Month: May 2026
நவபாசிச போக்குகளை எதிர்க்க மகளிர் இயக்கத்தை வலுப்படுத்துவோம்
நாட்டை பாதுகாப்பது, குடும்பத்தை பாதுகாப்பது முக்கியம் என்று கருதும் வலதுசாரி பெண்ணியம், பாசிசத்துடன் கைகோர்க்கும். ஆணாதிக்க குடும்ப கட்டமைப்பை பற்றி எதுவும், முதலாளித்துவத்தில் பெண் உழைப்பு சுரண்டல்கள் பற்றி எதுவும் சொல்லாது. ஆனால், மார்க்சீய பெண்ணியம் அவற்றை பற்றி எல்லாம் தெளிவாக எடுத்துரைக்கிறது.
பாரீஸ் கம்யூன்: உழைக்கும் வர்க்கத்தின் தியாகத் தீப்பிழம்பு
பிரான்ஸின் பாட்டாளி வர்க்கம் பொன்னுலகைப் படைக்க எடுத்த முயற்சியே பாரீஸ் கம்யூன். 72 நாட்களுக்கு மட்டுமே நீடித்த பாரீஸ் கம்யூன்வாதிகளின் ஆட்சி, மார்க்ஸ்-எங்கெல்ஸுக்கு மட்டுமின்றி, அவர்களுக்குப் பின்னால் வந்த லெனின் போன்ற தலைவர்களுக்கும் வலுவான தத்துவார்த்தப் படிப்பினைகளை வழங்கியது.
“வர்க்கம்”
மார்க்சிய இயக்கம் மட்டுமே வர்க்கத்திற்கும் சாதிக்கும் இடையிலான உள்ளார்ந்த தொடர்பினை சுட்டிக்காட்டி, தனது புரட்சிகர திட்டத்தை வகுத்துள்ளது. எனவே மார்க்சிய நோக்கில், ‘வர்க்கம்’ என்ற சொல்லை புரிந்துகொள்வது, சமுதாயத்தை மாற்றியமைக்கும் புரட்சிகர போராட்டத்தில் மிக மிக அவசியம்.



