Tag: மார்க்சியம்
அக்டோபர் புரட்சி: மனிதகுல வரலாற்றின் திருப்புமுனை!
அக்டோபர் புரட்சி, முதலாளித்துவமே மனித சமூகத்தின் இயற்கையான மற்றும் நிரந்தரமான ஒழுங்கு என்ற மாயையை உடைத்தது. முதலாளித்துவத்தை வீழ்த்த முடியும் என்பதை நிரூபித்தது; ஐரோப்பா, ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் அதற்கு அப்பாலும் மகத்தான அளவில் மாற்றத்துக்கான ஓர் உலகளாவிய உந்துதலை உருவாக்கியது.
கம்யூனிசக் கோட்பாடுகள்
மக்களுக்குச் சொந்தமான நிலங்களிலும், தொழிற்சாலைகளிலும், பணிமனைகளிலும் பாட்டாளிகளை வேலைக்கமர்த்தி உழைப்பை ஒழுங்கமைத்தல்! ஒருசில தொழிற்சாலை உடைமையாளர்கள் மீதம் இருப்பின், அரசு கொடுக்கும் அதே அளவு உயர்ந்த கூலியைத் தருவதற்கு அவர்களை ஒப்புக் கொள்ளச் செய்தல்!
சொல்லகராதி: கூலி உழைப்பு
முதலாளித்துவ சமூகத்தில் தொழிலாளி சட்டரீதியாகச் சுதந்திரமானவர்; ஆனால் உற்பத்திச் சாதனங்களிலிருந்து பிரிக்கப்பட்டவர். எனவே, தனது வாழ்க்கையை நடத்துவதற்காக அவர் தனது உழைப்புச் சக்தியை சந்தையில் விற்க தள்ளப்படுகிறார்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



