Category: இதழ் பெட்டகம்
வகுப்புவாத அரசியல்!
இஸ்லாமியர்களுக்கு எதிராக மதவெறிப் பிரச்சாரம் செய்து, மதக்கலவரத்தை உருவாக்கி மக்களை மதரீதியில் பிளவுபடுத்தி இந்துக்கள் மத்தியில் இந்துத்துவா பிரச்சாரத்தை கொண்டு செல்லும் ஆர்எஸ்எஸ்-ன் அடிப்படையான திட்டத்தை இன்று நாட்டின் பல பகுதிகளில் ஆர்எஸ்எஸ் நிறைவேற்றி வருகிறது. நமது கட்சி திட்டம் குறிப்பிடுவது போல் வகுப்புவாத நடைமுறை இங்கு பாசிசத்தின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கியே செயல்படுத்தப்படுகிறது
தொழிலாளர் வர்க்கத்தை ஒன்றுபடுத்துவோம், அவர்களின் வர்க்க உணர்வை மேம்படுத்துவோம்!
“தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையின்கீழ், இந்திய மக்கள், விடுதலையை எய்திட உறுதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கட்சி என்ற முறையில், மூலதனத்தின் ஆட்சிக்கு எதிராக, சுரண்டப்படும் மக்கள் அனைவருக்கும் தலைமையேற்று முன்னேறிச் செல்லக்கூடிய விதத்தில், தொழிலாளர் வர்க்கத்தின் வர்க்க ஒற்றுமையையும், புரட்சிகர உணர்வையும், வலிமையையும் உயர்த்த வேண்டியது அவசியம்.”
சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் விழுந்து எழும் ஆற்றல்!
1848ல் “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்ற முழக்கத்தோடு கம்யூனிஸ்ட் இயக்கம் லன்டனில் பிறந்தது. அன்றிலிருந்து அதன் இயக்கமும் பரவலும் நித்திய கண்டம் பூர்ண ஆயுசு என்றே இருந்து வருகிறது. உண்மையில் அது சர்ச்சைகளால், சர்ச்சைகளுக்கிடையே, சர்ச்சைகளின் வழியே, சர்ச்சைகளைத் தேடி வளர்கிற சமூக விஞ்ஞானம் ஆகும். அது திண்ணை வேதாந்தமல்ல. யாரோ ஒருவர் தவமிருந்து கண்டதல்ல. அது உழைப்பாளி மக்களின் நடைமுறைகளையும் கருத்தோட்டங்களையும் கூட்டு செயல்பாட்டையும் கொண்ட அனுபவ விஞ்ஞானமாகும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



