Category: இதழ் பெட்டகம்
இராகுல்ஜியின் ஆய்வுத்திறம்
இராகுல் சாங்கிருத்தியாயன் பன்முகப்பார்வை கொண்ட சமூகவியல் அறிஞர். ஏழாம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிக்கல்வியை உருதுமொழி வாயிலாகப் பெற்ற அவர் சமூகவியல் அறிவியலை சுயமாகவேக் கற்றார். மூன்று டஜன் மொழிகளை கற்றுக் கொண்டார். அவருடைய ஐம்பதாண்டு கால இயக்க வாழ்வில், நாற்பதாண்டுகளை நூல்கள் எழுதுவதற் கென்றே ஒதுக்கினார். 134 நூல்களை எழுதியுள்ளார். சிலவற்றை சுயமாக எழுதியுள்ளார். சில மொழி பெயர்ப்புகள் — சில தொகுக்கப்பட்டன. பெரும்பாலும் இந்தியிலேயே எழுதினார். அயல்நாடுகளில் உள்ள ஆய்வு நிறுவனங்களில் ஆற்றிய
சிபிஜ(மாவோயிஸ்ட்) ஆளும் வர்க்க சேவகர்களே…
சிபிஐ(மாவோயிஸ்ட்) என்று பெயர் வைத்துக்கொண்டு, இடதுசாரி அதிதீவிரவாதத்தையும், அராஜகத்தையும் அரங்கேற்றி வருகின்றனர். சத்தீஷ்கர், ஜார்கண்ட் , ஒரிசா, மேற்குவங்கம், மகாராஷ்டிரத்தின் சில பகுதிகளில் நடத்திய கொடூரக் கொலைகள் மூலமாக தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளனர். அரசியல் எதிரிகளை கொலைசெய்வது, அடிமட்ட வனஅலுவலர்கள், நில மற்றும் காவல் அலுவலர் களை கொலைசெய்வது , கடத்துவது, கொள்ளையடிப்பது மற்றும் அரசியல் கட்சிகளிடையே கூலிப்படையாக செயல்படுவது, இவர்களது முக்கிய நடவடிக்கையாக மாறி உள்ளது. ஆளும் வர்க்க அடக்குமுறைகளிலிருந்து அப்பாவி மக்களை காப்பது, புரட்சிகர
கம்யூனிஸ்ட் அறிக்கை முகவுரைகளின் முக்கியத்துவம்
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை 1847 ஆம் ஆண்டு நவம்பரில் லண்டனில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கழகம் என்கிற ரகசியமாக செயல்பட வேண்டியிருந்த அமைப்பின் தத்துவார்த்த நடவடிக்கை வேலைத்திட்டமாக காரல் மார்க்ஸ், பிரடெரிக் எங்கெல்ஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. அறிக்கையின் மேன்மை, மகத்துவம், அமரத்துவம் ஆகியவைகளுக்கு அவ்வப்போது சந்தேகங்கள் எழுப்பப்படுவதும் அதன் மீது விவாதங்கள் நடப்பதும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. ஆனால், ஒவ்வொரு முறையும் விவாதங்களின் முடிவில் கம்யூனிஸ்ட் அறிக்கை தனது மேதாவிலாசத்தை உலகுக்கு உணர்த்தி தன்னுடைய தத்துவ மேலாண்மையை நிலைநிறுத்தியே வந்திருக்கிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

