பாசிசத்தை வீழ்த்திய 60 ஆம் ஆண்டு சோசலிசம்-செஞ்சேனை-சோவியத் மக்கள்
வரலாற்றில் சில அத்தியாயங்கள் மறக்கக் கூடாதவை. மனிதகுலம் புத்தெழுச்சி பெற்றிடவும், சரியான படிப்பினைகளை தனது அறிவுச் சொத்தாக்கி, பாதுகாக்கவும் வரலாற்றில் சில நிகழ்வுகளை மீண்டும் மீண்டும் நினைவுறுத்திக் கொள்ள வேண்டும். அத்தகு மகத்தானதோர் வரலாற்று நிகழ்வு பாசிசத்தின் வீழ்ச்சி. அந்த வீழ்ச்சியோடு முடிவுக்கு வந்த இரண்டாம் உலகப் போர். இந்தச் சாதனையை நிகழ்த்தி மனித இனத்தையே காப்பாற்றி வீரகாவியம் நிகழ்த்தியது, சோவியத் யூனியன். அந்நாட்டு ராணுவமான செஞ்சேனைக்கு உலகம் நன்றிக்கடன் பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போர் நிகழ்த்திய
சீனாவின் சோசலிசம்
“சந்தை சோசலிசம்” எழுப்பும் வினாக்கள்: சீனாவில் நடைமுறைப் படுத்தப்படும் சந்தை சோசலிசம் என்பது நீண்ட சோசலிச மாற்றத்தின் போது நிகழும் ஒரு இடைப்பட்ட நிலையா, அல்லது முதலாளித்துவத்திற்கான ஒரு குறுக்குப்பாதையா என்ற கேள்வி இன்று உலகமக்களிடமும், சோசலிச அனுதாபிகளிடமும் எழுந்து கொண்டு இருக்கின்றது. 1980க்கு பிறகு, டெங் ஜியாபிங் தலைமையின் கீழ், சீனா ஒருவகையான சந்தை பொருளாதரத்தை கையில் எடுத்துக் கொண்டுள்ளது. அந்த சந்தை பொருளாதார கொள்கைதான், சீனாவை இன்றைய நிலைக்கு வளர்த்துக் கொண்டு வந்துள்ளது. அப்போது
இயற்கை சீரழிவுகளையும் பயன்படுத்தி ஆதாயம் அடையும் புதிய முதலாளித்துவ வடிவம்
புதிய முதலாளித்துவ வடிவம்கடந்த ஆண்டின் கோடை காலத்தில் புஷ் நிர்வாகத்தின் யுத்த மறு சீரமைப்புக் கொள்கை வேகமாக செயல்படத் தொடங்கியது. அதற்காக ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதியன்று மறு சீரமைப்புக்கான ஒருங்கிணைப்பாளர் ஒருவரை வெள்ளை மாளிகை நியமனம் செய்தது. உக்ரைன் நாட்டிற்கான அமெரிக்க தூதராக முன்பு பணிபுரிந்த கார்லோஸ் பாஸ்கல் இந்த பதவிக்காக புதிதாக நியமனம் செய்யப்பட்டவர். இவரது அலுவலகத்தின் வேலை என்ன தெரியுமா? வியப்படையாதீர்கள்! ஏனென்றால் அதனைத் தெரிந்து கொண்டால் உங்களுக்கு வியப்பும் அதிர்ச்சியும் கூட
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
