Category: அரசியல்
இந்திய விடுதலையும் அரசியல் களமும்
இந்துத்துவா அமைப்புகள் அனைத்தும் பொருளாதார சுரண்டல் முறையை பாதுகாக்கும் சமூக ஒடுக்குமுறையை பாதுகாக்கிறது என்பதைத் தெளிவுபடுத்த கம்யூனிஸ்ட் இயக்கங்கள் எடுக்கும் முயற்சிக்கு, சமூக சீர்திருத்த இயக்கங்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டியுள்ளது. அம்பேத்கர், பெரியார் இயக்கங்கள் இதை எப்படி புரிந்து கொண்டிருந்தாலும், மார்க்சீயம், கருத்தியல் மற்றும் அரசியல் கண்ணோட்டத்தில் மேற்கண்ட கடமையை நிறைவேற்றும் அரசியல் பணியில் ஈடுபட வேண்டியுள்ளது.
அயலுறவு கொள்கை: பின்னோக்கி செல்லும் சக்கரங்கள் !
அயலுறவுக் கொள்கையின் சாய்மானம், அமெரிக்காவுடனான கேந்திரக் கூட்டாளி என்கிற கனவு பக்கமே உள்ளது. ட்ர்ம்ப் தலைமையிலான அமெரிக்க அரசின் தீவிர வலதுசாரி நடவடிக்கைகள் உலக அரங்கிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிற சூழலில் இந்திய அரசின் சாய்மானமும், தனது சர்வதேசக் கடமைகளினின்று வழுவுவதும் அபாயகரமானதாகும்
இந்தியாவில் கூட்டாட்சி: பலாபலன்கள்
(ஆடியோ எடிட்டிங் – மதன்ராஜ்) டி.கே.ரங்கராஜன் அரசாங்கத்தின் நடைமுறை எனப்படுவது, அதன் பல்வேறு நிறுவனங்களின் வடிவம், செயல்பாடுகள், உருவாக்கும் முறைகள் மற்றும் கட்டுப்பாட்டை வரையறுத்திடும் அரசியல் அமைப்புச் சட்டத்தால் முறைப்படுத்தப்படுகிறது. சம்பிரதாயமான ஷரத்துகள் மற்றும் அவற்றை அடிக்கோடிட்டு சில எழுதப்படாத நடைமுறைப் பழக்கங்கள் (கன்வென்சன்கள்) ஆகியவை தொடர்ந்து மலர்ந்து கொண்டே இருக்கும். இதற்குக் காரணம் நடைமுறையில் இருக்கின்ற சட்ட புத்தகங்களுக்கு அவ்வப்போது திருத்தங்கள் கொண்டு வரப்படுவதும் மற்றும் அவ்வப்போது நீதிமன்றங்களின் வியாக்கியானங்கள் அல்லது விளக்கங்கள் அல்லது தீர்ப்பு
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


