Tag: லெனின்
உறுதியான கம்யூனிஸ்ட் கட்சிக்கு லெனினியம் காட்டிய பாதை!
புரட்சிகரப் போராட்டங்களில் ஈடுபடக் கூடியவர்களும், புரட்சிகர மார்க்சிய கோட்பாட்டின் சாரத்தை உள்வாங்கியவர்களுமே, கட்சியில் உறுப்பினராக தகுதியானவர்கள். இந்தப் புரிதலை நீர்த்துப் போகச் செய்தால், கட்சியின் புரட்சிகரத் தன்மையை சிதைக்கும் என்பதை லெனின் அழுத்தமாக குறிப்பிட்டார்.
லெனின்: தொழிலாளர் -விவசாயி கூட்டணியின் சிற்பி
அசோக் தவாலே ஜனவரி 19: தொழிலாளர் – விவசாயி ஒற்றுமை தினம்லெனின் நினைவு நூற்றாண்டு (லெனின் நினைவு நூற்றாண்டை ஒட்டி, தொழிலாளர் – விவசாயி கூட்டணி பற்றிய லெனினின் முன்னெடுப்புகளைச் சுட்டிக் காட்டி, இக்கருத்தாக்கத்தின் முக்கியத்துவம் குறித்து தோழர் அசோக் தவாலே எழுதிய கட்டுரையின் தமிழாக்கத்தை, ஜனவரி 19 தொழிலாளர் – விவசாயி ஒற்றுமை தின அனுசரிப்பு தருணத்தில் வெளியிடுகிறோம் – ஆசிரியர் குழு) புகழ்பெற்ற ஹங்கேரி நாட்டு மார்க்சிஸ்டும், ‘வரலாறும் வர்க்க உணர்வும்’ என்ற மகத்தான
லெனினின் தத்துவ பங்களிப்புகள்
ஜி. விஜயகுமார் பகுதி – 1 சுருக்கமாக, எதிர்மறைகளின் ஒற்றுமை பற்றிய தத்துவமே இயக்கவியல் தத்துவமாக வரையறுக்கப்பட்டுள்ளது. இயக்கவியலின் சாரம் இந்த வரைமுறையில் அடங்கியுள்ளது. இருப்பினும், இந்த விஷயத்தில் மேலும் தெளிவுபடுத்தல் தேவை; இதனை மேலும் வளர்த்தெடுக்க வேண்டும் – இந்தச் சொற்கள் ஹெகல் எழுதிய ” தர்க்கத்தின் அறிவியல்” நூலுக்கு லெனின் தயாரித்த குறிப்புகளில் காணப்படுகின்றன (லெனின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள், தொகுதி 38, பக்கம் 222). சொல்லப் போனால், ஹெகலின் எழுத்துக்கள் இடையே லெனின் தனது
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

