அகநிலைவாதம் எதிர்த்த போராட்டம்!
சீத்தாராம் யெச்சூரி ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபனத்தை வலுப்படுத்துவதன் மீதான கவனம், அனைத்து காலகட்டங்களிலும் அந்தப் புரட்சிகர கட்சிக்கு இருக்க வேண்டும். கட்சியின் ஸ்தாபன அமைப்பு முறை என்ன என்பதையும் அதன் முன்னுரிமைகள் எவை என்பதையும் தீர்மானிப்பதாக கட்சியின் முக்கியமான அரசியல் கடமைகளும், திசைவழியும் அமைகின்றன. அரசியல் திசைவழியானது திட்டவட்டமான காலத்தில் நிலவும் திட்டவட்டமான சூழல்களைப் பற்றிய ஆய்வின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. இவை அரசியல் நடைமுறை உத்தியில் உள்ளடங்கும். தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலான ஒரு புரட்சிகரமான கம்யூனிஸ்ட்
சமகால உலகில் வளர்ந்துவரும் பலதுருவ போக்குகளும் அவற்றின் வரம்புகளும்
பலதுருவப்போக்கு வலுப்பெற்று வந்தாலும், அமெரிக்க வல்லரசும் அதன் நேச நாடுகளும் இன்றுவரை பெரும் ராணுவ-ஆயுத வல்லமையை கைவசம் வைத்துள்ளனர். தொடர்ந்து உலக நாடுகளையும் இயற்கை வளங்களையும் சூறையாடி, தம்மை வலுப்படுத்திக்கொண்டு வருகின்றனர். சீன – ரஷ்யா உறவு முன்னேற்றம் ஏகாதிபத்திய எதிர்ப்பு பங்கு ஆற்ற வாய்ப்பு உள்ளது என்றபோதிலும் ரஷ்யாவும் ஒரு பெரிய பலம் மிகுந்த முதலாளித்துவ நாடு என்பதை நாம் மறந்துவிட முடியாது.
மேலைநாடுகளின் மிரட்டல்களுக்கு அடிபணியாத தெற்குலகம்
மேலைநாடுகள் தரும் அழுத்தங்களால் ஏற்படுகிற விரக்தி ஒருபுறம், ரஷ்யாவுடன் சீரான உறவைப் பேணுவதால் கிட்டும் பொருளாதார வாய்ப்புகள் மறுபுறம் என்றிருக்கும் இன்றைய யதார்த்தச் சூழலிலேயே, ஆப்பிரிக்க, ஆசிய, இலத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தும் ரஷ்யாவுடனான உறவைத் துண்டித்துக்கொள்ளுமாறு வாஷிங்டன் தரும் நெருக்கடியைப் புறந்தள்ளி, அலட்சியம் செய்து வருகின்றன.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
