Author: rasindhan
புரட்சியின் மலர்களும், புத்தக வாசமும்!
இரா.சிந்தன் (டிரை காண்டினெண்டல்: சமூக ஆய்வு நிறுவனம் சார்பில் ‘சிவப்பு புத்தக தினத்துக்காக’ வெளியிடப்பட்ட “வாசிப்பின் பேரானந்தம்” பிரசுரத்தை தழுவி எழுதப்பட்டது) மன்னர்களும், நிலவுடைமையாளர்களும் கோலோச்சிய காலத்தில், எழுத்தும், கல்வி அறிவும் அடித்தட்டு மக்களிடமிருந்து பிடுங்கப்பட்டதை பல்வேறு சமுதாயங்களிலும் பார்க்க முடிகிறது. நிலப்பிரபுக்களுடைய அதிகாரம் சொத்துடைமையின் மீது மட்டுமல்லாமல், படிநிலைச் சமுதாயத்தின் மீதும் நிலைநிறுத்தப்பட்டிருந்தது. அதிகாரத்தின் மீது புனிதத்தன்மை ஏற்றப்பட்டது. நிலப் பதிவேடுகள், நிலவுடைமையாளர்களும், வட்டிக்காரர்களும் பராமரித்த கணக்கு நோட்டுகள், மதகுருமார்கள் போற்றி முன்னெடுத்த புனித நூல்கள்
திருநெல்வேலி எழுச்சியில் வ.உ.சி : புரட்சிவானத்தில் ஒரு விடிவெள்ளி !
இரா. சிந்தன் திருநெல்வேலி எழுச்சியில் வ.உ.சி புரட்சிவானத்தில் ஒரு விடிவெள்ளி! இரா. சிந்தன் ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908’ என்ற ஆய்வு நூலுக்கு, 2024 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நூலாசிரியரும் ஆய்வாளருமான ஆ.இரா.வெங்கடாசலபதி, திருநெல்வேலி எழுச்சிக்கான நினைவிடங்களை நெல்லையிலும் தூத்துக்குடியிலும் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 1908 திருநெல்வேலி எழுச்சி, தமிழ்நாட்டின் வரலாற்றில் முத்திரை பதித்த ஏகாதிபத்திய எதிர்ப்புக் கிளர்ச்சியாகும். அந்த எழுச்சிக்கு அடித்தளமாக அமைந்த வரலாற்று நிகழ்வுகள் இன்றும்
தமிழகத்தில் பொருள் முதல்வாதத்தின் சருக்கலும், வைதீக ஆக்கிரமிப்பும்!
இரா.சிந்தன் தமிழகத்தில் நிலவிய குடிவாழ்க்கையில், முன்னிலைப் பொருள்முதல்வாத நோக்கு நிலவியது. தொன்ம நம்பிக்கைகளும் உருவாகின. இவை உலகம் முழுவதும் நிலவக்கூடிய இயல்பான போக்குதான். தமிழ் இலக்கியங்களின் தொன்மையின் காரணமாக, ஆதிச் சமூகத்தின் தத்துவங்கள் அதன் இலக்கணத்திலும், கட்டமைப்பிலும், கலாச்சார வாழ்க்கையிலும் தொடர்ந்ததை பார்த்தோம். அதன் பின்னர் வர்க்க சமுதாயத்தில் தத்துவப் போக்கில் சில சருக்கல்கள் ஏற்பட்டிருந்தாலும், சுமார் 1500 ஆண்டுகள் தமிழர் இலக்கியங்களின் தத்துவ நோக்கில் பொருள் முதல்வாத பார்வைக்கு முக்கிய இடம் இருந்ததை தேவ பேரின்பன்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
