மார்க்ஸ்: ‘வேலை நாளும்’ வர்க்கப் போராட்டமும்
வேலைநாள், குறைந்தபட்சக் கூலி, கூட்டுப்பேரம் ஆகிய விதிமுறைகள், அறம் சார்ந்தோ நாகரிக நீதி கருதியோ முதலாளி வர்க்கத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பது மிகவும் தெளிவாகிறது. இந்த விதிகளை மீறும் நிலையிலும், அத்தகைய வேலைச் சூழ்நிலைகளில் மனித உரிமை மீறல்கள் ஏற்படும் நிலையிலும், முதலாளிகளின் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதும் அவற்றுக்கெதிராகக் குரல் எழுப்பபடுவதும் மிக அரிதாகவே உள்ளது.
புதிய நாடாளுமன்றம்: குடியாட்சிக்கு விடப்பட்ட சவால்!
காலனி ஆதிக்கத்திற்கு முடிவுகட்டிய இந்திய விடுதலைப் போராட்ட தலைவர்கள், சுதந்திர இந்தியா எப்படி அமையவேண்டும் என்பதை தீவிரமாக விவாதித்தார்கள். நவீன இந்தியாவிற்கு பாதை வகுக்கும் புதிய அரசமைப்பு சட்டத்தை உருவாக்கினார்கள். அப்போதே அரசமைப்புச் சட்டத்தை ஏற்க மறுத்த ஆர்.எஸ்.எஸ்., மநுநீதியைத்தான் இந்தியாவின் அரசமைப்புக்கு முன்மாதிரியாக முன்வைத்தது
மாநிலங்களின் உரிமைக்காக ஒன்றுபட வேண்டும் – பிரகாஷ் காரத்
எதிர்க் கட்சிகள் மாநில உரிமைகள், கூட்டாட்சியின் மீதான தாக்குதல்களை ஒருங்கிணைந்து எதிர்கொள்வதில்லை. நிறைய மாநில அரசுகள் எதிர்க்கட்சிகள் வசம் உள்ளன. எல்லா மாநிலங்களும் பாதிக்கப்படும்போது ஒருங்கிணைந்த எதிர்ப்பை காண்பிக்க வேண்டும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
