Category: அரசியல்
சாதிய பாலின ஒடுக்குமுறை, மத அடிப்படைவாதம்: இந்துத்துவ சித்தாந்தத்தின் பிரிக்க முடியாத அம்சம்
உ. வாசுகி மத்திய பாஜக ஆட்சியின் நடவடிக்கைகளை ஒரு சராசரி முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ ஆட்சியின் நடவடிக்கைகளாக மட்டும் வரையறுக்க முடியாது என்பதும், பாசிச சித்தாந்தத்தைப் பின்பற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வழிகாட்டுதலில் செயல்படக்கூடிய ஆட்சி என்ற அடிப்படையில் வரையறுக்கப்பட வேண்டும் என்பதும் இவ்விதழின் பல கட்டுரைகளில் மீண்டும் மீண்டும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மோடி ஆட்சி பாசிச ஆட்சியா?இல்லையா? என்ற விவாதத்தை நடத்துவது இக்கட்டுரையின் நோக்கமல்ல என்றாலும், பாசிசத் தன்மை கொண்ட நடவடிக்கைகளை அது எடுத்துவருகிறது என்பதில் இருவேறு கருத்து
நம்பிக்கையூட்டும் லத்தீன் அமெரிக்கா
அபிநவ் சூர்யா லத்தீன் அமெரிக்க நாடுகளின் அண்மைக்கால நிகழ்வுகளும் வளர்ச்சிகளும் சர்வதேச இடதுசாரி இயக்கங்களுக்கு முக்கிய பாடமாகவும், பெருமளவு உத்வேகம் அளிப்பதாகவும் உள்ளன. குறிப்பாக, 2019ல் துவங்கி, இன்று வரை, அப்பகுதியின் பல நாடுகளிலும் பெருந்திரளான மக்கள் அமெரிக்கா ஆதரவுடன் அமலாகி வரும் ஏகாதிபத்திய தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து வருகின்றனர். பல காலமாக லத்தீன் அமெரிக்க நாடுகளை அமெரிக்கா தன் சொந்த ஆட்சிக்களமாக நினைத்து, அங்கு அனைத்து நாடுகளையும் தன் கட்டளைகளுக்கு அடிபணிய வைக்க முயற்சித்து
சொல்லகராதி: “உழைப்பு சக்தி – உபரி உழைப்பு”
உழைப்பு சக்தி என்பது உயிர்வாழும் உழைப்பாளியின் உருவத்தில் இருக்கிறது. அந்த உழைப்பாளிக்கும் அவன் இறந்த பின்பும் உழைப்பு சக்தி தொடர்ந்து கிடைப்பதை உத்தரவாதம் செய்யும் அவன் குடும்பத்துக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு வாழ்க்கைத் தேவைகள் அவசியமாகின்றன. அத்தேவைகளை உற்பத்தி செய்ய எவ்வளவு உழைப்பு நேரம் அவசியப்படுகிறதோ அந்த உழைப்பு நேரம்தான் உழைப்பு சக்தியின் மதிப்பாகிறது. ஒரு தொழிலாளி, ஒரு குறிப்பிட்ட வரலாற்று சகாப்தத்தில், ஒரு குறிப்பிட்ட நாட்டின் வரலாற்று முறையில் நிலைநாட்டப்பட்டுவிட்ட வழியில் தன்னை பராமரித்துக் கொள்ளவும்,
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
