Category: இதழ் பெட்டகம்
செம்மொழி மாநாடும் உண்மையில் தமிழுக்குச் செய்ய வேண்டியதும்
மனிதர்கள் தங்கள் கருத்துக்களை – சிந்தனையை வெளிப்படுத்த உதவும் ஒரு கருவிமட்டும்தான் மொழி என்கிற கருத்தை நாம் ஏற்க முடியாது. மொழியின்றிச் சிந்தனை இல்லை.சிந்தனையின்றி மொழியில்லை. விலங்கிலிருந்து மனிதனை வேறுபடுத்தும் ஒரு முக்கிய அம்சமாக மொழி விளங்குகிறது. மொழியின் வாயிலா கவே சிந்தனை அடுத்தடுத்த தலைமுறைக்கும் கடத்தப் படுகிறது. உற்பத்தியில் ஈடுபடும் உழைப்பாளிகள் தங்கள் அறிவுத்திறனை-தொழில் திறனை மொழியின் வாயிலாகவே தங்களுக்கிடையே பரிமாறிக்கொள்கிறார்கள்.அவ்வகையில் மொழி உற்பத்திக் கருவியாகவும் ஒரு பங்காற்றுகிறது.மொழி என்பது வெறும் கடத்தி அல்ல.வாகனம் அல்ல.
மூலதனத்துக்கு எதிரான மோதலைத் தீவிரப்படுத்துவோம்
ஜனநாயகக் கட்சிகளும், இடதுசாரிகளும் இணைந்து விலைவாசி உயர்வுக்கெதிராக, சாதாரண மக்களின் வாழ்வைப் பாதுகாக்க தீவிரமானப் போராட்டங்களை நடத்தி வருகி றார்கள். இந்தப் போராட்டங்களுக்கு மக்களிடையே பேராதரவு இருந்த போதும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் கொள்கைகளிலும், செயல்பாட்டி லும் எந்த மாற்றத்தையும் இதுவரை ஏற்படுத்த முடியவில்லை. ஒரு நவீன தாராளமய உலகச்சூழலில், இந்திய ஆளும் வர்க்கங்கள் உலகளாவிய நிதி மூலதனத்துக்கு ஆதரவாக அமல்படுத்தக்கூடிய பொருளாதாரக் கொள்கைகளின் நேரடி விளைவே இன்று ஏற்பட்டுள்ள வரலாறு காணாத
லெனினது எழுத்துக்களை கற்போம் லெனினிசத்தை வளர்ப்போம்
மாஸ்கோவில் உள்ள லெனின் மசோலியத்தில் இருக்கும் லெனினது உடல் உளுத்து வருகிறது எனவே புதைக்க வேண்டுமென்ற சர்ச்சையை ரஷ்ய பூர்சுவா நாடாளுமன்ற ஜனநாயகத்தை (டூமாவாதிகள்) வாழ வைக்கத் துடிக்கும் மேதாவிகளும், இன்றும் கம்யூனிசத்தைப் பூதமாக சித்தரிக்கும் மேலை நாட்டு பூர்சுவா சித்தாந்தவாதிகளும் சமீபகாலமாக ஒவ்வொரு ஆண்டு ஏப்ரல் மாதத்திலும் எழுதியும், பேசியும் வருவதை காண்கிறோம். அவர்களது மூளையில் ஏறுகிற மாதிரி ஒன்றை நாம் சொல்ல வேண்டியிருக்கிறது. அந்த உடலை பாதுகாப்பதால் தானாக லெனினிசம் வளரும் என்ற மூடநம்பிக்கை
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
