
பிரெஞ்சு புரட்சி – பாஸ்டில் தினம் …
- அரசகுடும்பம் , அதன் ஆதரவாளர்களான பெரும் நிலக் கிழார்கள்
- ரோமன் கத்தோலிக்க ஆலயத்தின் குருக்கள், அதிகாரம் செலுத்துவோர்,
- சிறு வணிகர்கள், விவசாயிகள், உழைப்பாளிகள் என சாதாரண மக்கள்.
பிறப்பு அடிப்படயில் அனைத்து சலுகைகளும் தீர்மானிக் கப்பட்டதால், ஏழைகள் முன்னேற வழியே இல்லாத சூழல் நிலவியது.சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால், மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். மன்னன் 19.5.1789 அன்று பொது குழுவை கூட்டினான். மூன்றாம் பிரிவு[மக்கள்] தேசிய அசெம்பிளியை உருவாக்குவதாக அறிவித்தனர். 11.7.1789 நிதி அமைச்சர் மன்னரால், பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதன் பின் மன்னரின் ராணுவம் தங்களை தாக்கக்கூடும் என்ற அச்சத்தில், மக்கள் கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்துக் கொண்டு பாஸ்டில் சிறையை முற்றுகை இட்டனர். அந்த கலவரத்தில் பலர் உயிரிழந்தனர். இறுதியில் பாஸ்டில் சிறை மக்கள் வசம் வந்தது. இந்த சம்பவம் “மன்னராட்சியின் நிறமான வெள்ளையை மக்களின் நிறங்களான நீளமும், சிவப்பும் சூழ்ந்தது” என்று வர்ணிக்கப்பட்டது.இன்றும் அந்நாட்டின் கோடியில் அந்த மூன்று நிறங்களும் இருப்பதை காண முடியும்.
You may also like
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
