Author: Editorial
பண்பாட்டுத் தளத்தில் மார்க்சிய அணுகுமுறை!
இந்தியாவில், மதம் வாழ்வின் எல்லாப் பகுதிகளையும் தழுவி நிற்கும் ஒரு தத்துவமாக உள்ளது; சமூக, பொருளாதார, அரசியல் யதார்த்தங்களை மறைத்தும் உள்ளது. எனவே, மக்கள் யதார்த்தத்தைக் காண வேண்டுமெனில், இந்த யதார்தத்தை மறைத்து நிற்கும் அந்த மாயை அகற்றப்பட வேண்டும். எனவே, மதத்தைப் பற்றிய விமர்சனம் ஒன்றை உருவாக்குவது என்பது உடனடியான ஓர் அரசியல் கடமையாகிறது.
இந்திய சமுதாய அமைப்பும் வரலாறும் ஒரு மார்க்சிய கண்ணோட்டம்
இந்தியாவின் வரலாற்று அனுபவத்தை ஒரு பரந்த தளத்தில் வைக்கும் வகையில், நவீன காலத்திற்கு முந்தைய உலகின் சில சமூக அமைப்புகளைப் பற்றிய சுருக்கமான ஆய்வுடன் தொடங்குவது பயனுள்ளதாக இருக்கும். உலக வரலாற்றின் அடிப்படையில் வர்க்க சமுதாயத்தின் தோற்றம் மற்றும் ஆரம்பகால அரசு உருவாக்கம் ஆகியவை, கிமு 3000-இல் ஈராக்கின் தெற்கு மண்டலப் பகுதியில் தோன்றிய ஆரம்பகால நாகரிகமான சுமேரிய நாகரிகத்தில், அசாதாரண விரிவான தன்மையுடன் வரலாற்றில் இடம்பெற்றுள்ளன.
இந்துத்துவா வகுப்புவாதம்
விடுதலைக்கான தேசிய இயக்கம் உருவானதும் அதற்கு பிரிட்டஷ் அரசாங்கத்தின் எதிர்வினையின் ஒரு விளைவாகவும், 1906ஆம் ஆண்டு “ஆகா கான்” என்பவரது முன்முயற்சியில் முஸ்லீம் நிலப்பிரபுக்களின் ஒரு பிரிவினரால் 1906ம் ஆண்டு டாக்காவில் முஸ்லீம் லீக் தொடங்கப்பட்டது. முஸ்லீம் லீக் முஸ்லீம்களுக்கு தனி பிரதிநிதித்துவத்தையும் தனி வாக்குரிமையையும் கோரியது. பிரிட்டஷ் அரசாங்கம் தனது சூழ்ச்சிக்காக இதனை சாதகமாக கையாண்டது. பல்வேறு திருப்பங்கள் மற்றும் நிகழ்வுகளுக்கு பின்னர், அரசு “இந்திய அரசாங்கம் சட்டம் 1935” எனும் சட்டத்தை இயற்றியது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
