள்கட்சிப் போராட்டத்தில் சேர்ந்து கொண்டது. 1962- 66 காலகட்டத்தில் இந்திய – சீன எல்லைப் பிரச்சனை முன்வந்தபோது சி.பி.ஐ.யின் நூற்றுக்கணக்கான தலைவர்கள் இந்திய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.ஐ) ஒரு பிரிவினர், பல மாநிலங்களில் கட்சி அமைப்புகளை கைப்பற்றிட இந்த சூழலை பயன்படுத்திக் கொண்டார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டு சி.பி.ஐ(எம்) உருவாக்கப்பட்டது. மூன்று வருடங்களுக்கு பிறகு, 1967-68 காலகட்டத்தில், அதிலிருந்து வெளியேறிய நக்சலைட்டுகள் சி.பி.ஐ(எம்)-மிற்கு தீவிரமான இடையூறுகளை ஏற்படுத்தினார்கள். இந்த ஆண்டுகளில் சி.பி.ஐ -இன் வலதுசாரி திரிபிற்கும் நக்சலைட்டுகளின் இடதுசாரி தீவிரவாத போக்கிற்கும் எதிராக சி.பி.ஐ(எம்) நிலையான, கசப்பான அரசியல் தத்துவார்த்த போராட்டத்தை நடத்த வேண்டி வந்தது.
3. கட்சித் திட்டத்தை உருவாக்கி பாதுகாத்திடும் காலகட்டத்தில், உலகின் இரண்டு மிகப்பெரிய கம்யூனிஸ்ட் கட்சிகளான சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சிக்கும். சீனா கம்யூனிஸ்ட் கட்சிக்கும் எதிரான தீவிரமான தத்துவார்த்த போராட்டத்தை நடத்த வேண்டி வந்தது.
இந்த கடுமையான காலகட்டத்தில் சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரித்தது. சி.பி.ஐ(எம்) -ஐ ‘பிளவுவாதிகள்’ என்றும் ‘ இடது தீவிரவாதிகள்’ என்றும் முத்திரை குத்தியது. சோவியத் யூனியனுக்கு நெருக்கமாக இருந்த உலகின் பல்வேறு கம்யூனிஸ்ட் கட்சிகள் இதே பார்வையை கொண்டிருந்தன. சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு காரணமாக 1975 – 77 களில். காங்கிரஸ் கட்சியால் உருவாக்கப்பட்ட எதேச்சதிகார அவசரநிலையை பகிரங்கமாகவே ஆதரிக்கும் நிலைக்கு சி.பி.ஐ – யை இட்டுச்சென்றது.
1960 இல் சீனாவில் தொடங்கிய ‘ கலாச்சாரப் புரட்சிக்கு’ பின்னர், சீன கம்யூனிஸ்ட் கட்சி நக்சலைட்டுகளை முழுமையாக ஆதரித்ததுடன் சி.பி.ஐ(எம்)-ஐ ‘புதிய திருத்தல்வாதிகள்’ என பெயரிட்டு அழைத்தது. இவ்வாறு சி.பி.ஐ(எம்) தொடங்கப்பட்ட முதல் 20 ஆண்டுகளுக்கு, உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருந்து அது முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த காலகட்டத்தில் நம்முடன் சகோதர உறவை பராமரித்த மாண்பிற்குரிய இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளில் ஒன்று வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி. அவசரகால சட்டத்தை காங்கிரஸ் திணித்த பின், 1977இல் நடைபெற்ற பொதுத் தேர்தல்களின் முடிவுகளுக்குப் பின்னர் நிலைமையே தலைகீழாக மாறிப் போனது. சி.பி.ஐ(எம்) எழுச்சி பெற ஆரம்பித்தது.
மேற்கு வங்கம், திரிபுரா மற்றும் கேரளாவில் சி.பி.ஐ(எம்) தலைமையிலான இடதுசாரி அரசுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. நமது கட்சி இந்திய மக்களிடையே தனக்கு உள்ள செல்வாக்கை நிரூபித்து அடைந்த இந்த முன்னேற்றங்களுக்கு பின்னர்தான், ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி, சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இரண்டும் உலகின் இதர கம்யூனிஸ்ட் கட்சிகளும் சி.பி.ஐ(எம்) உடனான சகோதர உறவை மீண்டும் புதுப்பித்துக் கொண்டனர்.
4. கடந்த 60 ஆண்டுகளாக சோதனைக் காலகட்டத்தில் சி.பி.ஐ.(எம்) தொடர்ந்து களத்தின் முன்னணியில் நிற்கிறது.
சி.பி.ஐ(எம்) உருவாக்கிய கட்சித் திட்டத்தின் அடிப்படையான நிர்ணயிப்புகள் இன்றும் மாறாமல் அப்படியே நீடிக்கின்றன. ஆனால் சி.பி.ஐ 1964ஆம் ஆண்டு உருவாக்கிய திட்டத்தில் பெரும்பான்மையான மாறுதல்களை செய்தது. அதன் பிறகும் பல சரியற்ற நிர்ணயிப்புகள் இன்னமும் தொடர்கின்றன. நக்சலைட்டுகளை பொறுத்தவரை, அவர்களுடைய அடிப்படை தத்துவார்த்த திவால் தன்மை காரணமாக பின்னாட்களில் தனித்தனி திட்டம் என்ற வகையில் பல குழுக்களாக சிதறுண்டு போயினர். அவற்றில் ஒன்றே ஒன்று, அதாவது சி.பி.ஐ (எம்எல்), அசல் நக்சலைட் வழிமுறைகளை கைவிட்ட பின்னர், ஒரே ஒரு மாநிலத்தில், அதாவது பீகாரில், சற்று முன்னேற்றம் அடைந்துள்ளது. தடை செய்யப்பட்ட சி.பி.ஐ (மாவோயிஸ்ட்) தன்னுடைய வன்முறை நடவடிக்கைகளை தொடருகிறது. அது சில மாநிலங்களில் வனப் பகுதிகளில் மட்டுமே தன்னை கட்டுப்படுத்திக் கொண்டது.
5. ஒட்டுமொத்த கட்சியுமே சி.பி.ஐ(எம்) கட்சித் திட்டத்திற்காக போராடிய போதிலும், கட்சியின் முதல் அரசியல் தலைமைக்குழு, அதாவது நவரத்தினங்கள் என அழைக்கப்படும் தலைவர்கள், மிகவும் மதிப்பு வாய்ந்த பங்களிப்பை செலுத்தி உள்ளனர். உள்கட்சியில் நடைபெற்ற அரசியல் தத்துவார்த்த போராட்டத்தில், அவர்களால் எழுதப்பட்ட பல கருத்தாழம் மிக்க ஆவணங்கள், இன்றளவிலும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவர்கள் அனைவருமே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த விடுதலைப் போராட்டக் களத்தில், உருக்கு போல உருவானவர்கள் என்பது மட்டுமல்ல; விடுதலைக்கு முன்பும் சரி, விடுதலைக்குப் பின்னரும் சரி, சிறைக் கொட்டடிகளில் பல ஆண்டுகாலம் சிறைத்தண்டனை கொடுமைகளை சந்தித்தவர்கள். அத்துடன் எண்ணற்ற வர்க்க மற்றும் மக்கள் திரள் போராட்டங்களில் முன்னின்று செயல்பட்டவர்கள். அவர்களுடைய பரந்த ஆழமான அனுபவங்கள் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு ஒரு கூட்டான, தீர்க்கமான அரசியல், தத்துவார்த்த, ஸ்தாபன யுத்தத்தை நடத்துவதற்கு உதவியுள்ளது. சி.பி.ஐ(எம்) ஒரு வலுவான அடித்தளத்தை பெற்றிடவும் உதவியுள்ளது.
இ. கட்சி திட்டத்தின் சாரம்
ஐந்து கேள்விகளும் அதற்கான விடைகளும் கட்சி திட்டத்தின் சாரத்தை புரிந்துகொள்ள உதவும்.
1.இந்திய புரட்சியின் கட்டம் என்ன?
இந்திய புரட்சியின் தற்போதைய கட்டம் மக்கள் ஜனநாயக புரட்சி. இந்த கருத்தாக்கத்தை வரலாற்றுப் பின்புலத்துடன் நாம் புரிந்து கொள்வது அவசியமாகும். 1947 ஆகஸ்ட் 15 அன்று, இந்தியா விடுதலை அடைந்ததை ஒட்டி இந்திய புரட்சியின் தேசியப் புரட்சியின் முதல் காலகட்டம் நிறைவடைகின்றது. இந்த முதல் கட்டம் என்பது அடிப்படையாக ஏகாதிபத்தியத்தை எதிர்த்த பொதுவான ஐக்கிய முன்னணியாகும். இந்த முன்னணியில் முதலாளித்துவ வர்க்கமும் ஒரு பகுதியாகும். இரண்டாவது கட்டத்தை பூர்த்தி செய்ய இரண்டு பணிகள் மிகவும் அவசியமானவை.
முதலாவதாக அன்னியகுறிப்பாக பிரிட்டிஷ் மற்றும் அன்னிய மூலதனத்தை பறிமுதல் செய்ய வேண்டும். அதன் மூலம் இந்தியமூலதனத்தின் மீது அவைகளுக்குள்ள பிடிமானத்தை ஒழித்துக் கட்ட முடியும். இரண்டாவதாகநிலப்பிரபுத்துவத்தை முழுமையாக ஒழித்துக்கட்டி நில பிரபுக்களிடம் குவிந்து கிடக்கும் நிலத்தைபறிமுதல் செய்வது தீவிரமான நில சீர்திருத்தத்தை அமுலாக்குவதன் மூலம். நிலமற்ற ஏழைவிவசாயத் தொழிலாளர்களுக்கும் ஏழை விவசாயிகளுக்கும் நிலத்தை மறு விநியோகம் செய்யவேண்டும். அது இந்திய மக்களின் பெரும்பகுதியினரின் வாங்கும் சக்தியை பெருமளவு அதிகரிக்கசெய்யும் என்பதுடன், அது தீவிரமான தொழில் வளர்ச்சியை தூண்டும் எனவே ஒட்டுமொத்த இந்தியதேசத்தின் பொருளாதாரத்தையும் பலம் அடையச் செய்யும்.
நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான முந்தைய ஆங்கிலேய மற்றும் பிரெஞ்ச் எழுச்சிகளை நினைவில் கொள்வோம். 1649 ஆம் ஆண்டு ஏற்பட்ட எழுச்சி முதல்முறையாக சார்லஸ் அரசரின் தலையை கொய்வதில் சென்று முடிந்தது. அதே போல 1793 ஆம் ஆண்டு நடைபெற்ற எழுச்சி பதினாறாவது லூயி மன்னரின் தலையை கொய்வதில் சென்று முடிந்தது. ஏனென்றால் இந்த ஆட்சிகள் நிலப்பிரபுத்துவ சூழலை பிரதிநிதித்துவப்படுத்துபவையாக இருந்தன. குறிப்பாக பிரான்ஸில் நிலப்பிரபுத்துவம்நசுக்கப்பட்டு நிலப்பிரபுக்களின் நிலங்கள் தீவிரமான சீர்திருத்த நடவடிக்கைகளின் மூலம்விவசாயிகளுக்கு மறு விநியோகம் செய்யப்பட்டது. இதுதான் முதலாளித்துவ ஜனநாயக புரட்சிஎனப்படுவது ஆகும். (ஜனநாயகம் எனில் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு முதலாளித்துவம் என்று பொருள்.ஏனெனில் அது முதலாளிகளின் முதலாளித்துவத்தால் தலைமை தாங்கப்படுகிறது)
ஆனால் 1947 ல் இந்தியா விடுதலை அடைந்த போது நிலைமை முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது.
முதலாவது, முதலாளித்துவம். வயது முதிர்ந்த நிலையில், இன்றைய வீரியத்தோடு இல்லை.
இரண்டாவது, முதலாளித்துவம் இரண்டாம் உலகப் போரின்போது பெரும் பின்னடைவைசந்தித்திருந்தது.
மூன்றாவது 1917 ஆம் ஆண்டு நடந்த மகத்தான அக்டோபர். புரட்சி மற்றும் 1945 இல் பாசிசஜெர்மனியின் மீதான சோவியத் யூனியனின் அற்புதமான வெற்றி ஆகியவை உலகில் ஒரு சோசலிசமுகாமை உருவாக்கி இருந்தன.
நான்காவது ஏகாதிபத்தியம் பலவீனமடைந்து இருந்ததுடன், இந்தியா உள்ளிட்ட பல்வேறு காலனிநாடுகளில் தேசிய விடுதலைப் போராட்டங்கள் எழுச்சி பெற்ற வண்ணம் இருந்தன.
இந்திய விடுதலையின் போது இந்திய நாட்டு முதலாளித்துவம் மிகவும் வலுவானதாகவும்முன்னேறிய சக்தியாகவும் இருக்கவில்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் முதலாளித்துவ மற்றும் நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் நலன்களைபிரதிநிதித்துவப்படுத்துகிற காங்கிரஸ் கட்சியும் முஸ்லீம் லீக் கட்சியும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன்பேரம் பேசி வந்தன. விடுதலையுடன் இணைந்து நாடு பிரிக்கப்பட்டதுடன் பல லட்சக்கணக்கானமக்கள் படுகொலை செய்யப்பட்டனர், சமரசம் எனில் இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய இரண்டுநாடுகளும் பிரிட்டிஷ் முதலாளித்துவத்தின் பொருளாதார நலன்களை பாதுகாக்கும் என்றுதான்பொருள். அதனால் தான் இரண்டு நாடுகளுமே பிரிட்டிஷ் காமன்வெல்த்தின் அங்கங்களாக இருக்கஒப்புக் கொண்டன.
இந்தியா விடுதலை பெற்ற முதல் பத்தாண்டுகளில் சுயசார்பு தன்மையில் அழுத்தம், சுதந்திரமானபொருளாதார வளர்ச்சி, பொதுத் துறைகளை கட்டி எழுப்பிட சோவியத் யூனியன் உதவி, திட்டமிடல்நடவடிக்கைகள் மற்றும் சுயேச்சையான வெளியுறவு கொள்கைகள் என சில நேர்மறையானஅம்சங்கள் இருந்தன. ஆனால் 1991 ஆம் ஆண்டில் நிகழ்ந்த சோவியத் யூனியனின் வீழ்ச்சியும் புதியதாராளமாக கொள்கைகளின் தொடக்கமும் இந்த எல்லா நேர்மறையான அம்சங்களையும் தூர தூக்கிவீசிவிட்டு எல்லா தளங்களிலும் ஏகாதிபத்தியம் மற்றும் அன்னிய மூலதனத்துடன் ஆன கூட்டுஎன்பவையே ஆட்சி என்று ஆக்கிவிட்டது.
இதே நேரத்தில் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இவர்களின் ஐரோப்பிய இணையர்கள் என்னசெய்தார்களோ? அதற்கு மாறாக இந்திய முதலாளிகள் நிலப்பிரபுக்களுடன் மோத மறுத்து விட்டார்கள்.
மாறாக இந்திய முதலாளிகள் நிலப்பிரபுத்துவத்துடன் சமரசம் செய்து கொண்டதுடன், அவர்களைதங்களுடைய அரசு அதிகாரத்தில் பங்கேற்பாளர்கள் ஆக சேர்த்துக் கொண்டார்கள், அதனால்முற்போக்கான நிலச் சீர்திருத்தம் மற்றும் நில மறுவிநியோகம் நிராகரிக்கப்பட்டது. இது தொழில்வளர்ச்சியில் மட்டுமல்லாது நாட்டின் எதிர்கால பொருளாதார வளர்ச்சியின் மீதும் கடுமையானதாக்கத்தை ஏற்படுத்தி யது. மேலும் அது நிலப்பிரபுத்துவத்துடன் நெருக்கமான உறவு கொண்டுவகுப்புவாதமும் சாதிய ஒடுக்குமுறை, ஆண் ஆதிக்கம் ஆகியவற்றை ஊக்கப்படுத்தியது. அரசு அத்தகைய சக்திகளுடன் சமரசம் செய்து கொண்டது, ஒரு காலத்தில் மதசார்பின்மையை உயர்த்திப்பிடித்த இந்திய பெருமுதலாளிகள் சில பகுதியினர் இன்று தங்களுடைய சொந்த நலன்களுக்காகபாஜகவின் ஆதரவாளர்களாக வகுப்புவாதத்தை முதன்மையாக ஆதரித்து நிற்கிறார்கள்.
தொகுத்துசொல்வதெனில் பெரு முதலாளித்துவம் ஒருபோதும் ஏகாதிபத்தியத்தையோ அல்லதுநிலப்பிரபுத்துவத்தையோ எதிர்த்து நிற்காது என்பதுடன் அது ஒருபோதும் ஜனநாயகப் புரட்சியின் லட்சியங்களை நிறைவேற்றவே நிறைவேற்றாது. அந்த இலட்சியங்களை விவசாயி வர்க்கத்துடன் கூட்டணி அமைத்துக் கொண்டு தொழிலாளிவர்க்கத்தின் தலைமையிலான புரட்சிகர போராட்டத்தின் மூலமாக நிறைவேற்றியாக வேண்டும். அதனால் தான் நாம் இன்றைய புரட்சியின் காலகட்டத்தை மக்கள் ஜனநாயக புரட்சி என்றுஅழைக்கிறோம்.
நிலப்பிரபுத்துவத்தை அடித்து நொறுக்கி தீவிர நில சீர்திருத்தத்தின் மூலம்நிலங்களை மறு விநியோகம் செய்வதன் அடிப்படையிலேயே விவசாய புரட்சியை மக்கள் ஜனநாயக புரட்சியின் அச்சு என கூறுகிறோம்.
அத்தோடு இன்னொரு கேள்வியும் தொக்கி நிற்கிறது. நாம் நேரடியாக சோசலிச புரட்சிக்கான
அழைப்பை கொடுப்பது இல்லை. இதற்கு முக்கிய காரணம் என்னவெனில் நம் நாட்டில் நிலவும்
உறுதியான புற நிலைமைகளும் மக்களின் உணர்வு மட்டமும் இன்னமும் அந்த நிலையை எட்டவில்லை
என்பதுதான்.
சோசலிசம் குறித்த விளக்கங்களை நாம் மேலே தந்துள்ளோம். ரஷ்யா, சீனா, இதர
சோசலிச நாடுகளில் செய்யப்பட்டது போலவே நாமும் சோசலிசத்தை கட்டம் கட்டமாகத்தான் அடைய
முடியும். இந்தியாவில் மக்கள் ஜனநாயக புரட்சி சிறுகச்சிறுக சோசலிசக் கட்டத்திற்கு இட்டுச்செல்லும்
என நாம் உறுதிபட நம்புகிறோம்.
2.இந்தியாவில் அரசு அதிகாரத்தை கையில் வைத்துள்ள வர்க்கங்கள் எவை?
இந்த கேள்வியும் கேள்விக்கான பதிலும் தான் கட்சி திட்டத்தில் உள்ள ஒரு புதிரான விஷயம். இந்த
பிரச்சினையில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இரு பத்தாண்டுகள் தீவிரமான அரசியல்
தத்துவார்த்த போராட்டம் நடந்துள்ளது. அத்துடன் கம்யூனிஸ்ட் இயக்கம் இரண்டாக பிளவுபடுவதற்கும்
இந்த கேள்விக்கான விடை காரணமாக இருந்துள்ளது. நமது கட்சி திட்டம் குறிப்பிடும் விடை இங்கே
சுருக்கமாக வழங்கப்படுகிறது.
- 5.1 இன்றைய இந்திய அரசு என்பது, பெரு முதலாளிகளால் தலைமை தாங்கப்படுகிற முதலாளித்துவ- நிலப்பிரபுத்துவ வர்க்க ஆட்சியின் கருவியாகும். இந்த அரசு முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையை பின்பற்றும் பொருட்டு, அன்னிய நிதி மூலதனத்துடனான தனது ஒத்துழைப்பை அதிகரித்துக் கொண்டு வருகிறது. நாட்டு மக்களின் வாழ்க்கையில் அரசின் பங்கையும், செயல்பாட்டையும் வர்க்கத் தன்மைதான் முக்கியமாகத் தீர்மானிக்கிறது.
நமது கட்சியின் திட்டம் இந்த முடிவுக்கு வருவதற்கான காரணம் என்னவென்பது பகுதி மூன்றில்
விடுதலையும், அதற்குப் பின்னரும் என விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
அடிப்படையான பிரச்சினை என்னவென்றால் சுதந்திரத்திற்கு பிந்தைய பல பத்தாண்டுகள் அரசு அதிகாரமும் கட்டுப்பாடும் தங்களிடம் இருந்ததால் இந்த ஆளும் வர்க்கங்கள் ஆன பெரு
முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் உழைக்கும் மக்களை சுரண்டுவதன் மூலமாக தங்களை வலுப்படுத்திக் கொண்டார்கள், மத்தியில் அமையப் பெற்ற ஒவ்வொரு அரசையும், இடதுசாரிகள் நீங்களாக மாநிலத்தில் அமைந்த அரசுகளையும் தங்களுக்கு சாதகமான கொள்கைகளை செயல்படுத்த ஆணையிட்டார்கள்.
1991 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசால் தொடங்கிவைக்கப்பட்ட அடுத்தடுத்து வந்த மத்திய அரசுகளால். தொடரப்பட்ட நவ தாராளமய
கொள்கை 2014 ஆம் ஆண்டில் இருந்து பாஜக தலைமையிலான மத்திய அரசால் அதி வேகமாக
நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தனியார்மயம் தாராளமயம் மற்றும் உலகமயக்
கொள்கைகள் நிலைமையை மேலும் மோசமாக்கி விட்டன.
கடந்த 30 ஆண்டுகளில் அன்னிய நிதி மூலதனத்துடன் கூட்டு செயல்பாடு அதிகரித்துள்ளது தெளிவாக
தெரிகிறது. நாட்டின் பொருளாதார கொள்கைகளை வகுக்கின்ற போது சர்வதேச ஏகாதிபத்தியத்தால்
கட்டுப்படுத்தப்பட்டு வரும் உலக வங்கி ஐஎம்எப் உலக வர்த்தக நிறுவனம் மற்றும் முறையிட்டு
நிறுவனங்களிடம் சரண் அடைந்து இருப்பதும் தெளிவாக தெரிகிறது. சமீபகாலங்களில் இது தேச
பாதுகாப்பு மற்றும் இந்திய வெளியுறவு கொள்கைகளிலும் கூட பிரதிபலித்து இவைகளையெல்லாம்
அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் அடிபணிந்த நிலையில் இருக்க செய்துள்ளன. இந்திய அரசாங்கம்
பாலஸ்தீனத்தின் நியாயங்களை புறந்தள்ளிவிட்டு இஸ்ரேலுக்கு ஆறுதல் கூறியதும், அமெரிக்கா
தலைமையிலான நாற்கர பாதுகாப்பு உரையாடல் மற்றும் I2U2 குழுக்களில் உறுப்பினராக சேர்ந்து
இருப்பதும் அண்மைக்கால உதாரணங்கள் ஆகும்.
கட்சி திட்டம். பெரு முதலாளிகளின் இந்த இரட்டைத் தன்மையை குறித்தும் குறிப்பிடுகின்றது.
பொதுவாக அது ஏகாதிபத்தியத்தோடு இணைந்து செயல்பட்டாலும் சில பிரச்சினைகளில் அது அதை
எதிர்க்கவும் செய்கிறது. ஆரம்பகாலத்தில் இருந்தே ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த
பகுதி என்ற நிலைப்பாட்டிலும், 1971 இல் பங்களாதேஷ் உருவாவதற்கு இட்டுச் சென்ற பாகிஸ்தான்
உடனான போர் பிரச்சனை மற்றும் ஷங்காய் கூட்டுறவு அமைப்பில் இந்தியா உறுப்பினராக இருக்கிற
பிரச்சனை ஆகியவைகளை உதாரணமாக குறிப்பிடலாம்.
உள்நாட்டின் பொருளாதார கொள்கைகளில் பெரும் முதலாளிகளும் அன்னிய கார்பரேட் நிறுவனங்களும் பரந்துபட்ட அளவில் மக்களின் செலவில் தங்களை செழுமைப் படுத்திக் கொள்வதை எண்ணற்ற பட்டவர்த்தனமான உதாரணங்களின் மூலம் பார்த்து வருகிறோம். 2014 ஆம் ஆண்டு பாஜக
ஆட்சிக்கு வந்த பிறகு 7 ஆண்டு காலத்தில் 11,00,000 கோடி அளவில் கார்பரேட் பெரு நிறுவனங்களின் வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஒவ்வொரு ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும் பெரு முதலாளிகள் பெருமளவிலான சலுகைகளை பெற்று வருகிறார்கள். தொழிலாளர்களை கார்பரேட் முதலாளிகளின் அடிமைகளாக மாற்றும் விதத்தில், தொழிலாளர் நல சட்டங்கள் நான்கு தொகுப்புகளாக மாற்றி வடிவமைக்கப்படுகின்றன. பொதுத்துறை நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் தீவிரமாக தனியார் மயமாக்கப்படுகின்றன. தேசிய பணமாக்கல் திட்டம். சுருங்கச் சொன்னால் நாட்டை அற்ப விலைக்கு கார்பரேட் முதலாளிகளுக்கு விற்பதாக இருக்கிறது. இதுதான்
தற்போதைய பாஜக தலைமையிலான மத்திய ஆட்சியின் போக்கு.
இதே போன்ற முயற்சி மூன்று வேளாண் சட்டங்களின் மூலம் ஒட்டுமொத்த விவசாயத்தின் மீதும் எடுக்கப்பட்டது. ஆனால் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற நீடித்த விவசாயிகளின் வீரியமிக்க போராட்டத்தினால் அது தடுக்கப்பட்டது. இந்த கொள்கைகளின் காரணமாக நாடு தழுவிய அளவில் வறுமையும், பசி பட்டினியும் வேலையின்மையும், அச்சமூட்டும் அளவில் அதிகரிக்கிறது. இதனால் மிகவும் மோசமான பாதிப்புகளுக்கு உள்ளானவர்கள்,
தலித்துகள், ஆதிவாசிகள், பெண்கள் மற்றும் சிறுபான்மையினர்தான்.
இது ஒருபுறம் இருக்க மறுபுறம் கவுதம் அதானியும், முகேஷ் அம்பானியும், உலகின் பெரிய பணக்காரர்களாக வளர்ந்து வருகிறார்கள், (ஹிண்டன்பர்க் ஏற்படுத்திய விளைவினால் அதானியின்
சொத்து மதிப்பு சரிந்திருந்தாலும் அரசின் ஆதரவும் சலுகைகளும் தொடர்கின்றன).
கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகும் கூட இந்திய மற்றும் அன்னிய கார்பரேட் நிறுவனங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் செழிப்படைந்து இருக்கிறார்கள். சமீபத்திய ஆக்ஸ்பாம் சமத்துவமின்மைசம்பந்தமான அறிக்கை இவைகளை எல்லாம் வெளிப்படுத்தியுள்ளது. அரசு அதிகாரத்தில்இருப்பவர்களின் செயல்திறன் மிக்க ஆசீர்வாதம் இல்லாமல் இவை நிகழ்ந்து இருக்காது என்பதுதெளிவு. மறுபுறம் இந்த கார்பரேட் நிறுவனங்கள் தங்களுடைய பிரம்மாண்டமான ஊடக மற்றும் பணபலத்தின் மூலம் ஆட்சியில் உள்ள பாஜகவிற்கு தாராளமாக உதவி செய்து வருகிறார்கள். ஊரகபகுதிகளில் நில உடமையாளர்களின் சொத்துக்கள் அதிகரிப்பதனால் நிலக்குவியல் அதிகரித்து,ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு நிலமற்றவர்களின் எண்ணிக்கை கூர்மையாக அதிகரித்தவண்ணம் உள்ளது.
சுரங்கத்திற்காகவும், தொழிற்சாலைகளுக்காகவும், நகர்ப்புறவிரிவாக்கத்துக்காகவும் நிலம் பலவந்தமாக கைப்பற்றப்பட்டு நில குவிப்பில் கார்பரேட்நிறுவனங்களும் களமிறங்கி உள்ளார்கள். சர்க்கரை ஆலைகள், கல்வி நிறுவனங்கள், பெட்ரோல்வினியோக மையங்கள், வேளாண் பொருள் விற்பனை நிலையங்கள் என கார்ப்பரேட்நிறுவனங்களின் கவனமும் இதில் திரும்பியுள்ளது.பெரும்பாலான ஊரக பகுதிகளில் நிலப்பிரபுக்கள் தான் அரசியல் அதிகாரத்தை தங்கள்கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்கள். கட்சி திட்டத்தின் பத்தி 5.1 துல்லியத்தன்மையை இவைகள் எடுத்துக்காட்டுகின்றன, இந்த நிர்ணயிப்புகள் 1964இல் உருவாக்கப்பட்ட அசல் திட்டத்திலேயேசெய்யப்பட்டவை என்பதையும், 2000 ஆண்டில் அதை மேம்படுத்தும் போது ஒரு சிறு மாற்றம் கூடசெய்யப்படவில்லை என்பதையும் அழுத்தமாக குறிப்பிட்டாக வேண்டும்
சி.பி.ஐ நிலைப்பாடு
இந்த முக்கியமான கேள்விக்கு சி பி ஐ மற்றும் நக்சலைட்டுகளின் பதில் என்ன?
இந்த கேள்விக்கு பதிலாக அப்போது சி பி ஐ கூறியது என்னவெனில்,
- இந்திய அரசு தேசிய முதலாளிகளின் வசம் உள்ளது, (தேசிய முதலாளிகள் என்றால் அன்னிய
மூலதன பெருமுதலாளிகளுடன் தொடர்புகள் இல்லாத சிறிய முதலாளிகள்) - பெரு முதலாளிகள் அரசின் மீது நிர்பந்தம் செலுத்துகிறார்கள். (ஆனால் அது அரசு அதிகாரத்தை
தங்கள் கைவசம் வைத்துக் கொள்ளாமல் அதை தனித்தே விட்டுள்ளது) - தேசிய முதலாளிகள் நிலப்பிரபுக்களுடன் சில சமரசங்களை மட்டுமே செய்து கொண்டு அவர்களை அரசில் அமைச்சர்களாக சேர்த்துக் கொண்டு சில சலுகைகளை தருகிறார்கள். (நிலப்பிரபுத்துவ வர்க்கம் அரசு அதிகாரத்தை கையில் வைத்துக் கொள்ளவில்லை என்பதுடன், அது அரசு அதிகாரத்தில் பங்கு கூட பெறவில்லை)
இந்த நிர்ணயிப்பின் அடிப்படையில் சி.பி.ஐ இந்திய புரட்சி என்பது தேசிய ஜனநாயக புரட்சி என்றும்அதை இந்திய முதலாளிகளும் தொழிலாளி வர்க்கமும் இணைந்தே நடத்தலாம் எனவும் கூறியது. பிரணதிவே தன்னுடைய இரண்டு கட்சி திட்டங்கள் மார்க்சிஸ்ட் மற்றும் திருத்தல்வாதிகள் என்கிறநூலில் 1964 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சி பி ஐ (எம்) திட்டத்திற்கும் சி.பி.ஐ கட்சி திட்டத்திற்கும் இடையிலான வேறுபாடுகளை மிக தெளிவாக ஆய்வு செய்துள்ளார்.
ஒற்றை வார்த்தையில் சொல்வதானால் முதலாவது வர்க்க போராட்டம் அடிப்படையிலானது,இரண்டாவது வர்க்க கூட்டின் அடிப்படையிலானது. இந்த இரண்டுக்கும் இடையிலான வேறுபாடுஎன்பது வெறும் சொற்களுக்கும் வார்த்தைகளுக்கும் இடையிலானது அல்ல என்பதை அழுத்தமாககுறிப்பிட்டாக வேண்டும்.
சி பி ஐ கட்சி திட்டத்தின் தவறான புரிதலால் எஸ்.ஏ.டாங்கே மற்றும் வீரரின் தலைமையில் 1967 ல் பல்வேறு தவறான அரசியல் முடிவுகள் எடுக்கப்பட்டன. சி.பி.ஐ தலைவர்கள் வட இந்தியாவில் ஜனசங்கம் (ஆர்.எஸ்.எஸ் அரசியல் பிரிவு) மற்றும் சுதந்திரா கட்சி (வெளிப்படையான முதலாளித்துவ வாதிகள்) உள்ளிட்ட காங்கிரஸ் அரசுகளில் பங்கேற்று அமைச்சர்களாக செயல்பட்டுள்ளார்கள்.
மறுபுறம் தென்னிந்தியாவில் சி.பி.ஐ(எம்) – ஐ தனிமைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே காங்கிரஸ் பெரும்பான்மையாக இருந்த அணியில் ஆட்சியில் இணையவும் பின்னர் தலைமைதாங்கவும் செய்தது. மிகவும் மோசமான உதாரணம் என்னவென்றால். 1975 முதல் 77 வரையிலான காலத்தில் இந்திராகாந்தியின் தலைமையிலான மத்திய அரசு அறிவித்த அவசர நிலை காலத்தை ஆதரித்து நின்றதுதான்,
இந்தியாவில் சிவசேனா மற்றும் சி.பி.ஐ ஆகிய இரண்டே இரண்டு கட்சிகள் தான் அவசர நிலைப் பிரகடனத்தை ஆதரித்து நின்றன. அதுவும் சி.பி.ஐ(எம்) தலைவர்களும், எதிர்க்கட்சிகளும் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் மேற்கு வங்கத்தில் ஜோதிபாசு தலைமையிலான முதல் இடது தலைமையிலான மாநில அரசு பொறுப்பேற்றபோது சி.பி.ஐ இடது முன்னணியில் ஒரு அங்கமாக இருக்கவில்லை என்பதுடன் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டது. 1982 ஆம் ஆண்டில் சி.பி.ஐ தன்னுடைய கொள்கை நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட பின்னர் தான் அது இடது முன்னணியில் சேர அனுமதிக்கப்பட்டு அரசிலும் சேர்த்துக் கொள்ளப்பட்டது.
நக்சலைட்டுகளின் நிலைப்பாடு:
நக்சலைட்டுகளை பொறுத்தவரை, 1967 – 68 காலகட்டத்தில் சாரு மஜும்தார் மற்றும் பி.நாகிரெட்டி உள்ளிட்ட சிலர் சி.பி.ஐ(எம்) ஐ உடைத்துவிட்டு சி.பி.ஐ(எம்எல்) என்கிற கட்சியை தொடங்கினார்கள். வடக்கு மேற்கு வங்கத்தில் நக்சல்பாரி என்ற கிராமத்தில் முதல் முறையாக எழுச்சி ஏற்பட்டதால் அவர்கள் நக்சலைட்டுகள் என அறியப்படுகிறார்கள். பின்னர் சி.பி.ஐ (எம்.எல்) பல்வேறு கூறுகளாக பிளவு பட்டது. அதில் பலர் சி.பி.ஐ (எம்.எல்) அசல் திட்டத்தின்படி இந்திய அரசானது தரகு முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் கைகளில் உள்ளது என்கிறார்கள்.
‘தரகு முதலாளிகள்’ என்றால் வெறுமனே ஏகாதிபத்தியத்தின் முகவர்கள் என்று பொருள். இவ்வாறு அவர்கள் ஏகாதிபத்தியம் தான் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டு ஆட்சி செய்கிறது என்று கூறினார்கள். பிற்காலத்தில் அவர்கள் தவறான மாவோவின் மூன்று உலகக் கோட்பாட்டின்படி இந்திய முதலாளித்துவமானது, அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் சோவியத்தின் ‘சமூக ஏகாதிபத்தியம்’ ஆகிய இருவகை ஏகாதிபத்தியங்களின் முகவர்கள் என்று கூறினார்கள். இந்திய ஆளும் வர்க்கம் வெறும் முகவர்களாக இருப்பதால் அதற்கு மக்களுக்கு இடையில் பிடிமானம் இல்லை என்றார்கள், ஆகவே ஒரு ஆயுதப் புரட்சி நடத்தப்படுமேயானால் அரசு அடுக்கி வைக்கப் பட்ட அட்டைகளைப் போல விழுந்துவிடும், இந்திய புரட்சி என்பது வெகு விரைவில் எதார்த்தமே என்றாகிவிடும். சீனாவின் ஒரு
பழமொழியை போல ‘சிறு நெருப்புப்பொறி பெரும் நெருப்பை உருவாக்கிவிடும்’ என்று மதிப்பிட்டார்கள், இந்த மதிப்பீடு அவர்களை நாசகரமான விளைவுகளை உண்டாக்கக் கூடிய
வகையில் எதார்த்தத்தை விட்டு விலகிப் போக வைத்தது.
நக்சலைட்டுகள் இளைஞர்களின் குழுக்களை உருவாக்கி சில இடங்களில் நிலப் பிரபுக்களையும் காவல்துறையினரையும் கொலை செய்ய ஆரம்பித்தார்கள். அவர்கள் தேர்தல்களை
புறக்கணிப்பார்கள். அரசு அவர்கள் மீது மிருகத்தனமான அடக்குமுறையை தொடுத்தது. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டார்கள். இதனை சாக்காக வைத்து இதர இடதுசாரி குழுக்களின் மீது அரசு அடக்குமுறையை ஏவியது.
இறுதியில் நக்சலைட்டுகள் நாட்டின் சில வனப்பகுதிகளில் மட்டும் இருக்கிறார்கள் அவர்களில் சிலர் கம்பெனிகளிடமும் காண்ட்ராக்டர்களிடமும் பணத்தை பிடுங்கவும், தேர்தல் நேரங்களில் முதலாளித்துவக் கட்சிகளுடன் பண பேரம் நடத்தவும் செய்கிறார்கள்.
நக்சலைட் மற்றும் மாவோயிஸ்ட்களின் குணங்களில் ஒன்று, சி.பி.ஐ(எம்) -ஐ ஒரு எதிரியாக பார்ப்பது. 1972-77 காலகட்டத்தில் மேற்கு வங்க அரசின் அரைப் பாசிச பயங்கர நடவடிக்கை தொடுக்கப்பட்டபோது நக்சலைட்டுகள் சி.பி.ஐ(எம்) – ஐ குறிவைக்க காங்கிரஸ் அரசுக்கு உதவியுடன் பல முன்னணி
தொண்டர்களை கொன்று குவிக்கவும் செய்தார்கள். 30 ஆண்டுகளுக்கு பின்னர் 2008ஆம் ஆண்டு மாவோயிஸ்டுகள் சல்போனி என்னுமிடத்தில் அன்றைய சி.பி.ஐ முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யாவையும், மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மற்றும் ஜிதின் பிரசாத் ஆகியோரை படுகொலை செய்ய முயற்சித்தார்கள். அவர்கள் மயிரிழையில் உயிர் தப்பினர். (சி.பி.ஐ(மாவோயிஸ்ட்) அரசியல் தலைமைக் குழு உறுப்பினரான கிஷன்ஜி மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் தோல்வியையும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றியையும் பலமுறை வரவேற்றுள்ளார்)
அந்த நிகழ்வுக்கு பின்னர் திரிணாமுல் காங்கிரஸ் அரசு ஒரு எண்கவுண்டரில் 2004 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்திய மாவோயிஸ்ட் ஒருங்கிணைப்பு, சி.பி.ஐ(எம்எல்) மக்கள் யுத்தம் குழு ஆகியவை இணைந்து சி.பி.ஐ(மாவோயிஸ்ட்) உருவாக்கினார்கள். தொடங்கப்பட்டதிலிருந்து
வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால் அது தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பாகவே உள்ளது.
வேறு சில நக்சலைட் குழுக்கள் வன்முறைகளை தவிர்த்துவிட்டு மைய நீரோட்டத்தில் இணைந்து தேர்தல்களில் பங்கேற்க ஆரம்பித்துவிட்டார்கள். அவற்றில் பிரதானமான ஒன்றுதான். பீகாரில் 12 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துள்ள சி.பி.ஐ(எம்.எல்) (விடுதலை) குழுவாகும்.
3.இந்திய புரட்சிக்கான போராட்டத்தில் யார் நம்முடைய எதிரி?
இந்தியாவில் எந்த வர்க்கங்கள் அரசு அதிகாரத்தை தங்கள் பிடியில் வைத்துள்ளன என்பது குறித்த மேற்கூறப்பட்டுள்ள புரிதலின் அடிப்படையில் தமது கட்சி மக்கள் ஜனநாயக புரட்சியை வெற்றிகரமாக நடத்திட மூன்று முக்கிய எதிரிகளுடன் போரிட்டு அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.
அவையாவன,
1) பெருமுதலாளிகள்
2) நிலப்பிரபுக்கள்
3) ஏகாதிபத்தியம்
இந்திய அரசு பெருமுதலாளிகளால் தலைமை தாங்கப்படுகிறது. நாம் ஏற்கனவே பார்த்தபடி அது இந்திய விடுதலைக்குப் பின்னர் பெருமளவு ஆதாயம் அடைந்துள்ளது. ஏனெனில் அது எல்லா பகுதி
மக்களையும் பெருமளவில் சுரண்டியுள்ளது. உழைப்பாளி மக்களுக்கு எதிரான தன்னுடைய வர்க்க நலன்களைப் பாதுகாத்துக் கொள்ள பெருமுதலாளித்துவம், நிலப்பிரபுக்கள் உடன் கூட்டு சேர்ந்துள்ளது.
நாம் நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்து போராடுகிறோம் எனில் அதற்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு. ஒன்று அதிகரித்து வரும் நில குவியலை எதிர்ப்பதுடன் தீவிர நில சீர்திருத்தங்களின் மூலம் நிலம் மறு விநியோகம் செய்ய போகிறோம் என்று பொருள். இன்னொன்று வகுப்புவாதம் சாதி முறைகளை சாதிய ஒடுக்குமுறை மற்றும் ஆணாதிக்கத்தை எதிர்க்கிறோம் என்று பொருள்.
ஏனென்றால் அவை அனைத்தும் நிலப்பிரபுத்துவத்துடன் நெருக்கமாக இணைந்துள்ளவை. பெரு முதலாளித்துவம் அன்னிய நிதி மூலதனத்துடன் அதாவது ஏகாதிபத்தியத்துடன் பெருமளவில்
இணைந்து செயல்படுகிறது. நாம் ஏற்கனவே பார்த்தது போல் சோசலிசத்திற்கும் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கும் மிக முக்கியமான எதிரி ஏகாதிபத்தியமே அதனுடைய பன் மடங்கான மக்களின்
மீதான சுரண்டல் மிகவும் இழிவானதாகும். மேலே கூறப்பட்டுள்ள மூன்று வர்க்கங்களும் ஒருவரோடு ஒருவர் வைத்துள்ள கூட்டு தெளிவானது. மக்கள் ஜனநாயக புரட்சி வெற்றி பெற வேண்டுமானால் இந்த மூன்று வர்க்கங்களும் முறியடிக்கப்பட்டே ஆக வேண்டும். இந்திய புரட்சிக்கு இந்த மூன்று வர்க்கங்களும் எதிரிகளாகும். அதனால் தான் நம்முடைய அன்றாட போராட்டங்களில் இந்த மூன்று வர்க்க எதிரிகளின் பிரதிநிதிகளுக்கு எதிராக நாம் போராடி வருகிறோம்.
இன்றைக்கு பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு அகில இந்திய கட்சிகள் வர்க்க எதிரிகளின் கூட்டணியின் பிரதிநிதிகள், நாடு விடுதலை அடைந்தது முதல் 50 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சிதான் ஆளும் வர்க்கங்களின் முக்கியமான பிரதிநிதியாக இருந்தது. அதனால் தான் நம்முடைய போராட்டங்கள் இயற்கையாக அதற்கு எதிராக இருந்தன.
காங்கிரஸ் இன்னமும் ஒரு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கட்சியாக நீடிக்கிறது, பிராந்திய கட்சிகள் பொதுவாக அந்தந்த பிராந்தியங்களில் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ வர்க்கங்களை பிரதிபலிக்கின்றன.
கட்சி திட்டம் பாஜகவை கீழ்க்கண்டவாறு பகுப்பாய்வு செய்கிறது.
- 7.14 சுதந்திரத்திற்குப் பிறகும் கூட பிற்போக்கு மற்றும் எதிர்புரட்சிப் போக்குகள் நிலவின. நிலப்பிரபுத்துவ கருத்தாக்கத்தின் ஆழமான தாக்கம் காரணமாக இருந்த பின்தங்கிய தன்மையை அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர். சமீபத்திய பத்தாண்டுகளில், காங்கிரசுக்கு எதிரான அதிருப்தி அதிகரித்து வந்ததன் காரணமாக காங்கிரஸ் வேகமாக வீழ்ச்சியடைந்த நிலையில், காங்கிரஸ் கட்சி விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்புவதற்கு அவர்கள் கடுமையான முயற்சி மேற்கொண்டுள்ளனர். பாரதிய ஜனதா கட்சி ஒரு பிற்போக்கு கட்சியாக உள்ளதோடு, பிளவுவாத, மதவெறி அடித்தளத்தைக் கொண்டதாகவும், இதர மதங்களுக்கு எதிரான பகையுணர்ச்சி, சகிப்பற்றத் தன்மை, தீவிர தேசிய இனவெறி என பிற்போக்கு உள்ளடக்கத்தைக் கொண்டதாகவும் உள்ளது. பாரதிய ஜனதா கட்சி சாதாரண முதலாளித்துவக் கட்சி அல்ல, பாசிசத் தன்மை கொண்ட ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தினால் வழிகாட்டப்படுகிற, ஆதிக்கம் செலுத்துகிற ஒன்றாகும். பாஜக அதிகாரத்தில் இருப்பதால், அரசு அதிகாரத்தையும், அரசு எந்திரத்தையும் ஆர்.எஸ்.எஸ்.-சினால் கருவிகளாக பயன்படுத்திக்கொள்ளமுடிகிறது.
இந்துத்துவம் பழமைவாதத்தை வளர்க்கிறது, இந்து ராஷ்டிரத்தை நிறுவும் நோக்குடன் இந்தியாவின் பன்முகப் பண்பாட்டை நிராகரிக்கிறது. இத்தகைய மதவெறி அணுகுமுறை பரப்பப் படுவதால், சிறுபான்மை பழமைவாதம் வளர வழிசெய்கிறது. அரசியலில் மதச்சார்பற்ற அடிப்படைக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதோடு, இடது மற்றும் ஜனநாயக இயக்கத்திற்கு பெரும் அபாயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பெருமுதலாளிகள், நிலப்பிரபுக்களில் கணிசமான பகுதியினரும், அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியமும், பாஜகவுக்கு அனைத்து வகையான ஆதரவையும் வழங்குகின்றனர்.
4. இந்திய புரட்சிக்கான போராட்டத்தில் நம்முடைய வர்க்க கூட்டாளி யார்?
மேலே குறிப்பிட்ட மூன்று வகை எதிரிகளை வீழ்த்துவதற்கான வர்க்க கூட்டாளி யார் என்பது கட்சி திட்டத்தின் பகுதி ஏழில், மக்கள் ஜனநாயக முன்னணியை கட்டுதல் என பெயரிட்டு விரிவாக விளக்கப்பட்டுள்ளது. தொழிலாளி வர்க்கம், மக்கள் ஜனநாயக முன்னணிக்கு தலைமை தாங்கும். ஏனென்றால் இதுதான் வரலாற்று ரீதியாக மிகவும் முன்னேறிய வர்க்கம், மிகவும் அமைப்பாக்கப்பட்ட வர்க்கம். ஏனென்றால் இந்த வர்க்கம்தான் இயற்கையாகவே உற்பத்தி சக்திகளின் தனியார் மயத்தை எதிர்க்கின்ற வர்க்கம், கோடிக்கணக்கான அமைப்பு ரீதியாக திறக்கப்படாத தொழிலாளர்கள் கொடூரமான முறையில் தாக்கப் படுகிறார்கள்நான்கு தொழிலாளர் சட்டங்கள் அமைப்பு ரீதியாக திரட்டப்பட்ட தொழிலாளர்களை குறி வைக்கின்றன. சங்கங்கள் அமைக்கும் உரிமை, நிரந்தர வேலைகள், நியாயமான சம்பளம், சமூக பாதுகாப்பு 8 மணி நேர வேலை என எல்லா உரிமைகளும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். பெருமளவிலான ஆட்குறைப்பு மற்றும் ஒப்பந்த வேலை
தற்காலிக வேலை மற்றும் தற்காலிக வேலை முறை என்பது சட்டமாக்கப்படுகிறது.தொழிலாளி வர்க்கத்தின் நெருக்கமான கூட்டாளிகள், விவசாய தொழிலாளர்களும் ஏழை விவசாயிகளும் அவர் தொழிலாளி வர்க்கம், நகர்ப்புற பாட்டாளி வர்க்கத்தை உருவாக்குவதை போலவே இந்த இரண்டு
வர்க்கங்களும் கிராமப்புற பாட்டாளி வர்க்கத்தை உருவாக்குகின்றன. விவசாய தொழிலாளர்கள்
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித்திட்டத்தில் கடுமையான தாக்குதல்களை சந்தித்து
வருகிறார்கள். அவர்களுடைய நிலம், வீடு, ரேஷன், கூலி, ஓய்வூதியம் ஆகிய பிரச்சனைகள் இன்னும்
மோசம் அடைந்து வருகின்றன. ஏழை விவசாயிகள் எண்ணிலடங்காத பிரச்சினைகளை சந்தித்து
வருகிறார்கள், அவர்கள் நிலம் இல்லாத மற்றும் வறுமையின் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இந்த மூன்று வர்க்கத்தினருக்குள், தலித் ஆதிவாசிகள், பெண்கள் மற்றும்
சிறுபான்மையினரே கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். 90 சதவீதத்திற்கும்
மேற்பட்ட மக்கள் இந்த மூன்று வர்க்கங்களில் இருந்தே வருகிறார்கள். இந்த மூன்று வர்க்கங்களின்
ஒற்றுமையையே நாம் தொழிலாளி விவசாயி கூட்டணி என்று அழைக்கிறோம், இதுதான் மக்கள்
ஜனநாயக புரட்சியின் முதுகெலும்பு என்பது தெளிவு.
நடுத்தர விவசாயிகளும் மக்கள் ஜனநாயக புரட்சியின் நம்பகமான கூட்டாளிகள் கடன் சுமைகளின்
காரணமாக பல பத்தாயிரக்கணக்கான நடுத்தர விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள், உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை இல்லாத நிலைமையும், இடு பொருள்களின் கட்டுக்கடங்காத விலை உயர்வும், போலித்தனமான பயிர் ஈட்டுறுதி திட்டமும்,
மின்சாரம் மற்றும் பாசன கட்டண உயர்வுகளும், கார்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான அரசின் கொள்கைகளும் ஏழை விவசாயிகளை போலவே இவர்களையும் கடுமையான பிரச்சனைகளை சந்திக்க வைக்கிறது.
பணக்கார விவசாயிகள் ஊசலாடும் கூட்டாளிகள், அவர்களிடம் ஊசலாடும் குணம் இருக்கின்ற போதிலும் அவர்களும் சில சந்தர்ப்பங்களில் மக்கள் ஜனநாயக புரட்சியில் தங்களுடைய பங்கை செலுத்த மக்கள் ஜனநாயக புரட்சி முன்னணியில் வரலாம். மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய
வலியுறுத்தி ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்ற போராட்டங்களில் மொத்தமான போராளிகள் ஏழை
மற்றும் நடுத்தர விவசாயிகள் ஆக இருந்தபோதிலும், பணக்கார விவசாயிகளில் ஒரு பகுதியினரும் கூட இதில் இணைந்து கொண்டார்கள். அரசின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளின் மீதான மனக்கசப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. நகர்ப்புற மத்தியதர வர்க்கம், குறிப்பாக அடித்தள மத்தியதர வர்க்கமும் கூட மக்கள் ஜனநாயக புரட்சி கூட்டணியில் வரவும் சேர்க்கவும் முடியும்.
அவர்களை புரட்சிக்கு வென்றெடுக்க எல்லா விதமான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். இந்த பகுதியில் வரும் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வீட்டுவசதி போன்றவற்றின் மீதான அரசின் பரந்துபட்ட கொள்கைகள் மற்றும் தனியார்மயமாக்கல் கொள்கைகளின் விளைவாக ஏற்படுகின்ற
ஆள் குறைப்பு உள்ளிட்ட தாக்குதல்களை சந்தித்து வருகிறார்கள். பெரு முதலாளிகள் அல்லாத ஏகபோகங்களாக இல்லாத முதலாளிகளும் ஒரு நிரந்தரமற்ற கூட்டாளியாக வரக்கூடும்.
பெரு முதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் உருவாக்கியுள்ள சமத்துவமில்லாத போட்டி சூழலில், இந்தவகை முதலாளிகள் தங்கள் இரட்டைத்தன்மைக்கு கடன்பட்டுள்ள இயற்கைத் தன்மையின் காரணமாக நிரந்தரமற்ற கூட்டாளி என்கிற வகையில் புரட்சியில் அவர்களுடைய பங்களிப்பை செலுத்த முடியும். வர்க்க சக்திகளின் தொடர்பில் உள்ள மாற்றங்கள் ஏகாதிபத்திய நிலப்பிரபுத்துவ மற்றும் மக்கள் இடையிலான முரண்பாடுகளின் கூர்மைத்தன்மை பெரு முதலாளிகள் மற்றும் இதர பகுதி முதலாளிகளுக்கும், அரசுக்குமிடையிலான முரண்பாட்டின் ஆழம் ஆகியவற்றை சார்ந்ததாகவே இந்த பங்களிப்பு அமையும்.
பெரு முதலாளிகளுக்கும், பெரு வணிகர்களுக்கும் ஆதரவாக. சிறு தொழில்கள் மற்றும் வணிகர்கள் மீது சுமத்தப்பட்டு இருக்கின்ற கொள்கைகளின் காரணமாக (ஜி.எஸ்.டி. போன்ற திட்டங்கள்) ஆலை மூடலையும், வணிக நிறுவனங்களின் மூடலையும் எதிர்கொள்கின்றனர். இந்த வர்க்கங்களையும் சென்றடைய வேண்டிய வேலை நமக்கு உள்ளது.
விலை ஏற்றம், வேலையின்மை, கல்வி மற்றும் மருத்துவத்தில் தனியார்மயம் ஆகியவற்றுடன் சோசலிசத்திற்கு பிந்தைய மந்த நிலை ஆகிய பிரச்சனைகள் இந்த மூன்று வர்க்கங்களையும்
கடுமையாக தாக்கியுள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள ஏழு வர்க்கங்களை உள்ளடக்கிய கூட்டணி தான் மக்கள் ஜனநாயக அணி. இது ஒரு வர்க்க கூட்டணி என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த அணியானது பெருமளவிலான வர்க்கப் போராட்டங்கள் மற்றும் வெகுஜன போராட்டங்களின் தீவிரமான அரசியல் கல்வியறிவை மக்கள் பெறுகிற விதத்தில் வர்க்க வெகுஜன அரங்கங்களின் வளர்ச்சியும், கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சியும் சாத்தியமாகிற போதிலேயே சாத்தியமாகும். அரசியல் ரீதியாக இடது ஜனநாயக
முன்னணி மக்கள் ஜனநாயக முன்னணியை உருவாக்க உதவும் என்று நாம் கருதுகிறோம்.
5.இந்திய புரட்சியின் பாதை என்னவாக இருக்கும்?
இந்திய புரட்சியின் வெற்றிக்கு இரண்டு முன் தேவைகள் உள்ளன. அதில் முதலாவது மேலே குறிப்பிட்டுள்ளவாறு ஒரு பரந்துபட்ட பலமான மக்கள் ஜனநாயக அணியை கட்டியெழுப்புவது இரண்டாவது நாடு தழுவிய அளவில் சி.பி.ஐ(எம்) மற்றும் பிற இடதுசாரிகளின் பரந்துபட்ட வளர்ச்சியை அதிகரிப்பது. கட்சி திட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுதல் என தலைப்பிடப்பட்ட எட்டாவது பகுதி, இந்த அம்சத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
ரஷ்யா (1917), வியட்நாம் (1945), கொரியா (1948), சீனா (1949), கியூபா (1959) ஆகிய நாடுகளில் காணப்படுவதைப் போல மக்களிடையே ஆழமாக வேரூன்றியுள்ள ஒரு பலமான கம்யூனிஸ்ட் கட்சியினால் மட்டுமே புரட்சியை வெற்றிகரமானதாக ஆக்க முடியும் என அனுபவம் காட்டுகிறது. மறுபுறத்தில் நமக்கு இத்தாலி (1922), ஜெர்மனி (1933), ஸ்பெயின் (1936), இந்தோனேசியா (1965) மற்றும் சிலி (1973) ஆகிய நாடுகளில் கம்யூனிஸ்ட்களின் வீரம் செறிந்த எதிர்ப்புகளை ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்த எதிர்ப்புரட்சிகளின் உதாரணங்களும் உள்ளன. இந்த எல்லா எதிர்க்கட்சிகளும் பல 10,000
கம்யூனிஸ்ட்களும் ஜனநாயக வாதிகளும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் (1989-1990) மற்றும் சோவியத் யூனியன் (1991) ஆகியவற்றிலும் கூட எதிர்ப்புரட்சிகளை பார்த்தோம். இந்திய புரட்சிக்கான திட்டமிடலின் போதும் அதை தீவிரமாக நடைமுறைப்படுத்தும் போதும் இந்த வரலாற்று ரீதியான வெற்றி மற்றும் தோல்விகளின் அனுபவ படிப்பினைகளை மனதில் கொள்ள வேண்டும்.
மாநில அரசுகளில் நம்மது பங்கேற்பு குறித்து கட்சி
திட்டம் கீழ்க்கண்டவாறு கருதுகிறது.
- 7.17 வேகமாக மாறிவரும் அரசியல் சூழலின் தேவைகளை சந்திக்க பல்வேறு இடைக்கால கோஷங்களை கட்சி உருவாக்க வேண்டியிருக்கும் என்பது வெளிப்படையானதாகும். ஆளும் வர்க்கங்களின் தலைமையிலான தற்போதைய அரசை இறக்கி, தொழிலாளி வர்க்கம் மற்றும் விவசாயிகளின் வலிமையான கூட்டை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய ஜனநாயக அரசு மற்றும் அரசாங்கத்தை நிறுவும் கடமையை மக்கள் முன்வைக்கின்றபோதே, இப்போதுள்ள வரையறைக்குள்ளேயே மக்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய திட்டத்தை நிறைவேற்றுகிற, மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து, நிறைவேற்றுகிற அரசாங்கங்களை அமைப்பதற்கான வாய்ப்புகளை கட்சி பயன்படுத்திக்கொள்ளும். இத்தகைய அரசாங்கங்களை அமைப்பது உழைக்கும் மக்களின் புரட்சிகர இயக்கத்தை வலுப்படுத்தவும், மக்கள் ஜனநாயக முன்னணியை கட்டும் பணிக்கும் உதவும். எனினும் நாட்டின் பொருளாதார, அரசியல் பிரச்சனைகளுக்கு அடிப்படையான வகையில் தீர்வு காணாது. எனவே, திட்டவட்டமான சூழலைப் பொறுத்து மாநிலங்களிலோ அல்லது மத்தியிலோ இத்தகைய அரசாங்கங்கள் அமைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும்போதே இப்போதுள்ள பெருமுதலாளிகள் தலைமையிலான முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசை நீக்க வேண்டியதன் தேவையை மக்களுக்கு கற்பித்து வருவதோடு, அதன் மூலம் வெகுஜன இயக்கத்தை வலுப்படுத்தும்.
அடிக்கடி கேட்கப்படும் மற்றொரு கேள்வி, இந்திய புரட்சி அமைதி வழியில் நடக்குமா? என்பதாகும்.
கட்சி சொல்வது இதுதான்…
- 7.18 மக்கள் ஜனநாயகம் மற்றும் சோசலிச சமூக மாற்றத்தை அமைதியான வழியில் அடையவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) விழைகிறது. வலிமையான வெகுஜன புரட்சிகர இயக்கத்தை வளர்த்தெடுப்பதன் மூலமும், நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நடைபெறுகிற போராட்டங்களை இணைப்பதன் மூலமும் பிற்போக்கு சக்திகளின் எதிர்ப்பை முறியடிக்க தொழிலாளி வர்க்கமும், அதன் கூட்டாளிகளும் முயல்வதோடு, அமைதியான வழிமுறையில் இத்தகைய மாற்றங்களைக் கொண்டுவர பாடுபடுவர். எனினும், ஆளும் வர்க்கங்கள் தங்களது அதிகாரத்தை ஒருபோதும் தாமாக விட்டுத்தரமாட்டார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் மக்களின் விருப்பத்திற்கு மாறாக, சட்டத்திற்கு புறம்பாகவும், வன்முறை மூலமாகவும் இதைப் பின்னுக்குத்தள்ள முயல்வார்கள். எனவே, நாட்டின் அரசியலில் ஏற்படக் கூடிய திருப்பங்கள் மற்றும் திருகல்களையும் கவனத்தில் கொண்டு அனைத்து சூழ்நிலைகளையும் சந்திக்கின்ற வகையில் விழிப்புடன் இருந்து பணியாற்ற வேண்டும்.
இந்தியாவின் புரட்சிப்பாதை ரஷ்ய வழியிலா சீன வழியிலா என்றொரு விவாதம். கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் பழைய காலத்திலிருந்தது. நீண்ட காலத்திற்கு முன்பே சி.பி.ஐ(எம்) இதில் எந்த பாதையும் இல்லை என தெளிவுபட கூறி விட்டது. இந்தியாவில் நிலவும் திட்டவட்டமான நிலைமை மேற்கூறப்பட்டுள்ள நாடுகளில் புரட்சிகள் நடைபெற்றபோது நிலவிய திட்டவட்டமான நிலைமைகளுக்கு முற்றிலும் மாறுபட்டது. லெனினுடைய கோட்பாடான “திட்டவட்டமான நிலைமைகள் பற்றிய திட்டவட்டமான ஆய்வின் படி” இந்தியாவில் நிலவும் நிலைமைக்கு ஏற்பவே இந்திய புரட்சியின்
பாதை இருக்கும்.
(கட்சி திட்டத்தின் 8 பகுதிகளை சுறுக்கமாக அடுத்த பகுதியில் காண்போம்)
தமிழில்: நிசார் அகமது
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
