இயக்கவியல் பொருள்முதல்வாதம் மத்தியகட்சிகல்விபாடக்குறிப்பு (பகுதி -4)
4. வரலாற்று அணுகுமுறை வரலாற்று அணுகுமுறை என்பது உண்மையை சரியாக புரிந்துகொள்வதற்கான தொடக்கப் புள்ளியாகும். இது ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செயல்முறை நடைபெறும் காலத்தையும், இடத்தையும் கணக்கில் கொள்வதோடு, “அடிப்படை வரலாற்றுத் தொடர்பை மறக்காமல், ஒவ்வொரு சிக்கலையும் வரலாற்றில் அது எவ்வாறு தோன்றியது என்ற கண்ணோட்டத்திலிருந்து ஆய்வு செய்வதுடன், அதன் வளர்ச்சியின் முக்கிய கட்டங்கள் என்ன, அதன் வளர்ச்சிக் நோக்கில் இன்று அது என்னவாக மாறியுள்ளது என்பதையும் ஆய்வு செய்வது” என்ற அவசியத்தையும் உள்ளடக்கியது. (லெனின்) தோற்றம்,
இந்திய அரசியல் சாசனத்தில் இடம் பெற்றுள்ள சமூக நீதி அம்சங்கள்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா முன்பின் முரணற்ற இடதுசாரி நிலைப்பாடு பெரியார் ஒரு மிகச்சிறந்த சமூக செயல்பாட்டாளர். இந்திய சமூகத்தை மிக ஆழமாக ஆய்வு செய்தவர். பெரியார் மகத்தான பணிகளை நம்மிடையே செய்திருக்கிறார். சாதி ஒடுக்குமுறையைக் கடுமையாகச் சாடினார். சாதி ஒடுக்குமுறை, சமத்துவம், பாலின சமத்துவம் பற்றி அவரிடமிருந்து கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. பாலின சமத்துவத்தில் பெரியாருக்கு நிகர் பெரியார் தான். மிகச்சிறந்த அறிஞர்கள், சமத்துவத்திற்காக போராடியவர்கள் என்கிற பட்டியலில் பெரியார், அம்பேத்கர், போன்றோர் முக்கியமானவர்கள். அதேநேரம்,
டீப்சீக்கும் – பங்குச் சந்தையும்
பிரசன்ன வெங்கடேஷ் முதலாளித்துவத்தில் தொழில்நுட்பம் “உற்பத்திக் கருவிகளையும், அதன்மூலம் உற்பத்தி உறவுகளையும், அவற்றோடு கூடவே ஒட்டுமொத்த சமுதாய உறவுகளையும் இடையறாது புரட்சிகரமாக மாற்றி அமைத்திடாமல் முதலாளித்துவ வர்க்கம் உயிர்வாழ முடியாது.” என்று கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் மார்க்ஸ் குறிப்பிடுகிறார். சந்தையைக் கைப்பற்ற தங்களுக்குள் நிலவும் போட்டியில் முதலாளிகளும் அவர்களது நிறுவனங்களும் உற்பத்தி கருவிகளின் திறனை மேம்படுத்துவதில் எப்போதும் அதீத கவனம் செலுத்திக் கொண்டே இருப்பர். ஒவ்வொரு நிறுவனமும் முதலீடு மற்றும் லாபத்தின் ஒரு பகுதியை இதற்கென ஒதுக்கி
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
