Day: November 3, 2025

கூபாவில் மார்க்சிஸ்ட் (தமிழ்) மாத இதழ் ஆசிரியர்!
கூபா (CUBA) நாட்டின் தலைநகரம் ஹவானாவில், இடதுசாரி கட்சிகள் நடத்தும் தத்துவ இதழ்களின், மூன்றாவது சர்வதேச கூட்டம் கடந்த அக்டோபர் 15 முதல் 17 வரை கூபா நாட்டின் தலைநகரான ஹவானாவில் நடைபெற்றது. 30க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில், மார்க்சிஸ்ட் (தமிழ்) மாத இதழ் ஆசிரியரும், சி.பி.ஐ(எம்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான தோழர் உ. வாசுகி அவர்கள் பங்கேற்றார். “ஏகாதிபத்திய எதிர்ப்பு, பாசிச எதிர்ப்பு சிந்தனைகளும், அவற்றிற்கு உள்ள சவால்களும்” என்ற தலைப்பிலான

சொல்லகராதி: ஐக்கிய முன்னணி உத்தி
“பாசிச எதிர்ப்புப் பொது போராட்டத்தின் அடிப்படையில், உழைக்கும் மக்கள் அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய பரந்த பாசிச எதிர்ப்பு முன்னணியை உருவாக்குவது அவசியம்”. இவ்வாறான ஐக்கிய முன்னணி அமைப்பது, பிற்போக்குடன் மேற்கொள்ளும் சமரசம் அல்ல; மாறாக அதை எதிர்க்கப் பரந்த சக்திகளைத் திரட்டும் வழிமுறையாகும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
