நீலகண்ட சாஸ்திரிக்கு அப்பால்: திராவிட-ஆரியக் கதையாடல்கள் ஒரு மீள்பார்வை
டாக்டர்.ஜே. ரவிக்குமார் ஸ்டீபன்
அறிமுகம்
பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியின் 1964ஆம் ஆண்டு உரையை தி இந்து நாளிதழ் இத்தருணத்தில், குறிப்பாக, சமீபத்தில் ஏராளமான ஆய்வுகள் வெளிவரும் இத்துறையில், மீளாய்வுக்குத் தேர்ந்தெடுத்தது ஏன் என்பது விதந்தோதத் தக்கதாக உள்ளது. சமகால ஆய்வுகள் மானுடவியல் மரபியலில் புதிய வெளிச்சத்தை வழங்கியுள்ளன. ஹோமோ சேபியன்ஸ் ஆப்பிரிக்காவில் தோன்றினர் என்பதை இவை உறுதிப்படுத்துகின்றன. பேராசிரியர் டாக்டர் ஆர். பிச்சப்பனின் ஆய்வுகள், எல்1 ஹாப்லோ குழுவுடன் நாடார், ஈழவர், திய்யா ஆகிய சமூகங்களை இணைக்கும் மரபணு ஆதாரங்களைக் காட்டி, புலம்பெயர்வை மேலும் முறைப்படுத்தி உள்ளன. எல்1 என்பது மைட்டோகாண்ட்ரியல் டிஎன்ஏ (எம்டி டிஎன்ஏ) மரத்தின் தொடக்கக் கிளைகளில் ஒன்றாகும், இது எல் – லிருந்து வந்தது. மானுட வரலாற்றின் தொடக்கக் காலத்தில் பிரிந்தது. இந்தப் பரம்பரை பெரும்பாலும் ஆப்பிரிக்காவில் சஹாராவுக்கு தென்பகுதியில் காணப்படுகிறது. 1,40,000 முதல் 1,70,000 ஆண்டுகளுக்கு முன்பு எல்1 ஆப்பிரிக்காவில் தோன்றியிருக்கலாம், அங்கிருந்து அது பிரிந்து சென்றது.
எல் I பி , எல்1 சி போன்ற அதன் துணைப் பரம்பரைகள் இன்று ஆப்பிரிக்க மக்களிடையே காணப்படுகின்றன. தென்னிந்தியாவின் பிற பகுதிகளுக்கு இடம் பெயர்வதற்கு முன்பு மலபார் கடற்கரையில் முதலில் குடியேறியவர்களில் இச் சமூகங்களின் மூதாதையர்கள் இருந்ததாக இம் மரபணுத் தொடர்பு காட்டுகிறது.
மானுடவியல் இடம் பெயர்வின் கால வரிசை
சுமார் 70,000 ஆண்டுகளுக்கு முன்பு, பனி யுகத்தின் தொடக்கத்தில், மனிதக் குழுக்கள் பல்வேறு பகுதிகளுக்கு புலம் பெயரத் தொடங்கின.
ஆர்க்டிக் நோக்கி புலம் பெயர்ந்த ஒரு குழு, பெரும் விலங்குகள், யானைகளைப் போன்ற மிருகங்கள், சபர்-பல் பூனைகள், சீல், நார்வால்கள் போன்ற கொழுப்பு நிறைந்த, வலுவான விலங்குகளை வாழ்வாதாரத்திற்காக
நம்பியிருந்தது. ரிக் வேதம் (மண்டலம் 1, சுக்தம் 133, ரிச்சா 13) ஆரியர்கள் தொடக்கக் காலத்தில் வாழ்ந்த ஒரு பகுதியை விவரிக்கிறது. அவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே சூரியன் உதிக்கின்ற, வெகு காலத்திற்குப் பிறகு விடியல் ஏற்படும் இயல்பைக் கொண்ட ஆர்க்டிக் வட்டத்தில் வசித்தார்கள் என்பதை இந்த வசனம் வெளிப்படுத்துகிறது. இவற்றை ஜோராஸ்ட்ரிய வேதமான அவெஸ்தா (வெண்டிடாட், ஃபார்கார்ட் 1) மேலும் உறுதிப்படுத்துகிறது.
மற்றொரு குழு கிழக்குக் கடற்கரையை நோக்கி இடம் பெயர்ந்து, பனிக் கடல்களுக்கு அடியில் கடல் வாழ் உயிரினங்களை உண்டு உயிர் வாழ்ந்தது. அவர்கள் கரையோரமாகப் பயணம் மேற்கொண்டு, இந்தியாவின் மேற்குக் கடற்கரையை அடைந்து இறுதியில் ஆஸ்திரேலியா வழியாக அலாஸ்காவை அடைந்தனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் மரபியல் வல்லுநர்கள் 2008 ஆம் ஆண்டு விருமாண்டியில் “எம் 130” என்ற மரபணுவையும், மதுரைக்கு அருகிலுள்ள பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த 12 நபர்களையும் கண்டறிந்ததானது, ஆஸ்திரேலிய பழங்குடியினரின் முன்னோர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா வழியாகச் சென்றதை உறுதிப்படுத்துகிறது. அவர்கள் சிலியின் தெற்கு முனையை அடையும் வரை இந்த புலம் பெயர்வு தொடர்ந்தது. தெற்காசியாவில் குடியேறிய இக் குழுவினர் பின்னர் “திராவிடர்கள்” என்றழைக்கப்பட்டனர்.
மூன்றாவது குழு மத்திய தரைக்கடல் கடற்கரையில், கடல் வாழ் உயிரினங்களை உண்டு வாழ்ந்தது. பனி யுகத்திற்குப் பிறகு, பனி உருகி, லெவண்ட் ( மத்திய தரைக்கடல் பகுதி) பகுதியில் வெள்ளம் புகுந்ததால், சிலர் ஜாக்ரோஸ் மலைகளுக்குக் குடிபெயர்ந்தனர், அதே நேரத்தில் நோவாவின் பேரன்களில் ஒருவரான “அஷூர்” தலைமையில் மற்றொரு குழு வடக்கு நோக்கி நகர்ந்து, இன்றைய கஜகஸ்தானில் உள்ள அர்ஜிகாவில் ஒரு குடியேற்றத்தை நிறுவியது.
ஆர்க்டிக்கிற்கு புலம் பெயர்ந்த குழுவினர் இறுதியில் “தேவர்கள்” என்று அடையாளம் காணப்பட்டனர். பனி யுகத்திற்குப் பிறகு, அவர்கள் தெற்கு நோக்கி நகர்ந்து, அசுரரின் ஆதரவாளர்கள் நிறுவிய நகரமான அர்ஜிகாவில் தங்கள் உறவினர்களுடன் மீண்டும் இணைந்தனர். “தேவர்கள்” அர்ஜிகாவில் குடியேற அனுமதிக்கப்பட்டனர், ஆனால் வழிபாட்டின் போது பிரசாதத்தை (உணவு) பலி நெருப்பில் இடுவது குறித்து விரைவில் விவகாரம் ஏற்பட்டது. அசுரரைப் பின்பற்றுபவர்கள் கோதுமை, பார்லி ஆகியவற்றைச் சாகுபடி செய்து வந்தனர், அவர்கள் இலி ஆற்றின் மீது ஒரு நீர்ப்பாசன அணையைக் கட்டினார்கள், இது தேவர்களின் கால்நடைகளுக்கு குடிநீர் கிடைக்க விடாமல் தடை செய்ததால், “தேவர்-அசுரர் மோதலைத்” தூண்டியது. தொடக்கத்தில் வெற்றி கிட்டிய போதிலும், அசுரர்கள் குழு இறுதியில் தோற்கடிக்கப்பட்டது. நினிவே நகரத்தை உருவாக்க அர்ஜிகாவிலிருந்து புலம் பெயர்ந்து, பின்னர் அசீரிய நாகரிகத்தை உருவாக்கியது.
அசுரர்கள் வெளியேறியதை அடுத்து, அர்ஜிகாவில் தேவர்களுக்கு வாழ்க்கை சவாலாக மாறியது, அவர்களும் புலம் பெயர நேரிட்டது. ஒரு குழு இன்றைய உஸ்பெகிஸ்தானிலுள்ள அமு தர்யா டெல்டாவில் குடியேறியது, அங்கு அவர்கள் “தேவர்கள்” என்ற பட்டத்தைக் கைவிட்டு, “மனு” (வேதத்தில் ஆபிரகாம் நோவாவுக்கு சமமானவர்) வம்சாவளியினர் என அடையாளம் காணப்பட்டனர், பின்னர் மேடிஸ் அல்லது மாகிஸ் என்று அறியப்பட்டனர். மற்றொரு குழு தெற்கு நோக்கி புலம் பெயர்ந்து, இப்போதைய ஈரானில் குடியேறியது.
பொ.ஆ.மு 2200 ஆம் ஆண்டு மேதியர்கள் குதிரைகளை வளர்க்கத் தொடங்கினர். அவர்கள் குதிரையின் மீது ஏறி, லெவன்ட் மீது படையெடுத்தனர், அங்கு நவீன ஈரானில் தங்களது (தேவர்) உறவினர்களை எதிர்கொண்டனர். இரண்டு குழுக்களும் “ஆரியர்கள்” அதாவது, உன்னதமானவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். அதே சமயம் அவர்கள் வேதங்களில் “அஹி” என்றும், அவெஸ்டாவில் “அஜி” என்றும் வெளியாட்களை இழிவாகக் குறிப்பிட்டனர்.
திராவிடர்கள் நர்மதா பள்ளத்தாக்கில் சுமார் 13,000 ஆண்டுகளுக்கு முன்பு நெல் சாகுபடியில் ஈடுபட்டனர், அதே தருணத்தில் கோண்ட் திராவிடர்கள் இரும்பு உருக்குவதில் தேர்ச்சி பெற்றனர். சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு டெனிசோவன்கள் போன்ற அவர்களது முந்தைய உறவினர்களை ஹோமோ சேபியன்கள் சந்தித்தனர், திராவிடர்கள் பொ.ஆ.மு 28,000 முதல் 11,000 வரை தெற்காசியாவுக்கு வந்ததாக நம்பப்படுகிறது.
பொ.ஆ.மு 2000 அளவில் ஆரியர்கள் ஆரக்கால்கள் பொருத்திய சக்கரத்தைக் கண்டறிந்தனர். குதிரை பூட்டப்பட்ட தேர்களை வடிவமைக்க இக் கண்டுபிடிப்பு அவர்களுக்கு உதவியது. இதனைப் பயன்படுத்தி தெற்காசியா உட்பட அண்டை பிரதேசங்களில் அவர்கள் படையெடுத்தனர். பொ.ஆ.மு 2000 ஆம் ஆண்டுக்கும் 1500 க்கும் இடையில் ஹரப்பா நகரங்களுக்கு ஆரியர்கள் படையெடுப்பு நடைபெற்றது.
பின்னர் பொ.ஆ.மு. 7 ஆம் நூற்றாண்டில் மத்திய ஆசியாவில் இருந்து ஜாட்கள், ராஜபுத்திரர்கள், அஹிர்கள், குஜ்ஜார்கள், பலூச்கள், பதான்கள் போன்ற குழுக்களை உள்ளடக்கிய ஆரியர்கள் தெற்காசியா மீது படையெடுத்தனர். அதைத் தொடர்ந்து பொ.ஆ.மு. 515 ஆம் ஆண்டு ஈரானைச் சேர்ந்த ஜோராஸ்ட்ரிய (பார்சி) ஆரிய அரசன் முதலாம் டேரியஸ்,
பொ.ஆ.மு. 326 ஆம் ஆண்டு மாசிடோனியாவைச் சேர்ந்த மகா அலெக்சாண்டர் ஆகியோர் படையெடுத்தனர்.
பொ.ஆ.மு 305 – 303 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட செலூசிட் படையெடுப்பு தெற்காசியாவில் ஹெலனிஸ்டிக் செல்வாக்கை நிறுவியது, இது பொ.ஆ.பி 712 ஆம் ஆண்டு ஆரியரல்லாத பழங்குடித் தலைவரான முகமது பின் காசிமின் படையெடுப்பு வரை நீடித்தது. இவ்வாறு, தெற்காசியா காலப்போக்கில் பல ஆரிய படையெடுப்புகளை எதிர்கொண்டது.
பொ.ஆ.மு 722-721 ஆம் ஆண்டுகளில், இஸ்ரேலின் வடக்கு இராச்சியத்தை நியோ-அசிரியர்கள் (அசிரியாவைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஆரியர்கள்) கைப்பற்றியதைத் தொடர்ந்து, “வெளியேற்றப்பட்ட பத்து பழங்குடிக்குழுவினர்” காஷ்மீர், திபெத், சீனா, இறுதியில் வட கிழக்கு இந்தியா வரை உலகின் பல்வேறு பகுதிகளுக்குக் குடிபெயர்ந்தனர். மேகாலயாவின் காசி மொழி பேசும் சமூகங்களிலும், மணிப்பூரிலும், மிசோரமிலும் ஹ்மர், தாடூ , குக்கி மொழி பேசும் பழங்குடியினரிலும் அவர்களின் தொடர்ச்சியை இன்றும் காணலாம். இந்த மொழியியல் இணைப்பு, இந்தோ-ஐரோப்பிய மொழிகளுக்கு மாறாக ஆஸ்திரோ ஆசிய மொழிகளுக்கு செமிட்டிக் மொழிகளுடன் தொடர்பு உள்ளதை நிரூபிக்கிறது. பியூரர் ஹெய்மன்டிராப் உள்ளிட்ட பலரது கருதுகோள்களில் குறைபாடுகள் இருப்பதை இது
காட்டுகிறது .
பூமிஜ், ஹோ, முண்டாரி, சந்தாலி மொழி பேசிய முண்டா பழங்குடியினரும் ஆரியர்கள் அல்ல என்பதையும் இது காட்டுகிறது. இப்பழங்குடியினர் குறித்த மரபணு ஆய்வுகள் மூலம் லெவன்ட் பிராந்தியத்தில் அவர்களின் மூலத்தை மேலும் கண்டறிய இயலும்.
ஆதி– திராவிடர்கள் மற்றும் திராவிடர்களின் மையம்: மாறாத அடித்தளங்கள்
திராவிடம் என்ற சொல் முதன் முதலில் பொ.ஆ.பி ஏழாம் நூற்றாண்டில் குமரிலபட்டர் என்பவரால் தனது தந்திரவர்த்திகா என்ற நூலில் பயன்படுத்தப்பட்டது. பின்னர், 14 ஆம் நூற்றாண்டில், சமஸ்கிருத நூலான லீலா திலகம், கேரளா, தமிழ்நாடு பகுதிகளில் பேசும் மொழிகளைக் குறிக்க “திரமிடா” என்ற சொல்லைப் பயன்படுத்தியது. எனவே, “திராவிடர்” என்பது தமிழ் அல்லாத பிற மொழி பேசுபவர்களால் தமிழைக் குறிப்பதற்காக தோன்றியிருக்கலாம்.
தி இந்துவின் ஒரு கட்டுரையில், பேராசிரியர். சாஸ்திரி, ஜே. பரோவை மேற்கோள் காட்டி, “வேத உரையாடல் நாம் அறிந்த திராவிட மொழிகளின் வரலாற்றால் அல்லாமல், முந்தைய வடிவமான ஒரு வகையான ஆதி-திராவிடத்தின் செல்வாக்கிற்கு உட்பட்டது” என்கிறார். இது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தின் போடன் பேராசிரியரான தாமஸ் பர்ரோவைக் குறிக்கலாம். மொழிகள் வளர்ச்சி பெற்று வருபவை என்பது அனைவரும் அறிந்ததே; ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் பேசப்பட்ட தமிழ் இன்றைய சொல் வழக்கிலிருந்து வேறுபட்டது. திருநெல்வேலியில் இருந்து வந்த மக்களின் வருகையால், சென்னைத் தமிழ் பேச்சு வழக்கு மாறி, மெருகேறியது. பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு, மதுரையிலிருந்து சில சொல்லாடல்களை தமிழ்நாடு முழுவதும் பிரபலப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு ஆற்றியுள்ளார். மதுரை மொழியில் திருடுதல் என்பதற்கு ‘ஆட்டையப் போடுதல்’ என்ற பொருள்படும் சொல் குறிப்பிடத்தக்க ஒரு உதாரணம் ஆகும். சுவாரஸ்யமாக, இச் சொற்றொடரின் நேரடிப் பொருள் “செம்மறியாட்டை பலியிடல்” என்பதாகும்.
மொழி நிலையானது அல்ல; அது பேசும் மக்களின் உணர்வுகள், வெளிப்பாடுகளுடன் உருமாறுகிறது. நாடார், ஈழவர், திய்யா சமூகங்களின் ஆப்பிரிக்க முன்னோர்கள் பேசிய தமிழ் இன்று அவர்கள் பேசும் தமிழிலிருந்து ஐயத்துக்கு இடமின்றி வேறுபட்டவை. ஈழவர், திய்யா சமூகங்களைப் பொறுத்தவரை, சமஸ்கிருதத்தை அறிமுகப்படுத்திய ஆரியத்தின் செல்வாக்கின் கீழ் அவர்களின் தமிழ் சுமார் 1,200 ஆண்டுகளுக்கு முன்பு மலையாளமாக உருப்பெற்றது. அதேபோல, 3,000 ஆண்டுகளுக்கு முன்பு பேசப்பட்ட தமிழ், இன்றைய தமிழிலிருந்து வேறுபட்டிருந்தது. இருப்பினும், இவை தொல்காப்பியர் தனது இலக்கணத்தில் முன் வைத்ததன் அடிப்படையிலேயே உள்ளது. தமிழின் முக்கியக் கூறுகளில் காணப்படும் இத் தொடர்ச்சி, காலப்போக்கில் மொழியியல் மாற்றங்கள் இருந்தபோதிலும், செம்மொழியான தமிழ் நவீன மொழிகளுடன் தொகுக்கப்படுவதற்குக் காரணமாகும்.
மொழியியல் அடுக்குகள்
தெற்காசியாவின் தாய் மொழிகளை ஒரு கேக் என்பதாக கற்பனை செய்து பாருங்கள். கேக்கின் “சுடப்பட்ட” மையப்பகுதி மக்களின் வெளிப்பாடுகளையும், உணர்ச்சிகளையும் குறிக்கிறது, மேலே உள்ள “பனிக்குழைவு” திராவிட மூதாதையரைக் குறிக்கிறது. இங்கு நிகழ்ந்த ஒவ்வொரு படையெடுப்பும் இந்த அடிப்படை-புதிய பழங்கள், உண்ணக்கூடிய பூக்கள், சாக்லேட் ஷேவிங்ஸ், ஸ்ப்ரிங்கிள்ஸ், பட்டர்கிரீம், ஃபாண்டண்ட், பல்சுவை பழங்கள், வறுக்கப்பட்ட கொட்டைகள், மெரிங்கு, கிளேஸ், சாக்லேட் கனாச்சே அல்லது புதினா போன்ற மூலிகைகள் தனித்துவமான அலங்காரங்களைச் சேர்த்தன. படையெடுத்தவர்கள் ஒவ்வொருவரும் இந்த மொழியியல் “கேக்கின்” சுவையை வடிவமைத்தனர்.
எடுத்துக்காட்டாக, பொ.ஆ.மு 7 ஆம் நூற்றாண்டில் மத்திய ஆசியாவிலிருந்து குஜ்ஜார்கள் இந்தியாவுக்கு வந்தபோது, அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதி குர்ஜரம் என அறியப்பட்டது, குஜ்ஜார்களின் மொழி ஆதி-திராவிடத்துடன் கலந்து குஜராத்தியை உருவாக்கியது. மறுபுறம், திருநெல்வேலி மக்கள், ஆதி-திராவிடத்தின் பல கூறுகளைத் தக்க வைத்துக் கொண்டுள்ளனர், ஏனெனில் இப்பகுதிகளில் ஆரியர்கள் செல்வாக்கு மிகக் குறைவு – மாலிக்காபூரின் படையெடுப்பு கூட மதுரைக்கு அப்பால் செல்லவில்லை.
ஃபியூரர்-ஹைமென்டோர்ஃப், சொல்லிலக்கணத்தை மொழியின் தோற்றத்துடன் தொடர்புபடுத்திய விதத்தை, சிலர் துல்லியமற்றதாகக் கருதுகின்றனர். ஏனெனில் வார்த்தைகள் உணர்ச்சிகளைக் குறிக்கின்றன. உணர்ச்சிகள் வார்த்தைகளைக் குறிப்பதில்லை என அவர்கள் கருதினர். எர் விஸ்வநாத் கைரே, தனது ‘அடகுலா மடகுலா’ என்ற நூலில், இதற்கு நேர்மாறாக வாதிடுகிறார்: உணர்ச்சிகள் வார்த்தைகளுக்கு முந்தியவை. படையெடுப்பாளர்களும், வணிகர்களும் பெரும்பாலும் பெண்களை உடன் அழைத்து வராமல் இங்கு வந்து குடியேற்றிய பின்னர் உள்ளூர் பெண்களை மணம் புரிந்து கொண்டனர். ஆதி-திராவிட மொழி பேசும் தாய்மார்களுக்குப் பிறந்த குழந்தைகள், அவர்கள் தங்கள் தந்தையின் இந்தோ-ஆரிய மொழியை தினசரி தொடர்புக்காக ஏற்றுக்கொண்டாலும், சிறு வயதிலேயே தங்கள் தாய்மார்கள் கற்பித்த உணர்ச்சி வெளிப்பாடுகளைத் தக்க வைத்துக் கொண்டனர். மராத்தியில் இது போன்ற ஒரு வெளிப்பாடு இஸ்ஸா(கூச்சம்) அல்லது பிற உணர்ச்சிகளை வெளிப்படுத்த பயன்படுகிறது. ci (சீ), cici (சீசீ), cicci (சீச்சீ) போன்றவை தமிழ்ச் சொல்லாடல்களையும், சீ , சீச்சீ போன்றவை கன்னடச் சொல்லாடல்களையும் வெளிப்படுத்துவதாக கைரே கூறுகிறார். மராத்தி உரையாசிரியர்கள் பலர் மராத்தியில், ஆச்சரியப்படுவதை குறிக்கும் “ஏய்” என்பது சமஸ்கிருதத்திலிருந்து தோன்றியதாகக் கருதுகின்றனர், ஆனால் கைரே இது உண்மையில் அடே என்ற தமிழ் வார்த்தையிலிருந்து உருவானது என்கிறார். மராத்தியும், தமிழும் தங்கள் சொற்களஞ்சியத்தில் ‘ஆர்’ , ‘டி’ ஒலிகளை அடிக்கடி பரிமாறிக்கொள்வதாகக் காட்டுகிறார்.
கைரே நூலின் தலைப்பு, ‘அடகுலா மடகுலா’ என்பது, மராத்திய தாய்மார்கள் பயன்படுத்தும் தாலாட்டு ஒலிகளைக் குறிப்பிடுகிறது, இருப்பினும் இந்தத் தாலாட்டுகளின் பொருளை மஹாஸ்திரி அல்லது பிராகிருதம் மூலம் முழுமையாகப் புரிந்து கொள்ள இயலவில்லை. இது இன்றைய மராத்தியில் பெருமளவுக்கு செல்வாக்கு செலுத்துகிறது. இருப்பினும், தமிழ் அகராதியின் மூலம் பகுப்பாய்வு செய்யும் போது அவற்றின் முக்கியத்துவம் தெளிவாகிறது. கைரே ஒரு எழுத்தாளர் மட்டுமல்ல; அவர் ஒரு சமஸ்கிருத அறிஞர், சாகித்ய அகாடமி விருது வென்றவர். அவரது நூல் ‘அடகுல மடகுலா’ 1982 ஆம் ஆண்டு அரசு விருதைப் பெற்றது.
ஆரிய அடையாளமும், தெற்காசிய சமத்துவ சிந்தனையும்
“திராவிடர்” என்பது ஆரியர்களால் சூட்டப்பட்ட ஒரு பெயராகும், அதேசமயம் “ஆரியர்” என்பது சுயமாகச் சூடிக்கொண்டதாகும். நவீன காலங்களில், ஆரிய அடையாளத்தைப் பற்றிய இக் கூற்று மீண்டும் முன்னுக்கு வந்துள்ளது, அதாவது ஈரானின் ஷாவான முகமது ரெசா பஹ்லவி 1967 ஆம் ஆண்டு “ஆரியர்களின் ஒளி” என்று பொருள்படும் “ஆர்ய மேஹர்” எனும் பட்டத்தைச் சூட்டிக்கொண்டார். இந்தச் சூழல் ஆரிய மரபு பற்றிய மாக்ஸ் முல்லரின் விளக்கங்களைப் புதிய கண்ணோட்டத்தில் நோக்கத் தூண்டுகிறது.
இன மேம்பாட்டு முறை, சமூகப்படி நிலை பற்றிய கருத்துக்களைக் கருத்தில் கொள்ளும்போது, 20ஆம் நூற்றாண்டின் ஜூலியன் ஹக்ஸ்லியை மட்டும் நாம் நோக்க வேண்டியதில்லை. தெற்காசியாவின் அடிப்படையான சிந்தனையாளர், தமிழ்க் கவிஞர் பொ.ஆ.மு. முதலாம் நூற்றாண்டுக்கும், பொ.ஆ.பி 6 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்த திருவள்ளுவர், ஆரியர்களால் திணிக்கப்பட்ட சாதிப் பிளவுகள் சமூகத்தில் ஊடுருவிய தருணத்தில், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’- அதாவது “பிறக்கும் போது எல்லோரும் சமம்” என்ற புரட்சிகரப் பிரகடனத்தை முன்வைத்தார். இத்தகைய துணிச்சலான நிலைப்பாடு, கடுமையான சாதியப் படிநிலையின் உச்சத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொண்ட ஆரியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட சமத்துவமின்மைக் கோட்பாட்டைத் தகர்த்தது. இந்தியாவின் சாதி அமைப்பைப் பற்றிய பரிச்சயமில்லாத ஹக்ஸ்லி, அது ஏற்படுத்திய ஆழமான பாகுபாட்டை அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, இன, சமூக சமத்துவமின்மையை அகற்றுவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க செயல், இந்தியாவின் சாதியக் கட்டமைப்பை ஒழிப்பதும், சாதி அடிப்படையிலான பாகுபாடுகளை நிலைநிறுத்தும் நூல்களை நிராகரிப்பதுமாகும்.
பொ.ஆ.மு 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் தத்துவ அறிஞரும், வானியலாளருமான கணியன் பூங்குன்றன், ஜாட்கள், ராஜபுத்திரர்கள், அஹிர்ஸ், குஜ்ஜார்கள், பலூச்கள், பதான்கள் போன்ற குழுக்களின் ஆரியப் படையெடுப்புகளைத் தொடர்ந்து ஒரு நீடித்த பாரம்பரியத்தை விட்டுச் சென்றார். தெற்காசிய மக்களிடம் முரண்பாடுகள் நிலவி வந்த சூழலில் “யாதும் ஊரே யாவரும் கேளீர்”- “ஒவ்வொரு நகரமும் உங்கள் நகரம்; அனைவரும் உங்கள் உறவினர்கள்” என்ற தனது தொலைநோக்கான ஒற்றுமை, உறவுக்கான உணர்வை ஏற்படுத்தினார்.
அவரது அறிவு நல்லிணக்கத்தை வளர்த்தது, உள்நாட்டுப் போர்களுக்கு எதிராக மக்களைப் பாதுகாத்தது, பிராந்தியம் முழுவதும் ஒற்றுமை உணர்வை வலுப்படுத்தியது.
லெமூரியாக் கண்டம், சங்க காலம் பற்றிய தவறான கருத்து
தமிழர்கள் பெரும்பாலும் இந்த நம்பிக்கைகளை அறிவியல் தரவுகளுடன் முழுமையாக இணைத்துக் காணாமல், தங்கள் இலக்கியங்களுக்கு நீண்ட தொன்மையைக் காரணம் காட்டுகிறார்கள். லெமுரியா, இந்தியாவையும் ஆஸ்திரேலியாவையும் இணைக்கும் ஒரு மூழ்கிய தரைப் பாலம் என்று ஒரு காலத்தில் அனுமானிக்கப்பட்டது. இது, சில புவியியல் மற்றும் உயிரியல் தொடர்ச்சியின்மையை தெளிவுபடுத்துவதாகக் கருதினர். இருப்பினும், இக் கருத்து நவீனக் கண்டுபிடிப்புகள் மூலம் வழக்கற்றுப் போனது. பசிபிக் பகுதியில் உள்ள ஜிலாண்டியா, மொரிஷியா, இந்தியப் பெருங்கடலில் உள்ள கெர்குலென் பீடபூமி போன்ற மூழ்கிய நிலப்பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், இந்திய அல்லது பசிபிக் பெருங்கடல்களில் உள்ள எந்த புவியியல் அமைப்பும் இக் கண்டங்களுக்கு இடையே தரைப்பாலமாக செயல்பட்டிருக்க வாய்ப்பில்லை. பூமித் தகடுகளின் சறுக்கல் சில புதிய விலங்குகளின் தோற்றத்திற்கு முன்பே நிகழ்ந்தது என்பது, குமரிக் கண்ட தொன்மத்தை அறிவியல் ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாததாக ஆக்கியது.
தமிழ்க் கடலோர நகரங்களும், அவற்றின் இலக்கியக் காப்பகங்களும் வரலாற்று சுனாமியால் உண்மையில் இழந்திருந்த போதிலும், இன்று நம்மிடம் இருக்கும் சங்க இலக்கியம் பொ.ஆ.மு 3 ஆம் நூற்றாண்டுக்கும் பொ.ஆ.பி 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில்தான் இயற்றப்பட்டது. சங்க காலத்திற்கு முன்பே தென்னிந்தியாவில் ஆரியப் படையெடுப்பு நடந்ததால், இந்த இலக்கியத்தில் ஆரிய தெய்வங்கள், தாக்கங்கள் பற்றிய குறிப்புகள் இயல்பாகவே உள்ளன. ஆசிய ஆய்வுக் கழகத்தின் பேராசிரியர் டாக்டர் ஜான் சாமுவேல் கருத்துப்படி, சங்கம் என்ற வார்த்தையே தொல்காப்பியரின் இலக்கணத்துடன் ஒத்துப்போவதில்லை, ஏனெனில் தொல்காப்பியத்தின்படி, சொற்கள் “ச” என்ற எழுத்தில் தொடங்க முடியாது. எனவே, பாரம்பரியம் நிறைந்ததாக இருந்தாலும் , தமிழ் வரலாற்றுக் கதைகள் அறிவியல் தரவுகளை கருத்தில் கொண்டு அவற்றின் தொன்மையான தோற்றத்தை மிகவும் துல்லியமாகக் கால வகைப்படுத்த வேண்டும்.
முடிவாக…
இக்கட்டுரையை தி இந்து வெளியிடும் தருணம், ஆரியர்களை இந்தியாவின் பூர்வகுடி மக்களாகக் காட்டும் நோக்கத்துடன், சிந்து நாகரிகத்தை சரஸ்வதி நாகரிகம் என்று மறு பெயரிடுவதற்கான கருதுகோளை ஆதரிக்கும் நோக்கத்தைக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. சிந்து எழுத்துக்கள் வேத மரபில் வேரூன்றி இருப்பதாகவும், “இந்தியாவிலிருந்து” புலம் பெயர்ந்த கோட்பாட்டை வலியுறுத்துவதாகவும் இக்கட்டுரை உள்ளது. இருப்பினும், ரிக்வேத மண்டல் 1, சுக்தாஸ் 116 (வசனம் 3-5), 117 (வசனம் 14 & 15), மற்றும் 182 (வசனம் 6) ஆகியவற்றின் குறிப்புகள் காஸ்பியன் கடல் பகுதியை ஆரியர்களின் தாயகம் என்பதை தெளிவுபடுத்துகின்றன. வரலாற்று, மானுடவியல், மரபியல், மொழியியல் தரவுகளுக்கு மாறாக , ஆரியர்கள் இந்தியாவைத் தங்கள் தாயகம் என்று கூறி, சிந்து எழுத்து வேத சமஸ்கிருதம் என்று கூறுவது எவ்வாறு என்பது புதிராக உள்ளது.
வஸந்த் ஷிண்டே, வாகீஷ் எம். நரசிம்மன், நிராஜ் ராய், டேவிட் ரீச் ஆகியோரின் தலைமையில், இந்தியாவின் ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்திலுள்ள ஹரப்பா தொல்பொருள் தளத்தில் 61 எலும்புக்கூடு மாதிரிகளில் மரபணு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த மாதிரிகளில் இருந்து டிஎன்ஏ பிரித்தெடுக்கப்பட்டு சேகரிக்கப்பட்டது, சில தொன்மையான டிஎன்ஏ – வில் காணப்படும் வழக்கமான சைட்டோசின்-டு-யூராசிலில் இருந்த குறைபாடுகளைக் களைய யூரேசில்-டிஎன்ஏ கிளைகோசைலேஸ் (யுடிஜி) மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஹரப்பா நாகரீகம் அடிப்படையில் பல்வேறு இனக்குழுக்கள் வாழ்ந்த நகரம் அல்ல என்று கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன; அதன் மரபணு அமைப்பு பின்னாளில் தெற்காசியாவில் செல்வாக்கு செலுத்திய ஸ்டெப்பி பகுதி கால்நடை மேய்ப்பர்கள் அல்லது மேற்கு ஈரானிய விவசாயிகள் அல்லது கால்நடை மேய்ப்பர்களிடமிருந்து எத்தகைய பங்களிப்பையும் கொண்டிருந்ததைக் காட்டவில்லை.
தமிழில்: சிசுபாலன்
You may also like
1 comment
Comments are closed.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

தோழர் மொழிபெயர்ப்பு சற்று கடினமாக இருக்கிறது google மொழிபெயர்ப்பு போல தெரிகிறது இன்னும் சற்று தெளிவாக இருந்தால் இந்த கட்டுரை படிப்பதற்கு எளிமையாக இருக்கும்