Category: இதழ் பெட்டகம்
தோழர். பி.ஆர்.சி.க்கு செவ்வணக்கம்
(தோற்றம் 30.10.1925 – மறைவு 8.7.2008) “தனது அனுபவங்களையும், தத்துவப் பிரச்சனை களையும் பாமர மக்களின் மொழியில் அலசி, உற்சாகமூட்டும் ஆற்றல் படைத்தவர். தோழர் பி.ஆர்.சி என்று நாம் அன்போடு அழைத்த தோழர். பி.ராமச்சந்திரன். தமிழ் மண்ணில் கம்யூனிசக் கருத்துக்கள் வேர்விட அவரது பங்கு குறிப்பிடத்தக்கது. அதற்காக அவர்பட்ட சிரமங்களை இன்ப வேதனையாக கருதினார். மக்கள் இயக்கத்தை நசுக்க கம்யூனிஸ்ட்டுகளை அரசு வேட்டையாடிய காலத்தில் அவர் மக்களோடு மக்களாக காவல் துறையின் கையில் சிக்காமல் வாழ நேர்ந்த
மரபீனி சூதாட்டம்
அறிவியல் தொழில்நுட்பத்தை வேளாண்துறையில் புகுத்துவது ஒன்றும் புதிதில்லை. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, மரபணு மாற்ற தொழில்நுட்பம் வேளாண்துறையில் அறிமுகப் படுத்தப்பட்டு உலகெங்கிலும் பெரிய சர்ச்சை நடைபெற்று வருகிறது. இன்று உலக நாடுகள் பலவும் கடுமையான உணவுப் பஞ்சத்தை எதிர்கொண்டுள்ள சூழலில், மரபணு மாற்றப் பயிர்தான் உணவு பிரச்சனைக்கு தீர்வாக அமையும் என ஒருசாரார் வாதிடுகின்றனர். ஆனால், மறுபுறம் மரபணு மாற்றப் பயிர்கள் சுற்றுச்சூழலை பாதிப்பதுடன், உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்றும், மரபணு மாற்றப்பயிர்களுக்கு
நக்சல்பாரிகளும் – மாவோயிஸ்ட்டுகளும்
நக்சல்பாரி இயக்கத்தை உருவாக்கிய மூன்று தலைவர்களில் மிச்சமிருந்த கனுசன்யால், நோய் உபாதைகளால் அண்மையில் தற்கொலை செய்து கொண்டார். சாருமஜூம்தார், ஜங்கால் சந்தால், கனுசன்யால் ஆகிய மூவரும்தான் நக்சல்பாரி இயக்கத்தை துவக்கினார்கள். இவர்களில் சாரு மஜூம்தார் ஒரு வசதியான நிலப்பிரபுத்துவக் குடும்பத்தில் பிறந்தவர். ஜங்கால் சந்தால் பூர்வகுடியைச் சேர்ந்தவர். கனுசன்யால் ஜல்பைகுரி நீதிமன்றத்தில் குமாÞதாவாகப் பணியாற்றியவர். பின்பு நக்சல்பாரி இயக்கத்தின் பத்திரிகையான “வர்க்கப்போராட்டம்” இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். இம்மூவரில் கனுசன்யால்தான் ஆயுதமேந்திய தாக்குதலை நியாயப்படுத்தும் தத்துவ ஆசானாக
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
